பசலைக்கீரை நன்மைகள், அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் பசலைக்கீரை தீமைகள் பற்றி கொடுக்கப் பட்டுள்ளது.
பசலைக்கீரை
பசலைக் கீரை தவாரத்தின் அறிவியல் பெயர் ஸ்பினாசியா ஒலரேசியா (Spinacia oleracea) ஆகும்.
இதன் பூர்வீகம் பெர்சியா என்று சொல்லப்படுகிறது. பசலை கீரை உலக அளவில் சீனாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
தாவர உணவு வகைகளில் கீரை ஒரு சிறந்த உணவு என்று சொல்லலாம். கீரைகளில் குறைந்த கலோரி மற்றும் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
அதிலுள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்காக உலகம் முழுவதும் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது.
பசலை கீரை வகைகள் பொதுவாக தரை பசலை கீரை, கொடிப் பசலை கீரை, சிவப்பு பசலை கீரை என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து ஒத்த பண்புகளை கொண்டுள்ளன.
பசலைக்கீரையில் உள்ள சத்துக்கள் :
பசலைக்க்கீரை சத்துக்கள் நிறைந்த கீரை வகையாகும். 100 கிராம் பச்சை மற்றும் சமைக்க பட்ட கீரையில் கிராம் சம அளவு மேக்ரோ நியூட்ரியண்ட்கள் உள்ளன.
100 கிராம் பசலை கீரையில் சுமார் 23 கலோரிகள், 3 கிராம் புரதம், 0.3 கிராம் கொழுப்பு மற்றும் 3.8 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது.
வைட்டமின்கள் :
பசலை கீரையில் உள்ள வைட்டமின்களின் அளவு அவை சமைக்கப் படும் பொழுது வேறுபாடுகின்றன.
100 கிராம் பச்சை பசலை கீரையில் வைட்டமின் சி தினசரி மதிப்பில் 47 சதவீதமும் ஆனால் அதே அளவு சமைத்த கீரையில் 16 சதவீதமும் உள்ளது.
பசலை கீரையில் ஃபோலேட் விட்டமின் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ள அளவில் 49 சதவீதமும் சமைத்த கீரையில் 38 சதவீதமும் உள்ளது.
மேலும் சமைக்கப் பட்ட கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் கே ஆகியவை சற்று அதிகமாக உள்ளது.
தாதுச் சத்துக்கள் :
மக்ரோ நியூட்ரியண்ட்களைப் போலவே, தாது சத்துக்களும் பச்சை மற்றும் சமைத்த கீரை இரண்டிலும் ஒத்த அளவை கொண்டுள்ளது.
இரண்டுமே கணிசமான அளவு கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
சமைத்த கீரையில் பொட்டாசியம் தவிர மற்ற சத்துக்கள் அனைத்தும் சற்று அதிக அளவில் உள்ளது..
பசலைக் கீரை நன்மைகள் :
பசலைக்கீரையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து இதயத்திற்கு உதவுவது வரை என பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
இரத்த அழுத்தம் :
பசலி கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது.
சோடியத்தின் அளவை கட்டுப் படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இதயப் பாதுகாப்பு :
பசலை கீரை கனிம நைட்ரேட்டின் சிறந்த மூலமாகும். இது இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் தமனிகளை விறைப்பாக மாற்றும் என்று ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் பசலை கீரையில் உள்ள. பொட்டாசியம் இதயம் சரியாக வேலை செய்ய உதவுகிறது.
மூளை செயல்பாடு :
பசலை கீரை மூளையின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
குறிப்பாக வயதான காலத்தில். தினமும் பசலை கீரையை உட்கொள்வதால், உங்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதோடு, புத்திசாலித்தனமாக சிந்திக்கவும் உதவுகிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின் கே நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
கீரையில் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
அவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப் படுத்துக்கின்றன.
இதன் மூலம் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக் களிலிருந்து பாதுகாக்கிறது.
இரத்த சோகையைத் தடுக்கிறது :
பசலைக்கீரை தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்தின் சிறந்த மூலமாகும்.
