பூங்கர் அரிசி சத்துக்கள் மற்றும் நன்மைகள்

0

பூங்கர் அரிசி

பூங்கர் அரிசி தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பிரபலமான பழங்கால பழுப்பு அரிசி வகைகளில் ஒன்றாகும்.

பூங்கார் அரிசி

இந்த அரிசி கடுமையான வானிலை மற்றும் கடும் வெள்ளத்தையும் தாங்கும் பண்பு கொண்டது. இது பழங்காலத்தில் அருபாதம்கொடை என்று அழைக்கப்பட்டது. காலத்தில் பூங்கர் அரிசி என்று அழைக்கப்படுகிறது.

இது மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒற்ற தோற்றத்தில் காணப்படுகிறது.

நவீன அரிசி ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பாரம்பரிய அரிசி வகைகள் அழிந்து வந்தாலும் மீண்டும் அவை அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பலரால் பயன்படுத்தப் படுகின்றன.

பூங்கர் அரிசி நன்மைகள்:

சமீப காலங்களில் அதிகம் வாங்கப்பட்ட ஆர்கானிக் அரிசி வகைகளில் இதுவும் ஒன்றாகும். அத்தகைய பூங்கார் அரிசி நன்மைகள் பின்வருமாறு

நுண்ணூட்டச்சத்துக்கள் :

பூங்கர் அரிசியில் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

எனவே, உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கிய செயல்பாடுகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் பெறலாம்.

தாதுச் சத்துக்கள் :

எளிதாக கிடைக்கும் நவீன வகை அரிசிகளுடன் ஒப்பிடும் போது பூங்கார் அரிசி வகையில் கனிசமான அளவு தாதுக்கள் உள்ளன.

பூங்கர் அரிசியில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் மொலேபிடினம் ஆகிய தாதுச் சத்துக்கள் உள்ளன.

இவை , உடல் ஒட்டுமொத்த செயல் பாடு மற்றும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது ஆகும்.

ஆன்டிஆக்சிடண்ட்கள் :

பூங்கர் அரிசியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதிலுள்ள அத்ரோசயானின்கள் ஆகும். இது ஒரு சிறந்த ஆண்டிஆக்சிடண்ட் ஆகும்.

ஆன்டிஆக்சிடண்ட்கள் உடலின் ஆரோக்கிய சீர்கேட்டுக்கு ஒரு காரணமாக சொல்லப்படும் செல் சேத்தத்தைத் தடுக்கிறது.

ஹீமோகுலோபின் :

மற்ற நவீன வகை அரிசிகளை விட பூங்கர் அரிசியில் சற்று அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.

இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும் பராமரிக்கவும் உதவுகிறது.

குறைந்த ஹீமோகுளோபின் அளவு உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மற்ற நவீன வகை அரிசிகளை விட இது நல்லது.

நோய் எதிர்ப்பு :

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் பூங்கார் அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது உடலுக்கு வலிமையை அளிக்கிறது மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கிறது

இரத்த கொழுப்பு :

உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது இரத்த ஓட்டத்தை தடை செய்து, இறுதியில் இறுதியில் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கு வழி வகுக்கும்.

பூங்கார் அரிசயில் நார்ச் சத்து இருப்பதால் அதை உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்பின் ஒட்டுமொத்த அளவைக் குறைக்க உதவும். இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

மலச் சிக்கல்

குறைவான நார்ச்சத்து மற்றும் நீர்ச் சத்து மலச் சிக்கலுக்கு காரணமாக அமைகிறது. பூங்கார் அரிசியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்கி செரிமானத்தில் உதவுகிறது.

நச்சுக்களை நீக்குகிறது :

உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையை நீக்குவது பூங்கர் அரிசியின் நன்மைகளில் ஒன்றாகும்.

இதில் காணப்படும் ஆந்தோசயனின் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது.

உடல் எடை குறைப்பு :

பூங்கார் அரிசி மற்ற அரிசி வகைகளை விட உடல் எடையை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

இதில் உள்ள நார்ச் சத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கும் செயல் முறையை துரிதப்படுத்துகிறது.

பெண்களுக்கு நல்லது :

பூங்கார் அரிசி பெண்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இது ஹார்மோன் அளவை பராமரிப்பதிலும் கட்டுப் படுத்துவதிலும் உதவுவதாக கூறப்படுகிறது.

மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்கவும் மற்றும் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்காகவும் பூங்கர் அரிசியை சாப்பிடுவது நல்லது என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.