பைன் நட்ஸ் நன்மைகள், பயன்கள் மற்றும் அதில் அடங்கியுள்ள ஊட்ட சத்துக்கள் பற்றி கொடுக்கப் பட்டுள்ளது.
பைன் நட்ஸ் :
பைன் கொட்டைகள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவை.
பைன் நட் உலகம் முழுவதும் பல பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக உண்ணப்படுகின்றன.

பைன் நட்கள் முதலில் பயிரிடப் படாமல் காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டன. இதில் கிட்ட தட்ட 30 வகைகள் இருந்தாலும் அதில் நன்கு வகைகள் மட்டுமே பொதுவாக உண்ணப்படுவதாக சொல்லப்படுகிறது.
பைன் கொட்டை பயன்கள் :
புரதம் நிறைந்தது :
பைன் நட்ஸில் 10 முதல் 34 சதவீதம் புரதம் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ மற்றும் லுடீன் நிறைந்துள்ளன. இவை இரண்டும் கண்கள் ஆரோக்கியத்திற்கு உதவுவதாக அறியப்படுகிறது.
கலோரிகள் நிறைந்துள்ளன :
பைன் நட்களில் அதிக அளவு கலோரிகள் நிறைந்துள்ளன. 100 கிராம் உலர்ந்த கொட்டையில் சுமார் 673 கலோரிகள் உள்ளன. . அவற்றின் அதிக கலோரிக்கு காரணம் முக்கியமாக அதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் ஆகும்.
கொழுப்பை குறைக்கிறது :
கொட்டையில் ஒலிக் அமிலம் போன்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள “கெட்ட கொழுப்பை” குறைத்து “நல்ல கொழுப்பை” அதிகரிக்க உதவுகிறது.
பினோலெனிக் அமிலம் கல்லீரல் செயல்பாட்டை தூண்டி கெட்ட கொழுப்பு உறிஞ்சுதலை அதிகப் படுத்தி அளவை குறைப்பதாக சொல்லப்படுகிறது.
தமணி நோய் :
கனிசமான அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களைக் கொண்ட பைன் நட் கரோனரி தமனி நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சி ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் அவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பைட்டோ கெமிக்கல்கள், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்களைக் கனிசமான அளவு கொண்டுள்ளன
எடை இழப்பு :
பைன் கொட்டைகளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான ஒமேகா-6 கொழுப்பு அமிலம், பினோலெனிக் அமிலம் உள்ளது. சமீபத்திய ஆராய்ச்சி இவை பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எடை இழப்புக்கு உதவுவதாக சொல்லப்படுகிறது.
பினோலெனிக் அமிலம் குடலில் பசியை அடக்கும் என்சைம்களான கோலிசிஸ்டோகினின் மற்றும் குளுகோகன் போன்ற பெப்டைட்-1 போன்ற சேர்மங்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது.
வைட்டமின் இ மூலம் :
மற்ற நட்ஸ் வகைகளைப் போல் பைன் நட்களும் வைட்டமின் இ யின் சிறந்த மூலமாகும்; 100 கிராம் பைன் நட்டில் சுமார் 9.33 மி. கி வைட்டமின் ஈ உள்ளது. வைட்டமின் ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்களை அளித்து செல் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
பசயம் இல்லாதது :
பைன் நட்கள் பசையம் இல்லாத பருப்பு வகைகளில் ஒன்றாகும். எனவே இதில் செய்யப்பட்ட உணவு செழியாக் நோய் உடையவர்களுக்கு நல்லாதாகும்.
பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன :
பி வைட்டமின்களான தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம், வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) மற்றும் ஃபோலேட்டுகள் போன்ற வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். பொதுவாக பி வைட்டமின்ள் மனித உடலில் உள்ள செல்லுலார் அடி மூலக்கூறு வளர்சிதை மாற்றத்தில் என்சைம்களுக்கு இணை காரணிகளாக செயல்படுகின்றன.
மாங்கானீசு நிறைந்துள்ளது :
பைன் கொட்டையில் கனிசமான அளவில் மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் அடங்கியுள்ளன. 100 கிராம் கொட்டையில் சுமாட் 8.802 மி.கி அதாவது தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் சுமார் 383% மாங்கனீஸ் உள்ளது.
இதயத்திற்கு நலம் பயக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது.
வைட்டமின் டி வலுவான எலும்புகளை உருவாக்குவதில் உதவுகிறது.
வைட்டமின் சி அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உதவுகிறது..
இரும்புச் சத்து இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நல்லது.
புரோட்டீன் மற்றும் மெக்னீசியம் சிறந்த ஆற்றல் மூலமாக ஆக்குகிறது.