இரும்புச்சத்து குறைவாக இருந்தால் இரத்த சோகை என்றழைக்கப்படும் அனீமியா எனும் நோய் ஏற்படுகிறது.
பலவீனம், மயக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இரத்த சோகையின் அறிகுறிகளாகும்.
கண்கள் ஆரோக்கியம் :
கீரையில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகிய கரோட்டினாய்டுகள் உள்ளன.
அவை கண்புரை வருவதற்கான வாய்ப்புகளை குறைத்து கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.சோகை நோயின் அறிகுறிகளாகும்.
காயங்களை ஆற்றுகிறது :
கீரையில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை துரிதப் படுத்தி காயங்களை விரைவாக ஆற்ற உதவுகிறது.
வைட்டமின் சி உணவுகளில் இருந்து இரும்பு சத்து உறிஞ்சப் படுவதன் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இரும்பு சத்தும் காயங்களை ஆற்றுவதில் உதவுகிறது.
ஆஸ்டியோ போரோசிஸ் நோயை தடுக்கிறது :
எலும்புகளை பலவீனமாக்கி எளிதில் உடைய வைக்கும் நிலைமை ஆஸ்டியோபோரோசிஸ் என்று பெயர்.
உடல் அடிக்கடி பழைய சேதமடைந்த எலும்பு திசுக்களை நீக்கி புது எலும்பு செல்களை மீண்டும் உருவாக்குகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட எலும்பு திசுக்கள் பலவீனமாக இருக்கும் போது ஆஸ்டியோ போரோசிஸ் உருவாகிறது.
போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றாலும் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பசலி கீரையில் கால்சியம், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் கே உள்ளது. இவை ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுத்து எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
உடல் எடை குறைய :
கீரை போன்ற தாவர வகை உணவுகளில் தைலாகாய்டு சாறுகள் பசி உணர்வைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அவை பசியை உருவாக்கும் ஹார்மோனின் அளவைக் குறைத்து, வயிறு நிரம்பிதாக உணரவைக்கும் ஹார்மோன்களை உயர்த்துகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கர்ப்பிணிகளுக்கு நல்லது :
கீரையில் ஃபோலேட் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் குழந்தைகளில் ஸ்பைனா பிஃபிடா போன்ற நரம்புக் குழாய் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கிறது.
அதனால்தான் கர்ப்பமாக இருப்பவர்கள் ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகின்றனர்.
கீரையில் இருந்து வைட்டமின் பி6 குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புகள் வளர்ச்சிக்கு முக்கியமான தாகும்.
பசலைக்கீரை தீமைகள் :
கீரைகள் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். அதற்காக அளவுக்கு மிஞ்சிய அளவிற்கு உட்கொண்டால் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அவை
சிறுநீரக கற்கள் :
பசலி கீரை அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் உள்ள கீரை வகைகளிக் ஒன்றாகும். கீரையை அதிகமாக சாப்பிடுவதால் உருவாகும் கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்களை உருவாக்குகிறது.
மேலும் இது ஹைபராக்ஸலூரியா என்று சொல்லப்படும் அதிகப்படியான சிறுநீர் ஆக்சலேட் வெளியேற்றத்திற்கு வழி வகுக்கிறது.
ஊட்ட சத்து நீக்கி :
அதிக அளவு பசலி கீரையை சாப்பிடுவது உடலின் தாதுக்களை உறிஞ்சும் திறனில் குறுக்கிட வாய்ப்பு உள்ளது.
பசலி கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் கால்சியத்துடன் பிணைக்கிறது.
இதன் மூலம் உடல் போதுமான ஊட்டச் சத்துக்களை உறிஞ்சுவதை தடுத்து ஊட்ட சத்துக்கள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது.
மருந்துகளுடன் வினை :
கீரையில் அதிக அளவு வைட்டமின் கே உள்ளது. இது இரத்தத்தை மெல்லியதாக்கும் வைட்டமின் ஆகும்.
எனவே இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் உட்கொள்பவர்கள் அதிக அளவு பசலை கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.