பூனைக்காலி விதை நன்மைகள், தீமைகள் மற்றும் பயன்கள்

0

பூனைக்காலி விதை நன்மைகள், மருத்துவ பயன்கள் மற்றும் பூனைக்காலி விதை தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

பூனைக்காலி விதை

பூனைக்காலி அறிவியல் பெயர் முக்குனா ப்ரூரியன்ஸ் ஆகும். இது ஆங்கிலத்தில் வெல்வெட் பீன்ஸ் என்றும், சமஸ்கிருததத்தில் காபிகச்சு என்றும் அழைக்கப்படுகிறது.

பூனைக்காலி விதை

இது பொதுவாக நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும், பாலியல் ஆற்றலை ஆதரிக்கவும், இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

பூனைக்காலி விதை நன்மைகள் :

பூனைக்காலி விதையில்  புரதம், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், ஸ்டார்ச் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கனிசமான அளவு உள்ளன.

பூனைக்காலி விதை பொடி

பூனைக்காலி தாவரத்தின் இலை, விதை, தண்டு என அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. இவை வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு, வலிப்பு எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

பூனைக்காலி விதை நன்மைகள் பின்வருமாறு

செரிமானஆரோக்கியம் :

பூனைக்காலி ஜீரண உறுப்புகளின் மென்மையான தசை சுருக்கங்களை சீராக்கி, மலம் எளிதாக வெளியேறச் செய்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

எல் டோபா சிறந்த மூலமாகும்

எல் டோபா என்பது நரம்பியக்கடத்தி டோபமைனின் முன்னோடியாகும். இது மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்தில் உதவுகிறது. நடத்தை, அறிவாற்றல், தூக்கம், மனநிலை,நினைவகம் மற்றும் கற்றல் ஆகிய செயல்பாடுகளில் டோபமைன் முக்கிய பங்கு வகிக்கிறது.

பார்க்கின்சன் நோய் :

பூனைக்காலி விதைகளில் இயற்கையாகவே லெவோடோபா எனப்படும் எல்-டோபா நான்கு முதல் ஏழு சதவிகிதம் என்ற விகிதத்தில் உள்ளது. இது ஹாலுசினோஜெனிக் டிரிப்டமின்கள், பீனால்கள் மற்றும் டானின்கள் போன்ற கலவைகளையும் கொண்டுள்ளது. பூனைக்காலி விதைகளில் உள்ள எல்-டோபா காரணமாக பார்கின்சன் நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.

விந்தணு எண்ணிக்கை :

பூனைக்காலி விதையில் உள்ள ஆல்கலாய்டுகள் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை புத்துயிர் பெறச் செய்வதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் உதவுகிறது.

விந்தணு உருவாக்கத்தின் முழு செயல்முறை, விந்தணு உருவாக்கம், பொதுவாக டெஸ்டோஸ்டிரோன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்துவதன் மூலம் விந்தணுக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.

இனப்பெருக்க திறன்

பூனைக்காலி விதை இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த டானிக் ஆகும். இது ஆன் பெண் என இருவருக்கும் கருவுறுதல், ஆரோக்கியமான விந்து மற்றும் கருமுட்டை, இனப்பெருக்க உறுப்புகளின் சரியான செயல்பாடு போன்றவற்றை மேம்படுத்துவதில் உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது :

பூனைக் காலி விதையில் உள்ள லெவோடோபா, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு சிகிச்சை அளிப்பதிலும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது :

பூனைக்காலி விதையில் உள்ள ப்ரூரினினைன் போன்ற அல்கலாய்டுகள், இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

வளர்ச்சி ஹார்மோன்களை மேம்படுத்துகிறது :

பூனைக்காலி விதை வளர்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்கிறது. டோபமைன் பிட்யூட்டரி சுரப்பி மூலம் வளர்ச்சி ஹார்மோனான சோமாடோட்ரோபின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது எலக்ட்ரோலைட் சமநிலை மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குப் படுத்துகிறது.

பூனைக்காலி விதை தீமைகள்

பூனைக்காலி விதை மருத்துவ குணங்கள் காரணமாக ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டாலும் சில தீமைகளும் உள்ளன.

பூனைக்காலி விதை தீமைகள் பின்வருமாறு

பூனைக்காலி காய்களின் முடி வாய்வழியாகவோ அல்லது மேற்பூச்சாகப் பயன்படுத்தவோ கூடாது. ஏனெனில் இது எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பூனைக்காலி விதை பாதுகாப்பானதா என்பது பற்றி போதுமான தகவல்கள் இல்லை.

ஏதேனும் உடல் நலக் கோளாறு உடையவர்கள் பூனைக்காலி பயன்படுத்தும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுவாக இருதய நோய், நீரிழிவு நோய், இரத்தச் சர்க்கரைக் குறைவு, கல்லீரல் நோய், மனநோய், அல்சர் போன்ற உடல் நலக் கோளாறு உடையவர்களுக்கி பூனைக் காலி பரிந்துரைக்கப் படுவதில்லை.

பூனைக்காலி விதை இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளில் மாறுதலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு பூனைக்காலி உண்பதை நிறுத்த வேண்டும்.