பனங்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

0

பனங்கிழங்கு :

பனங்கிழங்கு என்பது என்பது பல்வேறு இந்திய மற்றும் தெற்காசிய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் கிழங்கு வகை காய்கறி ஆகும். இதன் அறிவில் பெயர் போராசஸ் ஃபிளாபெல்லிஃபர். இது நிலப் பனங்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கிழங்கு பனை விதை முளைக்கும் போது சேகரிக்கப்படுகிறது.

பன்ங்கிழங்கு

இவை இந்தியாவின் தென் பகுதிகளில் அதிக அளவவு வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.

ஒரு ஆழமற்ற சிறிய குழி தோண்டி, பனை விதைகள் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. ஒரு மாதம் அல்லது அதற்கு பின்னர் ஒருமாதம் அல்லது 40 நாட்கள் கழித்து அறுவடை செய்யப்படுகிறது.

பனங்கிழங்கு நன்மைகள் :

நார்ச் சத்து :

நிலப்பனை கிழங்கு நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். குடல் இயக்கங்களை சீராக்குவதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கும் பன்புக்கு இது மிகவும் பிரபலமானதாகும்.

நார்ச்சத்து உடலால் உறிஞ்ச முடியாத ஒரு வகை மாவுச் சத்து ஆகும். இது இரத்தக் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இருதய நோய் மற்றும் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இரும்பு சத்து :

இரும்புச்சத்து ஹீமோ குளோபினின் செயல் பாட்டிற்கு இன்றியமையாததாகும். மேலும் இரத்தத்தின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல அவசியமாகும். பனங்கிழங்கு பொடி இரும்பு சத்து குறைபாட்டை போக்க உதவுகிறது.

கால்சியம் :

பனங்கிழங்கில் கணிசமான அளவு கால்சியம் உள்ளது. இது தசை, வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கு மிகவும் அவசியம் ஆகும். மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற வயது தொடர்பான எலும்பு கோளாறுகளைத் தடுக்கிறது.

மெக்னீசியம் :

மேலும் பனங்கிழங்கில் உள்ள மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் உற்பத்தியை சீராக்க உதவுகிறது.

புரதம் :

பனங் கிழங்கு புரதச் சத்தின் சிறந்த மூலமாகும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிற்கும் புரதம் ஒரு முக்கிய அங்கமாகும். உடல் திசுக்களை உருவாக்கவும் சரிசெய்யவும் புரதங்களைப் பயன்படுத்துகிறது. மேலும் என்சைம்கள், ஹார்மோன்கள் மற்றும் பிற உடல் இரசாயனங்களை உருவாக்க புரதம் அவசியமாகும்.

கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளைப் போல் புரதம் உடலால் சேமித்து வைக்கப் படுவதில்லை. எனவே, புரதச்சத்து நிறைந்த உணவை தேவையான அளவு சாப்பிடுவது உடல் புரத அளவை நன்றாக வைத்திருக்க உதவுகிறது.

பனங்கிழங்கு பயன்கள் :

பனங்கிழங்கு உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

இது எடை அதிகரிக்க உதவுகிறது. இது கருப்பைக்கு நல்லது.

வயிற்று பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது.

இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவத்தில் உதவுகிறது.

பனங்கிழங்கு மாவு :

பனங்கிழங்கு பொடி செய்து மாவாகவும் பயன்படுத்தலாம். பொடி

பனங்கிழங்கு மாவு ஒரு சிட்டிகை மஞ்சளுடன் சேர்த்து 2 மணி நேரம் வேகவைக்க வேண்டும்.

பிறகு சிறு துண்டுகளாக வெட்டி சூரிய ஒளியில் 3 நாட்களுக்கு உலர வைக்கவும்.

உலர்ந்த துண்டுகளை நன்றாக அரைத்து பொடி செய்து பாத்திரத்தில் சேமிக்கவும்.

பாலில் 1 டீஸ்பூன் பனை கிழங்கு பொடி மற்றும் சிட்டிகை மிளகு சேர்த்து குடிக்கவும்.

தேங்காய்ப் பாலில் பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

பனங்கிழங்கு தீமைகள் :

நார்ச் சத்து அதிக அளவில் எடுத்து கொள்வது செரிமானம் தொடர்பான பிரச்சினைகளான வாய்வு, வயிறு உப்புசம் போன்ற வற்றை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. பனைங்கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், ஒரே நேரத்தில் அதிக அளவில் உண்பதை தவிர்க்க வேண்டும்.

பனை கிழங்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக இது வரை பதிவுகள் இல்லை. இருப்பினும் சில சமயங்களில் உணவு ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம்.