Homeஉணவுகள்காய்கறிகள்பூண்டு நன்மைகள், சத்துக்கள் மற்றும் தீமைகள்

பூண்டு நன்மைகள், சத்துக்கள் மற்றும் தீமைகள்

பூண்டு நன்மைகள், மருத்துவ பயன்கள் அதிக அளவு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பூண்டு தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பூண்டு :

பூண்டு அறிவியல் பெயர் அல்லியம் சடிவம் ஆகும். இதன் பூர்வீகம் மத்திய ஆசியா நாடுகள் ஆகும். பூண்டு உற்பத்தியில் சீனா, இந்தியா, பங்களா தேசம் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

பூண்டு

இந்திய அளவில் ராஜஸ்தான், உத்தர பிறதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் பூண்டு அதிக அளவில் பயிரிடப் படுகின்றன.

பூண்டில் உள்ள சத்துக்கள் :

பூண்டு வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) இன் சிறந்த மூலமாகும்.

இது மாங்கனீசு, செலினியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இது தவிர, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் தாமிரம் உள்ளிட்ட பிற தாதுக்ளும் உள்ளது.

பூண்டின் உள்ள மூலப் பொருளான அல்லிசின் பல மருத்துவ நன்மைகளுக்கு காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது.

பூண்டின் தனித்துவமான மனம் மற்றும் சுவைக்கு காரணம் அதிலுள்ள சல்பர் சேர்மமான அலிசின் காரணம் ஆகும்.

இருப்பினும் பூண்டை சமைப்பது சில மருத்துவ குணங்களை தடுக்கிறது என்று கருதப்படுகிறது

பூண்டு நன்மைகள் :

பூண்டு மருத்துவ பயன்கள், சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பழங்காலத் தொட்டே உணவில் சேர்க்கப்படுகிறது.

பூண்டு நன்மைகள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன.

இதய ஆரோக்கியம் :

பூண்டு மற்றும் பூண்டு சப்ளிமெண்ட்ஸ் செல் சேதத்தைத் தடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சில சேர்மங்கள் பிளேட்லெட்டுகளின் ஒட்டும் தன்மையைக் குறைப்பதாகக் தெரிய வந்துள்ளது.

மேலும் இது இரத்தம் உறைதல் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால் மாரடைப்பு வரும் வாய்ப்பை குறைக்கிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது :

அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களைத் தடுக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பூண்டில் உள்ளன.

இவை இரத்த நாளங்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. ( )

மேலும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் செல்களுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது.

பூண்டு நுரையீரல் புற்றுநோய் வரும் அபாயத்தை 44 சதவீதம் குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ( ).

புகைப்பிடிப்பவர்கள் கூட பச்சை பூண்டை உட்கொள்வதன் மூலம் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை 30 சதவீதம் குறைக்க முடியும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொழுப்பை குறைக்கிறது : 

பூண்டு சாப்பிடுவது லிப்போபுரோட்டீன் கொழுப்பு (LDL-C) மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

தினமும் அரை முதல் ஒரு பல் பூண்டு வரை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை சுமார் பத்து சதவீதம் குறைக்கிறது.

பூண்டு சப்ளிமெண்ட்ஸ் மொத்த மற்றும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. (... )

இரத்த அழுத்தம் : 

பூண்டு இரத்த ஓட்டத்தை எளிதாக்க உதவுகிறது. பல ஆய்வுகளில் பூண்டு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது இரத்த அழுத்தம் 10 சதவீதம் குறைக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. (... )

சளி காய்ச்சல் : 

பூண்டு மருத்துவ பயன்கள் பலவற்றில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவது ஆகும் ( ... ). மேலும் சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கிறது.

தினசரி பூண்டு அல்லது பூண்டு சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது சளி, காய்ச்சல் போன்ற நோகளை 63 சதவீதம் குறைக்கிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

காய்ச்சலின் அறிகுறிகள் ஐந்து நாட்களில் இருந்து ஒன்றரை நாளாகக் குறைக்கப்பட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ( )

மூளை ஆரோக்கியம் : 

ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதம் முதுமைக்கு ஒரு காரணமாக அமைகிறது.

ஆனால் பூண்டு எஸ்-அல்லில் சிஸ்டைன் என்ற சக்தி வாய்ந்த ஆக்சிஜ னேற்றியை கொண்டுள்ளது.

இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மூளை பாதிப்பிலிருந்து பாதுகாப்பதிலும், மூளை வயதாகும்போது சிறப்பாக செயல்படுவதிலும் உதவுகிறது.

கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைத்து மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

மேலும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய் போன்ற மூளை கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. ( )

ஆற்றலை அதிகரிக்கிறது :

பழங்காலங்களில் செயல்திறனை அதிகரிக்கவும், உடல் உழைப்பு செய்யும் நபர்களின் சோர்வைக் குறைக்கவும் பூண்டைப் பயன்படுத்த பட்டு வந்தது.

பழங்கால ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்த பூண்டைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இப்போதும் சில நாடுகளில் தற்கால விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சியின் போது ஏற்படும் சோர்வைக் குறைக்க பூண்டை பயன்படுத்துகின்றனர்.

பெண்களுக்கு நல்லது :

மாதவிடாய் காலத்தில் பல பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது.

இது ஈஸ்ட்ரோஜனுடன் தொடர்புடைய எலும்பு ஆரோக்கியம் நிகழ்வுகளை பாதிக்கிறது.

பூண்டு உட்கொள்வது ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு உதவுவதன் மூலம் எலும்பு இழப்பை குறைக்கிறது.

பூண்டு மாதவிடாய் நேரத்தில் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

நச்சு நீக்கி : 

பூண்டில் உள்ள கந்தக கலவைகள் ஹெவி மெட்டல் நச்சுத் தன்மையினால் ஏற்படும் உறுப்பு சேதத்திலிருந்து பாதுகாப்பதாக சொல்லப் படுகிறது.

ஈயத்தை அதிகமாக பயன் படுத்தும் கார் பேட்டரி ஆலையில் பணியாற்றும் ஊழியர்களிடம் நான்கு வார கால ஆய்வில், பூண்டு இரத்தத்தில் உள்ள ஈய அளவை 19 சதவீதம் குறைந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும் தலைவலி மற்றும் இரத்த அழுத்தம் உட்பட நச்சுத் தன்மையின் பல அறிகுறி களையும்  குறைத்ததாக தெரிய வந்துள்ளது.

பூண்டு தீமைகள் :

பூண்டு சாப்பிடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வாய் துர்நாற்றம் பூண்டின் முக்கிய சில பக்க விளைவுகளில் ஒன்றாகும். பூண்டு தீமைகள் பின்வருமாறு

ஒவ்வாமை :

பூண்டு ஒவ்வாமை எதிர் செயல் பாட்டையும் சிலருக்கு ஏற்படுத்துகிறது.

வயிற்று போக்கு :

பூண்டை அதிகமாக உட்கொள்வது வாய்வு, வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். ( )

கல்லீரல் நச்சு :

பூண்டை அளவுக்கு அதிகமாக உண்பது கல்லீரலை பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பச்சை பூண்டில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருந்தாலும், அதிக அளவு உட்கொள்வது கல்லீரலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். ( )

இரத்த போக்கு :

இரத்தப்போக்கு கோளாறு உடையவர்கள் அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் பூண்டு அதிக அளவு சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும். ( )

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular