பலாப்பழம் நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

0

பலாப்பழம் நன்மைகள், அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் பலாப் பழம் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பலாப்பழம் :

பலாப்பழத்தின் அறிவியல் பெயர் ஆர்டோகார்பஸ் ஹீட்டோரோ பில்லஸ் ஆகும். இது ஆங்கிலத்தில் ஜாக் ப்ரூட் என்றும், ஹிந்தியில் கதல் என்றும், தெலுங்கில் பணசக்கை என்றும், கன்னடத்தில் ஹலசு, குஜீ என்றும் மலையாலத்தில் சக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
பலாப்பழம்பலாப்பழம் தென் இந்தியாவை பூர்விகமாக கொண்டது. உலக அளவில் இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் பண்ருட்டியில் அதிக அளவில் பயிரிடப் படுகிறது.

பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள்  :

பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள்
100 கிராம் பலாப் பழத்தில் 95 கிலோ கலோரிகள் உள்ளது. மேலும் 23.5 கிராம் கார்போ ஹைட்ரேட், 1.7 கிராம் புரதம், 0.06 கிராம் கொழுப்புச் சத்து மற்றும் 1.5 கிராம் நார்ச் சத்து உள்ளது.
 

வைட்டமின்கள் :

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின்கள்100 கிராம் பலாப் பழத்தில் வைட்டமின் A 110 IU, வைட்டமின் சி  13.7 மில்லி கிராமும் வைட்டமின் இ  0.34 மில்லி கிராம் உள்ளன.

தாதுச் சத்துக்கள்  :

பலாப்பழத்தில் உள்ள தாது சத்துக்கள்

100 கிராம் பலாப் பழத்தில் இரும்பு சத்து 0.23 மில்லி கிராமும், கால்சியம் 24 மில்லி கிராமும், மக்னேசியம் 29 மில்லி கிராமும் பொட்டாசியம் 448 மில்லி கிராமும் உள்ளன.

பலாப்பழம் நன்மைகள்  :

பலாப் பழத்தில் உள்ள சில சேர்மங்கள் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் எலும்பு இழப்பு போன்ற பல்வேறு நோய்களைக் குறைக்கும் திறன்களை கொண்டுள்ளன.

மேலும் தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் ஹோமோசிஸ்டீன் அளவைக் குறைக்கிறது.

பலாப்பழம் நன்மைகள் சில கீழே விவரிக்கப் பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

பலாப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.

இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலிற்கு தருகிறது.

உடனடி ஆற்றலை தருகிறது :

100 கிராம் பலாப் பழத்தில் 94 கிலோ கலோரி மற்றும் நல்ல கார்போ ஹைட்ரேட்டுகளுடன் உள்ளது. இது சாப்பிடவுடன் உடனடி ஆற்றலை அளிக்கிறது.

மேலும் பலாப்பழத்தில் உள்ள சர்க்கரைகள் ஜீரணிக்க மிகவும் எளிதானது மற்றும் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது :

பலாப்பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகையான நார் சத்துக்கள் நிறைந்துள்ளது.

கரையக்கூடிய நார்ச்சத்து ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக உடலால் விரைவாக உடைக்கப்படுகிறது.

கரையாத நார்ச்சத்து  குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

கண் பார்வையை மேம்படுத்துகிறது :

வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) நிறைந்திருப்பதால், பலாப்பழம் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.

இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று நோய்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

மேலும் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுகிறது.

மேலும் புற ஊதா கதிர்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் ஒளி அலைகளிலிருந்து கண்களைக் காப்பாற்றுகிறது.

இது விழித்திரையின் சிதைவைத் தடுத்து கண்புரை அபாயத்தைக் குறைக்கிறது.

இளமையாக வைத்திருக்க உதவுகிறது :

பிரீ ரேடிக்கல்ஸ் செயல்முறை உடல் செல்களில் நடை பெருவதால் செல்கள் சேதமாகி வயதான தன்மை ஏற்படுகிறது.

மாசுபாட்டால் ஏற்படும் அதிக ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் போது பிரீ ரேடிகல்கள் உடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பலாப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை அழிப்பதன் வயதான செயல்முறையை குறைக்கிறது.

தைராய்டை உறுதி செய்கிறது :

பலாப்பழத்தில் உள்ள காப்பர் தைராய்டு வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

குறிப்பாக ஹார்மோன் உற்பத்தி செய்தல் மற்றும் உறிஞ்சுதல் போன்ற செயல் பாடுகளை சீராக்குகிறது.

இது தைராய்டு கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம் :

பலாப் பழத்தில் உள்ள காலசியம் எலும்புகளை உறுதிபடுத்துகிறது. மேலும் அதில் உள்ள பொட்டசியம், காலசியம் சிறு நீர் வழியாக அதிக அளவில் வேளியேறுவதை குறைக்கிறது.

எலும்புகள் சம்பந்தமான நோய்களான ஆர்த்திரிஸ் மற்றும் ஆஸ்டிரோப்ரோசிஸ் போன்ற நோகளில் இருந்து பாதுகாக்கிறது.

இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :

பலாப் பழத்தில் உள்ள கணிசமான அளவு இரும்புச் சத்து இரத்த செல்களின் அளவை பராமரித்து அனீமியா போன்ற நோகளில் இருந்து பாதுக்காக்கிறது.

மேலும் இரும்பு வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கிறது. மேலும் பலாப் பழத்தில் உள்ள மக்னேசியம், வைட்டமின் சி மற்றும் காப்பர் இரத்தத்தின் ஆரோக்கியரம்  தரத்தை பராமரிக்கிறது.

ஆஸ்த்துமாவை தடுக்கிறது :

பலாப் பழம் உண்பது உடலில் உள்ள ஊட்ட சத்து ஏற்றத் தாழ்வுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் விளைவாக ஆஸ்துமா தாக்குதல்களைக் கட்டுப்படுத்துகிறது.

குறிப்பாக மாசுபாட்டால் ஆஸ்த்துமா தொடர்பான அறிகுறிகள் தூண்டப் படும்போது, ​​

மாசு காரணமாக உடலில் உற்பத்தி செய்யப்படும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் ஆஸ்துமா அறிகுறிகளைக் கட்டுப்படுத்த பலாப்பழம் உதவுகிறது.

பலாப்பழம் தீமைகள் :

பலாப்பழம் பெரும்பாலான மக்களுக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. அரிதாக ஒரு சிலருக்கோ அல்லது ஏதேனும் உடல் நலக் கோளாறு உள்ளவர்களுக்கும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். சில பலாப்பழம் தீமைகள் பின்வருமாறு

நீரிழிவு நோய் :

பலாப்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிப்பதால் நீரிழிவு மருந்தின் அளவை மாற்ற வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அறுவை சிகிச்சை :

அறுவை சிகிச்சையின் போது மற்றும் அதற்குப் பிறகு பயன் படுத்தப்படும் மருந்துகளுடன் இணைந்தால் பலாப்பழம் அதிக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.