Homeசத்துக்கள்தாதுக்கள்பொட்டாசியம் நிறைந்த உணவுகள் நன்மை, தீமைகள்

பொட்டாசியம் நிறைந்த உணவுகள் நன்மை, தீமைகள்

பொட்டாசியம் நன்மைகள், பயன்கள், அதிகம் உள்ள உணவுகள், குறைபாடு அறிகுறிகள், பக்க விளைவுகள் மற்றும் பல…

பொட்டாசியம் :

பொட்டாசியம் ஏழு அத்தியாவசிய மேக்ரோமினரல்களில் ஒன்றாகும். உடலில் நடக்கும் முக்கிய செயல்முறைகளை கட்டுப்படுத்த மனித உடலுக்கு பொட்டாசியம் தேவைப்படுகிறது.

சிறுநீரகங்கள், இதயம், தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் மூலம் செய்திகளை அனுப்புவதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.

பொட்டாசியம் நன்மைகள்

பொட்டாசியம் என்பது உடலின் அனைத்து திசுக்களுக்கும் தேவையான ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இது எலக்ட்ரோலைட் என்று குறிப்பிடப்படுகிறது.

ஏனெனில் இது பல்வேறு செல் மற்றும் நரம்பு செயல்பாடுகளை செயல்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.

மேலும் தசைகள் சுருங்க உதவும் மற்றும் இரத்த அழுத்தத்தை சமநிலை படுத்துவதிலும் உதவுகிறது.

பொட்டாசியம் தினசரி தேவை :

பொட்டாசியம் தினசரி தேவை

த யூ.எஸ் டையடரி ரெஃபரன்ஸ் (The U.S. Dietary Reference) தினசரி தேவைக்கான பொட்டாசியத்தின் அளவை (RDA) நிறுவுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறுகிறது.

இருப்பினும், நேஷனல் அகாடமி ஆஃப் மெடிசின் (National Academy of Medicine) தினசரி தேவைக்கான போட்டாசியம் அளவை நிறுவியுள்ளது.

பொட்டாசியம் பயன்கள் :

இரத்த அழுத்தம் :

உடலில் அதிக சோடியம் அளவு இருப்பது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும். ஆனால் பொட்டாசியம் உடலில் உள்ள சோடியத்தை அகற்ற உதவுவதன் மூலம் இந்த ஆபத்தை குறைக்கிறது.

மேலும் இது இரத்த நாளங்களின் சுவர்களை தளர்த்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

போதுமான அளவு பொட்டாசியத்தை உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைத் குறைக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.

இதய பாதுகாப்பு :

அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த சோடியம் இருந்தால், இருதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை குறைக்க உதவும்.

கால்சியம் உறிஞ்சும் திறன் :

ஆரோக்கியமான நபர்களில், பொட்டாசியம் குறைபாடு கால்சியம் மீண்டும் சிறுநீரகத்தால் உறிஞ்சப் படும் திறனைத் தடுக்கலாம்.

சிறுநீரகங்களில் காணப்படும் அதிக கால்சியம் அளவு சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.

இருப்பினும், சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு அதிக அளவு பொட்டாசியம் உட்கொள்வது மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

தசை செயல்பாடு :

தசைச் செயல்பாட்டைச் செயல்படுத்த  செல்களுக்குள் போதுமான பொட்டாசியமும் செல்களுக்கு வெளியே போதுமான அளவு சோடியமும் தேவை.

சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவுகள் சமநிலை தவறினால் தசை பலவீனம் அல்லது பிடிப்பு ஏற்படலாம்.

மேலும் இவை செல்களுக்குள் திரவ அளவை பராமரிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொட்டாசியம் குறைபாடு :

அதிகப்படியான பொட்டாசியத்தை சிறு நீர் மூலம் வெளியேற்றுவதன் மூலம் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவை கட்டுப்படுத்துகின்றன.

மேலும் மலம் மற்றும் வியர்வை மூலமாகவும் உடல் பொட்டாசியத்தை வெளியேறுகிறது.

மேலும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் டையூரிடிக்ஸ் போன்ற நோய்களும் அதிக நீரிழப்பு காரணமாக பொட்டாசியம் குறைபாட்டை ஏற்படுத்தும்.

மேலும் வயிற்றுப்போக்கு மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கூடிய குடல் அழற்சி நோய்கள் (கிரோன் நோய், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி) உள்ளவர்களிடமும் பொட்டாசியம் குறைபாடு காணப்படுகிறது.

பொட்டாசியத்தின் குறைபாடு உணவு முறைகளால் ஏற்படுவது அரிதாகும். ஏனெனில் இது பல உணவுகளில் காணப்படுகிறது.

இருப்பினும் போதிய அளவு உட்கொள்ளாதது அதிக வியர்வை, டையூரிடிக் பயன்பாடு, மலமிளக்கியின் துஷ்பிரயோகம் அல்லது கடுமையான குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை விரைவாக ஹைபோ கலீமியா என்று சொல்லப்படும் பொட்டாசியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

மேலும் மெக்னீசியம் குறைபாடும் ஒரு காரணம் ஆகும். ஏனெனில் சிறு நீரகங்களுக்கு பொட்டாசியத்தை மீண்டும் உறிஞ்சுவதற்கும் மெக்னீசியம் அவசியம் ஆகும்.

பொட்டாசியம் குறைபாடு அறிகுறிகள் :

  • சோர்வு
  • தசைப்பிடிப்பு
  •  பலவீனம்
  • மலச்சிக்கல்
  • தசை முடக்கம் மற்றும்
  • ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

பொட்டாசியம் அதிகரிப்பு :

இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருப்பது ஹைபர் கேமியா எனப்படும்.

பொதுவாக சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியத்தை சிறுநீர் மூலம் திறம்பட வெளியேற்றும். இருப்பினும், சில உடல் நல கோளாறுகள் ஹைபர் கேமியாவுக்கு வழிவகுக்கும்.

சிறுநீரக நோய், உடலில் பொட்டாசியத்தை தக்கவைக்கும் மருந்துகளை உட்கொள்வது (என்எஸ்ஏஐடிகள் உட்பட), அல்லது பொட்டாசியத்தின் அளவு நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது (தினமும் 4,700 மி.கி.க்கு மேல்) போன்றவை ஹைப்பர்கேமியா நிலைக்கு வழிவகுக்கும்.

பொட்டாசியம் அதிகம் அறிகுறிகள்:  

  • பலவீனம்,
  • சோர்வு
  • குமட்டல்
  • வாந்தி
  • மூச்சு திணறல்
  • நெஞ்சு வலி
  • இதயத் துடிப்பு,
  • ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

பொட்டாசியம் நிறைந்த உணவுகள் :

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்
  • 100 கிராம் அவகேடோ பழம் 485 மில்லி கிராம் பொட்டாசியத்தை கொண்டுள்ளது.
  • 100 கிராம் பருப்பு வகைகளில் உள்ள பொட்டாசியத்தின் அளவு 369 மில்லி கிராம் ஆகும்.
  • 100 கிராம் வாழைப் பழத்தில் 358 மில்லி கிராம் இந்த கனிமம் உள்ளது.
  • 100 கிராம் காளானில் 318 மில்லி கிராம் இந்த தாது உள்ளது.
  • 100 கிராம் இளநீரில் 250 மில்லி கிராம் பொட்டாசியத்தை கொண்டுள்ளது.
  • 100 கிராம் பச்சை பட்டாணியில் 244 மில்லி கிராம்  உள்ளது.
  • 100 கிராம் தர்பூசணி பழத்தில் 112 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular