பயத்தங்காய் நன்மைகள் மற்றும் தீமைகள்

0

பயத்தங்காய் நன்மைகள் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் பயத்தங்காய் தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

பயத்தங்காய்

பயத்தங்காய் ஆங்கிலத்தில் யார்டு லாங் பீன்ஸ், போடி பீன், லாங் பீன், ஸ்னேக் பீன் என்றும் அழைக்கப்படுகிறது.

பயத்தங்காய்

யார்டு லாங் பீன்ஸ் ஃபேபேசியே பயறு வகை குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

இது வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படும் தாவர வகையாகும். இதன் பூர்வீகம் தெற்கு ஆசியா என்று சொல்லப்படுகிறது.

பயத்தங்காய் காய்கறியாகவும் முதிர்ச்சி அடைந்த பின் இதன் விதைகள் பருப்புகளாக பயன்படுத்தப்படுகின்றன.

பயத்தங்காய் நன்மைகள் :

பயத்தங்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் , பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

பயத்தங்காய் நன்மைகள்

பயத்தங்காய் நன்மைகள் பற்றி காணலாம்.

ஊட்டச் சத்துக்கள் :

பீட்டா கரோட்டின், வைட்டமின் பி1 மற்றும் குளோரோபில், ரிபோஃப்ளேவின், புரதம், பாஸ்பரஸ், தயாமின், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பெக்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன.

மேலும் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் போதுமான அளவுஉள்ளன.

இதய ஆரோக்கியம் :

பயத்தங்காயில் உள்ள வைட்டமின் பி 9 அல்லது ஃபோலேட் ஹோமோசைஸ்டீனைக் குறைக்க உதவுகிறது.

ஹோமோசிஸ்டீன் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

போதுமான அளவு ஃபோலேட் உட்கொள்வது, இருதய நோய்க்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.

கொழுப்பைக் குறைக்கிறது :

பயத்தங்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமானப் பாதையில் கொழுப்புடன் பிணைந்து, இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது.

மேலும் குடலில் உள்ள பித்த அமிலங்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதன் மூலமும், அவை உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது.

இந்த செயல் முறைகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைவதற்கு வழிவகுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

பயத்தங்காயில் உள்ள தியாமின் செரிமான மண்டலத்தின் தசைகளை சீர் செய்கிறது.

மேலும் இது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்குத் தேவையான ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பில் உதவுகிறது.

இதன் மூலம் உடலுக்கு தேவையான அத்தியாவிஷய ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப் பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பத்தில் உதவுகிறது.

புற்றுநோய் :

ஃபோலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பெருங்குடல், மார்பகம், கர்ப்பப்பை வாய், நுரையீரல் மற்றும் மூளை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று சான்றுகள் காட்டுகின்றன.

தினமும் 900 மைக்ரோகிராம் ஃபோலேட் உட்கொள்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30% குறைவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

எலும்பு ஆரோக்கியம் :

பயத்தங்காய், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

இந்த தாதுக்கள் எலும்பை பலப்படுத்துவதிலும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன.

பயத்தங்காய் தொடர்ந்து சாப்பிடுவது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பிற எலும்பு நோய்களைத் தடுக்க உதவுகிறது.

தைராய்டு ஆரோக்கியம் :

பயத்தங்காயில் உள்ள அயோடின் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமாகும்.

மேலும் தைராய்டு ஆரோக்கியத்திற்கு அவசியமான செலினியமும் உள்ளது.

இந்த ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகின்றன. மேலும் இதன் குறைபாடு எடை அதிகரிப்பு, சோர்வு மற்றும் பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பயத்தங்காய் தீமைகள் :

பயத்தங்காய் பொதுவாக பாதுகாப்பானது தான். ஆனால் அதிக அளவு சாப்பிடுவது, ஏற்கனவே பிற உடல் நலக் குறைபாடு உடையவர்களுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பயத்தங்காய் தீமைகக் சில பின்வருமாறு…

வெகுவாக சிலருக்கு அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை எதிர் வினையை ஏற்படுத்தலாம்.

பயத்தங்காய் அரிதாக சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாயு மற்றும் வீக்கம் உள்ளிட்ட சிலருக்கு செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.