பெக்கான் (அ) பீக்கன் கொட்டை சத்துக்கள் நன்மைகள் தீமைகள்

0

பெக்கான் கொட்டை

பெக்கான் கொட்டை பொதுவாக பெக்கன் கொட்டை என்றும் பீக்கன் பீக்கான் கொட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

பெக்கான் கொட்டை

தாவரவியல் பெயர் கர்யா இல்லினோய்னென்சிஸ் (Carya illinoinensis) ஆகும். இது வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட நட்ஸ் வகையாகும்.

பூர்வீக அமெரிக்க பழங்குடியினர் பெக்கன் கொட்டைகளை மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தினர்.

இன்று, பெக்கன் சமையலில் உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளில் ஒரு சுவையைக் கூட்டப் பயன்படுத்தப்படுகிறது.

பெக்கான் கொட்டையில் உள்ள சத்துக்கள் :

பீக்கன் கொட்டைகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு அவசிமான தாதுக்கள் நிறைந்துள்ளன.

மேலும் ரிபோஃப்ளேவின், நியாசின், தியாமின், ஃபோலிக் அமிலம், பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற உடல் செயல் பாடுகளுக்கு அவசிமான பி வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

எனவே தினமும் பீக்கான் கொட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுவது ஊட்ட சத்து குறைபாட்டை போக்க உதவும்.

பெக்கான் கொட்டை நன்மைகள் :

இதய ஆரோக்கியம் :

பெக்கன் கொட்டைகளில் ஒலிக் அமிலம் போன்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பீனாலிக் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன.

நேஷனல் பெக்கன் ஷெல்லர்ஸ் அசோசியேஷன் (National Pecan Shellers Association) கூற்றுப் படி, தினமும் சிறிதளவு பெக்கன் கொட்டைகளை உண்பது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து நல்ல கொழுப்புக்களை அதிகரிகிறது.

இதன் மூலம் பக்கவாதம் மற்றும் கரோனரி தமனி நோய் மற்றும் இதய நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது.

பெக்கன் கொட்டைகள் அடிக்கடி சாப்பிடுவது எடை குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி தெரிய வந்துள்ளது.

இதில் ரிபோஃப்ளேவின், நியாசின், தியாமின், பாந்தோத்தேனிக் அமிலம், வைட்டமின் பி-6 மற்றும் ஃபோலேட்டுகள் போன்ற பல முக்கியமான பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன.

அவை வளர்ச்சிதை மாற்றத்தைத் துரிதப் படுத்தி உடல் எடை குறைப்பதில் உதவுகிறது.

நீரிழிவு நோய்க்கு நல்லது :

2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடல் பருமனான பெரியவர்கள் பற்றிய ஆய்வில், நான்கு வாரங்களுக்கு பெக்கன் கொட்டைகளை கனிசமாக உணவில் சேர்த்துக் கொள்வது இன்சுலினை திறம்பட பயன்படுத்துவதற்கான உடலின் திறனை கணிசமாக மேம்படுத்துகிறது என்றும் கணையத்தில் உள்ள செல்கள் இன்சுலினை உற்பத்தி செய்யும் திறனை மேம்படுத்துகிறது என்றும் தெரியவந்துள்ளது.

எனவே நீரிழிவு நோயாளிகள் பெக்கன்களை உணவில் சேர்த்து வருவது நல்லது ஆகும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் :

பேக்கான் கொட்டைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. போதுமான அளவு மெக்னீசியம் நிறைந்த உணவை உட்கொள்வது உடலில் உள்ள அழற்சி அறிகுறிகளைக் குறைக்கிறது.

மேலும் தமனி சுவர்களில் வீக்கத்தைக் குறைத்து கீல்வாதம், அல்சைமர் நோய், இருதய நோய் மற்றும் பிற அழற்சி நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

மூளைக்கு நல்லது :

பெக்கன் கொட்டையில் வைட்டமின் ஈ கனிசமான அளவு உள்ளது. இது ஆக்சிஜனேற்றியாக செயல் பட்டு மூளையின் திசுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

இதன் மூலம் அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

மேலும் இதில் உள்ள தாமிரம் மற்றும் தியாமின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

தோலுக்கு நல்லது

பெக்கன் கொட்டைகளில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது இது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் தோலின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

மேலும் பெக்கன் கொட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் தோல் ஆரோக்கியம் மற்றும் தோல் நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.

பேக்கான் கொட்டைளில் எலாஜிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

அவை தோல் செல்களில் ஏற்படும் செல் சேதத்தைக் குறைத்து தோல் சுருக்கங்களைப் போக்கி இளமையோடு வைத்திருக்க உதவுகிறது.

முடிக்கு நல்லது :

பேக்கான் கொட்டைகள் எல்-அர்ஜினைனின் எனப்படும் ஒரு வகை அமினோ அமிலத்தின் சிறந்த மூலமாகும்.

எல்-அர்ஜினைன் தமனி சுவர்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, உடல் முழுவதும் மற்றும் உச்சந் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இந்த செயல் முறை முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

பெக்கான் கொட்டை தீமைகள் :

பெக்கன் கொட்டை சிலருக்கு வாந்தி, படை நோய், தொண்டை மற்றும் நாக்கு வீக்கம் போன்ற ஒவ்வாமை எதிர் வினையை ஏற்படுத்தலாம்.

மேலும் பீக்கான் கொட்டை ஹிஸ்டமைன் எனும் வேதிப்பொருளை வெளியிடுவதால் மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.