பிஸ்தா நன்மைகள்,சத்துக்கள் மற்றும் தீமைகள்

0

பிஸ்தா நன்மைகள், மருத்துவ பயன்கள், அதில் உள்ள சத்துக்கள் அதிகமாக மற்றும் உட்கொள்வதால் விளையும் பக்க விளைவுகள், பிஸ்தா தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

பிஸ்தா பருப்பு :

பிஸ்தா கொட்டைகள் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மற்றும் தென்மேற்கு ஆசியாவில் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

பிஸ்தா

இன்று விற்கப்படும் பெரும்பாலான பிஸ்தாப் பருப்புக்கள் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்து வருகின்றன.

பிஸ்தாவில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் பிஸ்தாப் பருப்பில் உள்ள சத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைட்டமின்கள் :

தாதுச் சத்துக்கள் :

பிஸ்தா நன்மைகள்

பிஸ்தாப் பருப்பில் உடல் ஆரோக்கியத்திற்கு அவசிமான புரதம், நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை போதுமான அளவில் வழங்குகின்றன.

பிஸ்தா நன்மைகள் மற்றும் ஆரோக்கிய பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எடை இழப்புக்கு உதவுகிறது :

பிஸ்தா பருப்பு ஒரு அவுன்ஸில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. மேலும் கலோரிகளிலும் குறைவாக உள்ளது.

சுமார் 50 பிஸ்தாப் பருப்பு உட்கொண்டாலும் 160 கலோரிகள் உடலில் சேராது.  குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் காரணமாக எடை இழப்பை ஊக்கு விக்கின்றன.

இரத்தச் சர்க்கரையை குறைக்கிறது :

பிஸ்தாப் பருப்பு குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது.

எனவே அவை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்யும்.

எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லதாகும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப் படுத்துகிறது :

வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால், பிஸ்தா பருப்பு ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தையும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பராமரிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம் :

பிஸ்தா பருப்பு மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் சிறந்த மூலமாக இருப்பதால் நல்ல (HDL) கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவுகிறது.

பிஸ்தாக் கொட்டைகளில் உள்ள அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், கெட்ட (எல்டிஎல்) கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செல் சேதத்தைத் தடுக்கிறது :

பிஸ்தாக்கொட்டையில் வைட்டமின் ஈ, பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதப் படுத்தும் பிரீ ரேடிக்கல்களை அகற்றறுவதன் மூலம் இளமையோடு வைத்திருக்க உதவுகின்றன.

லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகிய ஆக்சிஜனேனேற்றிகள் மற்ற வகை பருப்புகளில் காணப்படுவதில்லை.

அவை வயது மூப்பால் ஏற்படும் மால்குலர் சிதைவு  தொடர்பான பார்வை இழப்பு அபாயங்களை குறைக்கின்றன.

குடல் ஆரோக்கியம் :

பாதாம், முந்திரி போன்ற பிற வகை கொட்டைகளைப் போலவே பிஸ்தாக் கொட்டைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மலச்சிக்கலை தடுப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

தோல் மற்றும் முடி ஆரோக்கியம் :

பிஸ்தாக் கொட்டையில் உள்ள பயோட்டின் காரணமாக இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அத்துடன் வைட்டமின் ஈ, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஹீமோகுளோபின் :

இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு ஹீமோகுளோபின் அவசியமாகும்.

பிஸ்தாவில் வைட்டமின் பி6 இருப்பதால், உடலில் ஹீமோகுளோபின் சிறப்பாகவும் வேகமாகவும் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.

பிஸ்தாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்திற்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகின்றன.

இது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இது நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானதாகும்.

மேலும் இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் நிரம்பி இருந்தால், மூளை சிறப்பாக செயல்படும் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சூரிய கதிர்கள் பாதுகாப்பு :

பிஸ்தா பருப்பில் உள்ள வைட்டமின் இ சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும் இது சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது.

அதே நேரத்தில் செல் சவ்வுகளைத் தாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது.

பிஸ்தா தீமைகள் :

எந்த ஒரு உணவையும் அதிகப்படியாக உண்ணும் பொழுது உடல் நலத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

அந்த வகையில் பிஸ்தா தீமைகள் சில சில பின்வருமாறு

எடை அதிகரிப்பு:

பிஸ்தா பருப்பில் அதிக கலோரிகள் உள்ளது. எனவே உடல் எடை குறைப்பில் உதவினாலும் அதிக அளவில் உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும்..

அதிக ஆக்சலேட்:

பிஸ்தாவில் ஆக்சலேட்டுக்கள் உள்ளன. எனவே ஏற்கனவே சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு சிறுநீரக கல் உருவாவதற்கு பங்களிக்கலாம்.

பூஞ்சை மாசுபாடு:

மற்ற நட்ஸ் வகைகளைப் போலவே, பிஸ்தாக்களிலும் பூஞ்சை மாசுபாடு ஏற்படுகிறது.இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மைக்கோடாக்சின்களை உருவாக்கும்.

இரைப்பை குடல் பிரச்சினைகள்:

அளவுக்கு அதிகமாக பிஸ்தா உண்பவர்ளுக்கு வயிறு உப்புசம், வாய்வு அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுகலாம்.

ஒவ்வாமை:

அரிதாக சிலருக்கு பிஸ்தாவுக்கு ஒவ்வாமை இருக்கலாம். இது அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம்