பிலிம்பி பழம் நன்மைகள் மற்றும் தீமைகள்

0

பிலிம்பி பழம் அல்லது புலிமா பழம் பயன்கள், நன்மைகள், சத்துக்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

பிலிம்பி பழம் :

பிலிம்பி பழம் அல்லது புலிமா பழம் பெரும்பாலும் அனைவராலும் அறியாப் படாத ஒரு பழமாகவே உள்ளது. இது ஆங்கிலத்தில் பிளிம்பி என்று அழைக்கப்படுகிறது.

பிலிம்பி பழம்

புலிமா பழத்தின்  அறிவியல் பெயர் அவ்ர்ரோ பிளிம்பி (Averrhoa bilimbi) ஆகும். இது ஆக்சாலிடேசியா (Oxalidaceae) குடும்பத்தைச் சேர்ந்த பழ வகை தாவரமாகும்.

இது தமிழில் புளிமா என்றும் பிலிம்பி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சிலப்பகுதிகளில் இரும்பன் புலி, இலும்பி, பிலிபிலி, பிம்பிலி என்ற பெயர்களோடும் அழைக்கப் படுகிறது.

பிலிம்பி பழத்தில் உள்ள சத்துக்கள் :

பிலிம்பியில் அமினோ அமிலங்கள், சிட்ரிக் அமிலம், சயனிடின்-3-ஓ-எச்-டி-குளுக்கோசைடு, பினோலிக்ஸ் மற்றும் சர்க்கரைகள் போன்ற உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன. மேலும், பழுத்த பிலிம்பி பழத்தில் பின்வரும் ஊட்டச்சத்து கூறுகள் இருக்கலாம்:

பிலிம்பி பழம் பயன்கள் :

பிலிம்பி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

புளிமா பழம் வலுவான ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்றும் ஆய்வுகளில் தெரிய வ்ந்துள்ளன.

இதய நோய், நீரிழிவு, பக்கவாதம், புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க அல்லது வராமல் தடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒயின், வினிகர் மற்றும் ஊறுகாய் மற்றும் பிற உணவுகளில் புளிக்கு மாற்றாகவும் சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப் படுகின்றன. நாட்டின் அனைத்து வெப்பமான பகுதிகளிலும் வளர்கிறது.

புலிமா பழம் ஊறுகாய்களாகவும், சுவையூட்டிகளாகவும், சட்னியாகவும், பதப்படுத்தப்பட்டும் பயன்படுத்தப் படுகிறது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பாரம்பரிய சமையல்களில் சம்பல், கறிகள் மற்றும் சூப்களுக்கு புளிப்பு சுவை சேர்க்க பழம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் மீன், இறால் மற்றும் இறைச்சி போன்ற மாமிச வகை உணவுகளுடன்சேர்த்து சமைக்கும் போது சுவையை அதிகரிக்கிறது.

இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் சில கிராமப்புற பகுதிகளில் புலிமா பழம் பச்சையாக உண்ணப்படுகிறது.

மேலும் தற்போது பல நாடுகளில் நவீன உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

பிலிம்பி பழத்தை குளிர் சாதனப்க பெட்டியில் ஒரு வாரம் வரை சேமித்து பயன்படுத்தலாம்.

பிலிம்பி பழம் நன்மைகள் :

இரத்த அழுத்தம் :

பிலிம்பி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரோட்டீன்கள், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புதமான இயற்கை மருந்து என்று சொல்லப்படுகிறது.

பிலிம்பி பழம் உட்கொள்வது நரம்புகள், நுண்குழாய்கள், தமனிகள் மற்றும் இதய தசைகளை தளர்த்தி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த சர்க்கரை :

பிலிம்பி பழங்கள் உடலின் இன்சுலின் செயல்பாட்டை சீராக்கி மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உணவுக்குப் பிறகு இரத்த குளுக்கோஸ் திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது. எனவே, இது நீரிழிவு அறிகுறிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இருமல் மற்றும் சளி :

புலிமா பழத்தில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்கு வித்து பலப் படுத்துகிறது.

இதன் மூலம் பருவகால மாற்றங்கள் மற்றும் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கு எதிராக செயல் படும் சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

மூல நோய் :

புலிமா பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட டெர்பென்ஸ் மற்றும் டானின்கள் உள்ளன.

இது மூல நோயால் ஏற்படும் ஆசனவாய் மற்றும் மலக்குடலின் நரம்புகளில் வீக்கத்தைக் குறைப்பதில் உதவுகிறது.

மேலும், பிலிம்பி செடியின் இலைச் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வலி, இரத்தப்போக்கு மற்றும் வீக்கத்தை சரி செயயும்.

எலும்பு ஆரோக்கியம் :

பிலிம்பி இலையில் கனிசமான அளவு கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்பின் அடர்த்தியை மேம்படுத்தி உடலில் உள்ள எலும்புக்கூட்டின் கட்டமைப்பைப் பலப்படுத்துகிறது.

பிலிம்பி பழம் தீமைகள் :

பிலிம்பி பழம் ஓரே நேரத்தில் அதிக அளவு சாப்பிடுவது அதன் அமிலத்தன்மை காரணமாக, அஜீரணம், நெஞ்செரிச்சல், பிற இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.

பிலிம்பி பழத்தில் இயல்பாகவே ஆக்ஸாலிக் அமிலம் அதிகமாக உள்ளது. எனவே தொடர்ந்து அதிக அளவில் உட்கொண்டால், சிறுநீரகங்களில் கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் படிந்து, நாளைடைவில் இறுதியில் கடுமையான சிறுநீரக செயலிழப்பை தூண்ட வாய்ப்புகள் உள்ளன.