வைட்டமின் பி5 பயன்கள், நன்மைகள், வைட்டமின் பி 5 குறைபாடு, குறைபாட்டு அறிகுறிகள் மற்றும் வைட்டமின் பி 5 நிறைந்த உணவுகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் பி 5 :
வைட்டமின் பி5, பாந்தோத்தேனிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலான உணவுகளில் காணப்படுகிறது.
இது நீரில் கரையக்கூடிய பி வைட்டமின்களுள் ஒன்றாகும். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும்.
வைட்டமின் பி5 குறைபாடு :
பாந்தோத்தேனிக் அமிலம் அதாவது வைட்டமின் பி 5 கிட்டத்தட்ட அனைத்து உணவுகளிலும் காணப்படுவதால், வைட்டமின் பி 5 குறைபாடு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
வைட்டமின் பி5 குறைபாடு அறிகுறிகள் :
சோர்வு, அக்கறையின்மை, மன அழுத்தம், எரிச்சல், தூக்கக் கோளாறுகள், வயிற்று வலிகள், குமட்டல், வாந்தி, உணர்வின்மை, தசைப்பிடிப்பு, இரத்தச் சர்க்கரைக் குறைவு, மேல் சுவாச நோய்த்தொற்றுகள் போன்றவை வைட்டமின் பி 5 குறைபாடு அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.
வைட்டமின் பி5 நன்மைகள் :
- செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
- சில ஆய்வுகளில் B5 முகப்பருவைக் குறைக்கவும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
- உணவை குளுக்கோஸாக மாற்ற உதவுகிறது.
- மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களின் உருவாக்கத்தில் உதவுகிறது.
- வைட்டமின் பி2 போன்ற வைட்டமின்கள் உடலால் உறிஞ்சப் படுவதற்கு உதவுகிறது.
- கோஎன்சைம் ஏ தொகுப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- இரத்த சிவப்பணுக்கள் உருவாக வைட்டமின் B5 அவசியம் ஆகும்.
- பாலியல் தொடர்பான ஹார்மோன் களின் உருவாக்கத்திற்கு உதவுகிறது.
- கொலஸ்ட்ராலை ஒருங்கிணைப் பதில் பயன் படுத்தப்படுகிறது
வைட்டமின் பி5 நிறைந்த உணவுகள் :
- காளான் 100 கிராமில் 3.6 மி கி வைட்டமின் பி5 உள்ளது.
- 100 கிராம் வேர்க்கடலையில் சுமார் 2.56 மி கி வைட்டமின் பி 5 உள்ளது.
- 100 கிராம் சால்மன் மீனில் 1.9மிகி வைட்டமின் B5 உள்ளது.
- 100 கிராம் இனிப்பு உருளைக்கிழங்கில் 1.77 மி கி வைட்டமின் B5 ஐ உள்ளது.
- 100 கிராம் சூரிய காந்தி விதையில் 1.66 மி கி வைட்டமின் B 5 உள்ளது.
- 100 கிராம் முந்திரி பருப்பில் 1.32 மி கி வைட்டமின் B 5 உள்ளது.
- 100 கிராம் ஹேசல் நட்டில் 1.07 மி கி வைட்டமின் B5 உள்ளது.
- 100 கிராம் வெண்ணெய் பழத்தில் 1.4 மிகி வைட்டமின் B 5 உள்ளது.
- 100 கிராம் பிஸ்தா பருப்பில் 1.06 மி கி வைட்டமின் B5 உள்ளது.
- 100 கிராம் ப்ரோக்கோலி சுமார் 0.96 மி கி வைட்டமின் B5 வழங்குகிறது .
- 100 கிராம் முட்டையில் சுமார் 0.7 மில்லி கிராம் வைட்டமின் பி 5 உள்ளது.
- 100 கிராம் வால் நட்டில் சுமார் 0.67 மி கி வைட்டமின் B 5 உள்ளது.
- 100 கிராம் பாதாம் பருப்பில் 0.66 மி கி வைட்டமின் பி5 உள்ளது.
- 100 கிராம் பருப்பு வகைகளில் சராசரியாக 0.6 மி.கி வைட்டமின் பி 5 உள்ளது.