பாஸ்பரஸ் :
பாஸ்பரஸ் என்பது உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு தேவையான 16 அத்தியாவிசய தாதுக்களில் ஒன்றாகும்.
மனித உடலின் ஒவ்வொரு உயிரணுக்களிலும் காணப்படுகிறது.
இது கால்சியத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் உள்ள இரண்டாவது கனிமமாகும். இது உடலின் மொத்த எடையில் சுமார் 1 சதவிகிதம் ஆகும்.
பாஸ்பரஸின் முக்கிய செயல்பாடு எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது என்றாலும், டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ எனப்படும் உடலின் மரபணு கட்டுமான தொகுதிகளை உருவாவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
வளர்ச்சிதை மாற்றம், கலோரிகள் மற்றும் ஆக்ஸிஜனை ஆற்றலாக மாற்றுதல், தசைச் சுருக்கம், இதயத் துடிப்பு மற்றும் நரம்பு சமிக்ஞைகளின் பரிமாற்றம் ஆகியவற்றிலும் பாஸ் பரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாஸ்பரஸ் கால்சியம், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், குளோரைடு மற்றும் கந்தகம் போன்று ஒரு மேக்ரோமினரல் ஆகும்.
பாஸ்பரஸ் குறைபாடு :
பாஸ்பரஸ் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் பொதுவாக ஹைப்போ பாஸ்பேட்மியா அல்லது குறைந்த இரத்த பாஸ்பேட் அளவுகளுடன் சேர்ந்து, உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் தசை பலவீனம், எலும்பு வலி, எலும்பு முறிவுகள், வலிப்பு மற்றும் சுவாச செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
மற்ற சில சத்துக்களைப் போல் உடலால் பாஸ்பரஸை சொந்தமாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உண்ணும் உணவின் மூலம் பெற வேண்டும்.
பொதுவாக உடலுக்கு தேவையான பாஸ் பரஸ் தினசரி உணவின் மூலமே பெறப்படுகிறது.
பாஸ்பரஸ் குறைபாடு சாதாரணமாக காணப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
சிறுநீரக நோய், அதிக பாஸ்பரசு உட்கொள்வது மற்றும் போதுமான கால்சியம் இல்லாதது உடலில் பாஸ்பரசு அதிகமாக வழிவகுக்கும்.
பாஸ்பரசு அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இதய நோய், மூட்டு வலி அல்லது சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
பாஸ்பரஸ் தினசரி தேவை :
பாஸ்பரஸ் தினசரி தேவை என்பது வயதுக்கு ஏற்பவும் தனிப்பட்ட நபர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது
பொதுவாக ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் பாஸ்பரசு அளவு
- குழந்தைகள் (0-6 மாதங்கள்): 100 மில்லிகிராம்கள் (மிகி)
- கைக்குழந்தைகள் (7-12 மாதங்கள்): 275 மி.கி
- குழந்தைகள் (1-3 ஆண்டுகள்): 460 மி.கி
- குழந்தைகள் (4-8 ஆண்டுகள்): 500 மி.கி
- குழந்தைகள் (9-18 ஆண்டுகள்): 1,250 மி.கி
- பெரியவர்கள் (19 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்): 700 மி.கி
பாஸ்பரஸ் பயன்கள் :
- எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
- உணவை ஆற்றலாக மாற்றுவதில் உதவுகிறது.
- தசை இயக்கத்தில் உதவுகிறது.
- வலுவான பற்களை உருவாக்க உதவுகிறது.
- உடல் ஆற்றலை சேமிப்பதிலும் பயன் படுத்துவதிலும் உதவுகிறது.
- உடற்பயிற்சிக்கு பிறகும் ஏற்படும் தசை வலி குறைக்க உதவுகிறது.
- சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வடிகட்ட உதவுகிறது.
- திசு மற்றும் செல்களை வளர்ச் சிதை மாற்றத்திலும் பராமரிப்பிலும் உதவுகிறது.
- உடலின் மரபணு கட்டுமான தொகுதிகளான டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏவை உற்பத்தி செய்கின்றன.
- வைட்டமின்கள் பி மற்றும் வைட்டமின் டி போன்ற வைட்டமின் களையும் அயோடின், மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற பிற தாதுக்களையும் சமநிலைப்படுத்தி பயன்படுத்த உதவுகிறது.
- இதயத் துடிப்பை சீராக பராமரிக்க உதவுகிறது.
பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள் :
ப்ரோக்கோலி :
100 கிராம் ப்ரோக்கோலியில் 66.0 மி கி பாஸ்பரஸ் உள்ளது. தினசரி தேவையான அளவில் சுமார் 9 சதவீதம் உள்ளது.
கோதுமை :
ஒரு கப் அதாவது 130 கிராம் முழு கோதுமையில் 415 மி கி பாஸ்பரஸ் உள்ளது. இது தினசரி தேவையில் 59 சதவீதம் ஆகும்.
பாலாடைக் கட்டி :
ஒரு கப் துண்டுகளாக்கப்பட்ட பாலாடைக்கட்டியில் 676 மி கி பாஸ்பரசு உள்ளது. இது தினசரி தேவையில் 97 சதவீதம் ஆகும்.
வேர்க்கடலை :
100 கிராம் வேர்க்கடலை வெண்ணெயில் 358 மி கி பாஸ் பரஸ் உள்ளது. இது தினசரி தேவையில் சுமார் 50 சதவீதம் ஆகும்.
சோளம் :
ஒரு கப் சோளம் 349 மில்லிகிராம் பாஸ்பரஸை வழங்குகிறது. இது பாஸ்பரஸின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி தேவையில் 50 சதவீதம் ஆகும்.
பூண்டு :
ஒரு கப் பூண்டு 208 மி.கி பாஸ்பரஸை வழங்குகிறது. இது தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்ட அளவில் பாஸ்பரஸில் 30 சதவீதம் ஆகும்.
சாலமன் :
100 கிராம் சால்மன் மீனில் 200 மி கி பாஸ்பரசு உள்ளது. இது தினசரி தேவையில் சுமார் 29 சதவீதம் ஆகும்.
தக்காளி :
ஒரு கப் தக்காளி பழத்தில் 43.2 மி கி பாஸ்பரசு உள்ளது. இது தினசரி தேவையில் சுமார் 6 சதவீதம் ஆகும்.
உருளைக்கிழங்கு :
ஒரு உருளைக் கிழங்கில் 210 மி கி பாஸ்பரசு உள்ளது. இது தினசரி தேவையில் சுமார் 30 சதவீதம் ஆகும்.
பால் :
ஒரு கப் பாலில் 286 மி.கி பாஸ்பரசு உள்ளது. இது தினசரி தேவையில் சுமார் 41 சதவீதம் ஆகும்.
இறைச்சி :
100 கிராம் இந்த சிவப்பு இறைச்சியில் 175 மி கி பாஸ்பரசு உள்ளது. இது தினசரி மதிப்பில் சுமார் 25 சதவீதம் ஆகும்.
முட்டை :
ஒரு பெரிய முட்டையில் சுமார் 95.5 மி.கி பாஸ்பரஸ் உள்ளது