பூசணி விதை நன்மைகள், சத்துக்கள் மற்றும் தீமைகள்

0

பூசணி விதை நன்மைகள், பூசணி விதையில் உள்ள சத்துக்கள், அதிக அளவில் உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பூசணி விதை தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

பூசணி விதை

பூசணி விதைகள் என்பது பூசணிக்காயின் உள்ளே காணப்படும் விதைகள் ஆகும். அவை புரதம், நிறைவுறா கொழுப்பு, நார்ச்சத்து, மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் பல ஊட்டச் சத்துக்களை வழங்குகின்றன.

பூசணி விதை

பூசணி விதைகளை வறுத்து ஒரு சிற்றுண்டியாகவோ அல்லது மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ உண்ணலாம்.

பூசணி விதை நன்மைகள் :

பூசணி விதைகள் நன்மைகள் முழுவதும் பெற தினமும் 10 கிராம் அளவிலாவது சாப்பிட்டு வரவேண்டும்.

பூசணி விதை ஊட்டச் சத்து குறைபாட்டைப் போக்குவதில் உதவுகிறது. மேலும் சில பூசணி விதை நன்மைகள் பின்வருமாறு

இதய ஆரோக்கியம் :

பூசணி விதைகள் உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.

இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்தை பல்வேறு கோளாறுகளில் இருந்து பாதுகாக்கிறது.

பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் மற்றும் நார்ச் சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் ட்ரை கிளிசரைடுகளையும் குறைக்கிறது.

மேலும் இந்த விதைகளை உண்பது இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

இரத்த சர்க்கரை

பூசணி விதைகளில் உள்ள மக்னேசியம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

எனவே நீரிழிவு நோயாளிகள் உணவில் பூசணி விதைகளை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

உடல் எடை குறைய :

பூசணி விதைகளில் கனிசமாக உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து பசியைக் குறைத்து நீண்ட நேரம் நிறைவாக உணரவைத்து, உணவு உட்கொள்ளல் அளவைக் குறைப்பதன் மூலம் அதிகப்படியான கலோரிகள் உடலில் சேர்வதைத் தடுத்து உடல் எடை குறைவதில் உதவுகிறது.

சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் :

பூசணி விதைகளில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் காரணமாக பூசணி விதைகள் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இந்த பிரீ ரேடிக்கள் செயல்முறை பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

புற்றுநோய் தடுப்பு :

பூசணி விதைகளில் உள்ள ஆண்டிஆக்சிடன்ட்கள் இரைப்பை, மார்பகம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

மேலும் பூசணி விதைகளில் உள்ள கரோட்டினாய்டுகள் புரோஸ்டேட் கேன்சர் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

இந்த விதைகளில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது.

வைட்டமின் இ சிறந்த ஆக்சிஜனேற்றியாகும். இது செல்களில் ஏற்படும் பிரீ ரேடிக்கல்களை நீக்கி செல்களை பலப் படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் துத்தநாகம் ஒவ்வாமை மற்றும் நோய்க்கிருமிகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

விந்தணு ஆரோக்கியம் :

பம்கின் விதைகளில் நிறைந்துள்ள துத்தநாகம் ஆண்களின் கருவுறுதல் திறனை மேம்படுத்துகிறது.

இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது மேலும் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பதில் உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்

பூசணி விதையில் உள்ள மக்னீசியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் நல்லதாகும்.

இது எலும்புகளை வலிமைப் படுத்தி எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அபாயங்களைத் குறைப்பதில் உதவுகிறது.

மேலும் மெக்னீசியம் குறைபாடு உடலால் கால்சியம் உணவுகளின் மூலம் உறிஞ்சப் படுவதைக் குறைக்கிறது.

ஆழ்ந்த தூக்கம் :

பம்கின் விதையில் செரோடோனின் மற்றும் மெலடோனின் அமினோ அமிலங்களின் முன்னோடியான டிரிப்டோபான் எனும் அமினோ அமிலம் உள்ளது.

செரோடோனின் மற்றும் மெலடோனின் இரண்டு அமினோ அமிலங்களும் ஆழ்ந்த தூக்கத்தைத் தூண்ட உதவுகின்றன.

பூசணி விதை தீமைகள் :

பூசணி விதைகள் ஊட்டச் சத்து நிரம்பியுள்ளதால் உடலுக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது. அதே சமயம் அளவுக்கு அதிகமாக உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. சில பூசணி விதை தீமைகள் பின்வருமாறு

ஜீரண கோளாறு :

பூசணி விதைகளை அளவுக்கு அதிகமாக உண்பதால் வயிற்று வலி, வாய்வு, வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.

உடல் எடை அதிகரிப்பு :

இதில் நிறைந்துள்ள அதிக கலோரிகள் காரணமாக, அவற்றை அதிக அளவில் தினமும் சாப்பிடுவது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

இரத்த சர்க்கரை சரிவு :

பூசணி விதைகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகள் மிதமான அளவே கவனத்துடன் உண்ண வேண்டும்.

ஒவ்வாமை :

அரிதாக சிலருக்கு பூசணி விதைகளை உண்பது ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தலாம். நட்ஸ் வகைகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் பூசணி விதையை தவிர்ப்பது நல்லது.