புரதம் நிறைந்த காய்கறிகள், உணவுகள், அசைவ உணவுகள், பழங்கள், காய்கறிகள், மற்றும் கொட்டைகள் போன்ற புரதம் நினைந்த உணவுகள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
புரதம் நிறைந்த உணவுகள் :
புரதம் பொதுவாக அனைத்து வகையான உணவுகளிலும் காணப்படுகிறது. ஆனால் சில உணவுகளில் அதிகமாகவும் சில உணவுகளில் மிகவும் குறைந்த அளவிலும் காணப்படுகிறது. மேலும் அசைவ உணவுகளில் காணப்படும் புரதம் நிறைவுற்ற புரதம் எனவும் சைவ உணவுகளில் காணப்படும் புரதம் முழுமையற்ற புரதம் இரு வகையாக உள்ளது., (புரதம் வகைகள், பயன்கள் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் )
புரதம் நிறைந்த அசைவ உணவுகள் :
100 கிராம் மாட்டு இறைச்சியில் சுமார் 25 முதல் 28 கிராம் வரை புரதம் உள்ளது.
ஒவ்வொரு 100 கிராம் கோழி இறைச்சியிலும் கிட்டத்தட்ட 27 கிராம் புரதம் உள்ளது.
ஒரு நடுத்தர அளவு முட்டையில் 5 முதல் 6 கிராம் புரதம் உள்ளது.
100 கிராம் சால்மன் மீனில் 20.4 கிராம் புரதம் உள்ளது, அட்லாண்டிக் சால்மன் 100 கிராமில் கிட்டத்தட்ட 23.8 கிராம் புரதம் உள்ளது.
நண்டு இறைச்சி 100 கிராமுக்கு சுமார் 19 கிராம் புரதம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. மேலும் கிட்டத்தட்ட 18.92 கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது.
பல இந்திய மாநிலங்களில் பரவலாகக் காணப்படும், இறால் 100 கிராமில் சுமார் 17.6 கிராம் புரதம் உள்ளது.
100 கிராம் பாலாடைக்கட்டியில் தோராயமாக 23 கிராம் புரதம் உள்ளது.
100 மில்லி பசும்பாலில் கிட்டத்தட்ட 3.5 கிராம் புரதம் உள்ளது.
புரதம் நிறைந்த சைவ உணவுகள் :
ஓட்ஸ் 100 கிராமிலும் சுமார் 17 கிராம் புரதம் உள்ளது.
100 கிராம் வெயிலில் உலர்த்திய தக்காளி பழத்தில் கிட்டத்தட்ட 14 கிராம் புரதத்தை வழங்குகிறது.
100 கிராம் பட்டாணியில் சுமார் 5 கிராம் புரதம் உள்ளது.
ஒரு அவுன்ஸ் பிஸ்தா பருப்பில் கிட்ட தட்ட 6 கிராம் புரதம் உள்ளது.
100 கிராம் பிஸ்தா பருப்பில் கிட்டத்தட்ட 20 முதல் 22 கிராம் புரோட்டின் உள்ளது.
100 கிராம் அல்லது அரை கப் சமைத்த பருப்புகளிலும் சராசரியாக 9 கிராம் புரதம் உள்ளது.
புரதம் நிறைந்த பழங்கள் :
100 கிராம் கொய்யா பழத்தில் 2.6 கிராம் புரதம் உள்ளது. இது தினசரி மதிப்பில் 5 சதவீதம் ஆகும்.
100 கிராம் அவகாடோ அல்லது வெண்ணெய் பழத்தில் 2 கிராம் புரதம் உள்ளது. இது தினசரி மதிப்பில் 4 சதவீதம் ஆகும்.
100 கிராம் ஆப்ரிகாட் அல்லது சர்க்கரை பாதாமி பழத்தில் 1.4 கிராம் புரதம் உள்ளது. இது தினசரி மதிப்பில் 3 சதவீதம் ஆகும்.
100 கிராம் நாவல் பழத்தில் 1.4 கிராம் புரதம் உள்ளது. இது இது தினசரி மதிப்பில் 3 சதவீதம் ஆகும்.
100 கிராம் ராஸ்பெர்ரி பழத்தில் 1.2 கிராம் புரதம் உள்ளது. இது இது தினசரி மதிப்பில் 2 சதவீதம் ஆகும்.
100 கிராம் கிவி பழத்தில் 1.1 கிராம் புரதம் உள்ளது. இது இது தினசரி மதிப்பில் 2 சதவீதம் ஆகும்.
100 கிராம் வாழை பழத்தில் 1.1 கிராம் புரதம் உள்ளது. இது இது தினசரி மதிப்பில் 1 சதவீதம் ஆகும்.
100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 0.9 கிராம் புரதம் உள்ளது. இது இது தினசரி மதிப்பில் 1 சதவீதம் ஆகும்.
100 கிராம் கிருணி பழத்தில் 0.8 கிராம் புரதம் உள்ளது. இது இது தினசரி மதிப்பில் 1 சதவீதம் ஆகும்