பேரிக்காய் நன்மைகள், மருத்துவ பயன்கள் அதிலுள்ள சத்துக்கள் மற்றும் பேரிக்காய் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
பேரிக்காய் :
பேரிக்காயின் அறிவியல் பெயர் பிரஸ் கம்யூனிஸ் (Pyrus communis L.) ஆகும். இது ஆங்கிலத்தில் பியர் ப்ரூட்ஸ் (Pear Fruits) என்று அழைக்கப்படுகிறது. பேரிக்காயின் பூர்வீகம் தென்கிழக்கு ஐரோப்பா ஆகும்.
பண்டைய கிரேக்க எழுத்தாளர் ஹோமர் பேரிக்காயின் இனிமையான சுவை காரணமாக “கடவுளின் பரிசுகள்” என்று விவரித்தார். ஆரம்ப கால ரோமானியர்கள் 50 வகையான பேரிக்காயை உருவாக்கி ஐரோப்பா முழுவதும் பயிரிட்டனர்.
உலக அளவில் பேரிக்காய் உற்பத்தியில் சீனா, அர்ஜண்டைனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடத்தில் உள்ளன.
இந்தியாவில் தோராயமாக 24 வகைகள் ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப் படுகிறது.
பேரிக்காயில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் பேரிக்காயில் 57 கலோரிகள் உள்ளன. மேலும் 0.1 கிராம் கொழுப்பு, 0.4 கிராம் புரதம் மற்றும் 15 கிராம் கார்போஹைட்ரேட், 9.8 கிராம் சர்க்கரை மற்றும் 3.1 கிராம் நார்ச் சத்து உள்ளது.
வைட்டமின்கள் :
100 கிராம் பேரிக்காயில் 4.3 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 0.12 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 4.4 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ உள்ளது.
தாதுச் சத்துக்கள் :
100 கிராம் பேரிக்காயில் 0.18 மில்லி கிராம் இரும்பு சத்து, 9.00 மில்லி கிராம் கால்சியம், 116 மில்லி கிராம் பொட்டாசியம், 12 மில்லி கிராம் பாஸ்பரஸ், 7 மில்லி கிராம் மக்னேசியம் உள்ளது.
பேரிக்காய் நன்மைகள் :
பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல உள்ளன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது :
பேரிக் காய் பழத்தில் உள்ள நார்ச்சத்து கரையாத பாலி சாக்கரைடு ஆகும்.
இது குடல் செயல் பாட்டை சீராக்கி உணவை குடல் வழியாகச் செல்வதை எளிதாக்குகிறது.
மேலும் பேரிக் காய் இரைப்பை மற்றும் செரிமான அமிலங்களின் சுரப்பையும் தூண்டுகிறது.
இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற குடல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
ஃப்ரீ ரேடிக்கல் செயல் பாட்டை குறைக்கிறது :
பேரிக் காய் பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் காப்பர் போன்ற தாதுக்களும் உடல் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் களுக்கு எதிராக போராடுகின்றன.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது :
பேரிக்காயின் உள்ள ஃபைபர் புற்றுநோய் உயிரணுக்களை அகற்றுகிறது. இதன் மூலம் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கிறது.
மாதவிடாய் நின்ற பிறகு, ஒரு நாளைக்கு ஒரு பேரிக்காய் உட்கொள்வது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :
பேரீக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் தாமிரம் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோய்களுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப் படுத்துகிறது.
ஆஸ்டியோ போரோ சிஸைத் தடுக்கிறது :
பேரிக் காய் பழம் உடலின் அமில சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து ஆஸ்டியோ போரோசிஸைத் தடுக்க உடலுக்கு தேவையான அளவு கால்சியத்தை வழங்குகிறது.
போரான் நிறைந்த பேரிக் காய் பழம் உடலால் கால்சியம் உறிஞ்சப் படுதலுக்கு அவசியம் ஆகும்.
ஆற்றலை அதிகரிக்கிறது :
பேரிக்காயில் உள்ள அதிக அளவு குளுக்கோஸ் உடனடி ஆற்றலை அளிக்கிறது. இது உடலால் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு ஆற்றலாக மாற்றப் படுகிறது.
பாலூட்டும் தாய் மார்களுக்கு சிறந்த உணவு :
பாலூட்டும் தாய் மார்களுக்கு பேரிக் காய் பழம் பரிந்துரைக் கப்படுகிறது.
ஏனெனில் இது ஹைபோ அலர்கெனி மற்றும் குறைந்த அமிலத் தன்மை உடைய பழம் ஆகும்.
எனவே இதனால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு குறைவு.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் :
பேரிக் காய் பழம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது கீல்வாதம் மற்றும் பிற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது :
பேரிக் காய் பழத்தில் குறைந்த கிளைசேமிக் குறியீடு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது.
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயைத் தடுக்கிறது.
மேலும் பேரிக்காயில் உள்ள சில ஃபிளவனாய்டுகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன.
இது ஆண்கள் மற்றும் பெண்களில் டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது.
குணப் படுத்துவதை துரிதப் படுத்துகிறது :
வைட்டமின் சி என்பது உடலின் பல்வேறு உறுப்புகளில் புதிய திசுக்களை ஒருங்கிணைக்க உதவும் ஒரு சத்து ஆகும்.
அஸ்கார்பிக் அமிலம் குணப்படுத்துவதை துரிதப்படுத்த உதவுகிறது. பேரிக்காய் பழத்தில் அதிக அளவு அஸ்கார்பிக் அமிலம் உள்ளது.
இது குணப்படுத்தும் செயல் முறையை துரிதப்படுத்த ஊக்கியாக செயல்படுகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது :
இரத்த சோகை மற்றும் பிற கனிம குறைபாடு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பேரிக்காய் மிகவும் சிறந்த உணவாக உள்ளது.
ஏனெனில் இதில் அதிக அளவு செம்பு மற்றும் இரும்பு உள்ளது. மேலும் இது இரத்த சிவப்பணுக்களின் தொகுப்புக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியம் :
பேரிக் காய் பழத்தில் வாசோலைட்டரான பொட்டாசியம் உள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
பேரிக்காய் தீமைகள் :
பேரிக்காய் அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
பேரிக் காய் பழம் நார்ச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். பேரிக்காயில் அதிக அளவு நார் சத்து உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்திற்கு மோசமானது ஆகும். ஏனெனில் இது ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப் படுவதில் குறுக்கீடு செய்கிறது.
மேலும் பேரிக்காயில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி வயிற்றுப்போக்கு, குமட்டல், நெஞ்செரிச்சல், வயிற்று வீக்கம் மற்றும் தலைவலி போன்ற உபாதைகளை ஏற்படுத்துகிறது.