காலிபிளவர் நன்மைகள் மற்றும் தீமைகள்

0

காலிபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் காலி பிளவர் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

காலிபிளவர் :

காலிபிளவர்  அறிவியல் பெயர் பிராசிகா ஒலரேசியா ஆகும். இது ஆங்கிலத்தில் காலிபிளவர் (Cauliflower) என்று அழைக்கப் படுகிறது.

காலி பிளவர் நன்மைகள்

இது தமிழில் பொதுவாக காலிபிளவர் என்றே அழைக்கப்பட்டலும் கிராமத்து பகுதிகளில் பூக்கோசு என்று அழைக்கப்படுகிறது

காலிபிளவர் நன்மைகள் :

காலிபிளவர் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. காலிபிளவர் உணவில் கூட்டு அல்லது சாம்பார், பொரியல் வடிவிலும் அதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். காலிபிளவர் நன்மைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

இதய ஆரோக்கியம் : 

காலிபிளவரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்துள்ள உணவு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

காலிஃப்ளவரில் உள்ள சல்போராபேன் என்ற சேர்மம் இரத்த அழுத்த அளவை கணிசமாக மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.

மேலும் காலிபிளாவரில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் இதய நோய்களைத் தடுக்கின்றன.

மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது : 

ஒரு முக்கியமான ஊட்டச்சத்தான கோலின் என்ற பி வைட்டமின் காலிஃபிளவரில் உள்ளது. இது மூளை ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது.

மேலும் வயது மூப்பு தொடர்பான நினைவாற்றல் குறைவையும் அல்சைமர்ஸ் போன்ற பிற நரம்பு கோளாறுகளை சமாளிக்க உதவுகிறது.

ஒவ்வாமை எதிர்ப்பு :

காலிஃப்ளவரில் பீட்டா கரோட்டின், குர்செடின், இலவங்க அமிலம் மற்றும் பீட்டா-கிரிப்டோக்சாண்டின் போன்ற உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

இவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன.

காலிஃப்ளவரில் உள்ள ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு கலவை இண்டோல் -3-கார்பினோல் ஆகும்.

இது வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மரபணு அளவில் செயல்படுகிறது.

மேலும் காலிபிளவரில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் அழற்சி நிலைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

எடை இழப்புக்கு உதவுகிறது :

காலிஃப்ளவரில் உள்ள சல்போராபேன், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவற்றுடன் சேர்ந்து எடை இழப்புக்கு உதவுகிறது.

உடல் செயல்பாடுகளின் போது எரிக்கப்பட்ட கொழுப்பின் அளவைத் தீர்மானிப்பதில் வைட்டமின் சி பெரும் பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

காலிஃபிளவரில் உள்ள குறைந்த அளவு கார்போஹைட்ரேட் காரணமாக எடை இழப்பிற்கு உதவுகிறது.

மேலும் காலிபிளாவரில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிப்பதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

மேலும் இதில் உள்ள ஒமேகா -3  லெப்டின் சுரப்பைத் தூண்டுகிறது. லெப்டின் என்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஹார்மோன் ஆகும்.

நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது : 

காலிஃப்ளவரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந் துள்ளன. இது முதல் கட்ட நச்சுத்தன்மை நீக்க செயல்முறைக்கு உதவுகிறது.

இது நச்சுகளை சிறிய துண்டுகளாக குறைக்கிறது. மேலும் அதன் சல்பர் கொண்ட கலவைகள் கட்டம் இரண்டாம் கட்ட நச்சுத்தன்மை நீக்க செயல் முறையை மேற்கொள்ள உதவுகிறது.

மேலும் காலிபிளவரில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் மற்ற நச்சு நீக்கும் நொதிகளையும் செயல்படுத்துகின்றன.

எலும்புகளை பலப் படுத்துகிறது : 

பொதுவாக வைட்டமின் கே குறைவாக உட்கொள்வது பெரும்பாலும் ஆஸ்டியோ போரோசிஸ் மற்றும் எலும்பு தொடர்பான நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஆனால் காலிஃபிளவரில் வைட்டமின் கே நிறைந்திருப்பதால் அது கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் கே சிறுநீர் மூலம் கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கிறது.

செரிமான ஆரோக்கியம் :

காலிஃப்ளவரில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

போதுமான அளவு நார்ச்சத்து உட்கொள்வது மலச்சிக்கல், குடல் அழற்சி நோய் மற்றும் டைவர்டிகுலிடிஸ் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.

நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயை கூட தடுக்கிறது. மேலும் காலிபிளவரில் உள்ள சல்போராபேன் வயிற்றின் உட்புறத்தில் பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதன் மூலம்  பாதுகாக்க உதவுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு :

காலிபிளவரில் உள்ள சல்போராபேன் கலவை புற்றுநோய் ஸ்டெம் செல்களைக் கொல்கிறது. மேலும் இது கட்டி வளர்ச்சியைக் குறைக்கிறது.

காலிஃப்ளவரில் உள்ள இந்த கலவை புரோஸ்டேட் புற்று நோயைத் தடுக்க உதவுவதாகக் கண்டறியப்பட்டது.

காலிஃபிளவரில் இண்டோல்ஸ் மற்றும் ஐசோதியோசயனேட்டுகள் உள்ளன.

இவை மார்பக, சிறுநீர்ப்பை, பெருங்குடல், கல்லீரல் மற்றும் நுரையீரலின் புற்றுநோய்களைத் தடுப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

காலிஃப்ளவரில் கரோட்டி னாய்டுகள் மற்றும் வைட்டமின்கள் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற பிற முக்கிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

இவை அனைத்தும் பல்வேறு வகையான புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஹார்மோன் சமநிலை :

காலிபிளவர் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகளை எடுத்துக்கொள்வது ஈஸ்ட்ரோஜனின் ஆரோக்கியமற்ற அளவைக் குறைத்து, ஹார்மோன்களின் சமநிலையைப் பராமரிக்கிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது : 

காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து அதிகமாக உட்கொள்வது இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை மேம்படுத்துகிறது.

காலிபிளவர் தீமைகள் :

காலிபிளவர் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அளவுக்கு அதிகமாக மற்றும் சமைக்கப் படாமல் பச்சையாக உண்ணும் பொழுது சில பக்க விளைவுகளும் தோன்றுகின்றன. காலிபிளவர் தீமைகள் பின்வருமாறு

ஒவ்வாமை :

சிலருக்கு காலிஃபிளவர் சாப்பிட்ட பிறகு ஒவ்வாமை எதிர்வினை ஏற்படலாம். காலிஃபிளவர் அலர்ஜியின் அறிகுறிகளில் தோல் அரிப்பு, சுவாச பிரச்சனைகள் மற்றும் வீக்கம் ஆகியவை அடங்கும். ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

ஹைப்போ தைராய்டிசம் :

காலிஃபிளவர் அதிக அளவில் உட்கொள்வது ஏற்கனவே இருக்கும் அயோடின் குறைபாடு உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் இது ஹைப்போ தைராய்டிசத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இருப்பினும், மனிதர்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தினமும் 5 அவுன்ஸ் சமைக்கப்பட்ட காலி பிளவர் நான்கு வார காலத்திற்கு சாப்பிடுவது தைராய்டு செயல்பாட்டில் எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் அளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

கீல்வாதம் :

பூக்கோசு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளுள் ஒன்று கீல்வாதம் ஆகும்.

பூக்கோசு அடிப்படையில் பியூரின்களைக் கொண்டுள்ளது. இது அதிக அளவில் உடலில் சேருவது கீழ் வாதம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுநீரக கற்கள் :

காலி பிளவரில் உள்ள பியூரின்கள் உடைந்து யூரிக் அமிலத்தை உருவாக்குகின்றன.

இது சிறுநீரகத்தில் குவிந்து பின்னர் சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன.

கீல்வாதம் பிரச்சனை அல்லது சிறுநீரக கல் இருந்தால், காலிபிளவர் சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும்.

வாயு மற்றும் வயிறு உப்புசம் :

காலிஃபிளவர், முட்டைக்கோஸ் காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது சிலர் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இந்த காய்கறிகளில் உள்ள கார்போஹைட்ரேட், கந்தகம் மற்றும் நார்ச் சத்துடன் சேர்ந்து செரிமானத்தின் போது முற்றிலுமாக உடைக்கப் படுவதில்லை.

எனவே, இதுபோன்ற செரிமான தொந்தரவுகளை தவிர்க்க பூக்கோசு பச்சையாக உண்பதை தவிர்க்க வேண்டும்.