Homeஉணவுகள்காய்கறிகள்வெங்காயம் நன்மைகள், சத்துக்கள் மற்றும் தீமைகள்

வெங்காயம் நன்மைகள், சத்துக்கள் மற்றும் தீமைகள்

வெங்காயம் நன்மைகள், வெங்காயம் மருத்துவ பயன்கள், வெங்காயத்தில் சத்துக்கள், அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் வெங்காயம் தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

வெங்காயம் :

வெங்காயம் இந்திய சமைகளில் பயன்படுத்தப் படும் மிக முக்கியமான காய்கறி வகைகளுள் ஒன்று.

வெங்காயம்

வெங்காயத்தின் அறிவியல் பெயர் அல்லியம் செப்பா ஆகும். இது தமிழில் உள்ளி, பல்லாரி, என்றும் ஆங்கிலத்தில் ஆனியன் எஎன்றும் அழைக்கப்படுகிறது.

வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் :

வெங்காயத்தில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது.

கால்சியம், இரும்புச்சத்து மற்றும் தரமான புரத சத்தும் உள்ளது.

மிக குறைந்த அளவு சோடியம் மற்றும் பூஜ்ய அளவு கொழுப்பு உள்ளது.

வெங்காயத்தில் குர்செடின், ஃபிளாவனாய்டு எனப்படும் ஒரு வகை ஆக்ஸிஜனேற்ற சல்பர் சேர்மங்கள் மற்றும் ஆர்கனோசல்பர் கலவைகள் உள்ளன.

வெங்காயம் 100 கிராமில் 40 கலோரிகள் உள்ளன. அதில் 0.1 கிராம் கொழுப்பு, 1.1 கிராம் புரதம் மற்றும் 9.3 கிராம், 1.7 கிராம் நார் சத்து, கார்போஹைட்ரேட் உள்ளது.

வைட்டமின்கள் :

வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் - வைட்டமின்கள்

வெங்காயம் 100 கிராமில்   7.4 மில்லி கிராம் வைட்டமின் சி, 0.02 மில்லி கிராம் வைட்டமின் இ மேலும் 0.04 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது.

தாதுச் சத்துக்கள் :

வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் - தத்துக்கள்

வெங்காயம் 100 கிராமில் 0.21 மில்லி கிராம் இரும்புச் சத்து, 23.00 மில்லி கிராம் கால்சியம் மற்றும் 146 மில்லி கிராம் பொட்டாசியமும் உள்ளன.

வெங்காயம் நன்மைகள் :

வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது :

வெங்காயத்தில் செலினியம் சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து ஆகும்.

மேலும், செலினியம் குறைபாடுள்ள நோயெதிர்ப்பு செல்கள் உள் செயல் முறைகளால் சேதப் படுகின்றன.

இவ்வாறு சேதம் அடைந்த செல்கள் புரதத்தை உற்பத்தி செய்வதிலும் கால்சியம் சத்தை கொண்டு செல்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.

வெங்காயச் சாறு ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பயனளிப்பதாக சொல்லப் படுகிறது.

பார்வை ஆரோக்கியம் :

வெங்காயச்  சாற்றின் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை கண் நோய்த் தொற்றுகளான கான்ஜுன்க்டிவிடிஸ் மற்றும் பிளெஃபரிடிஸ் போன்றவற்றிற்கு எதிராக செயல் படுகின்றன.

முயல்களில் செய்யப்பட்ட சோதனைகளில், வெங்காய சாறு கண்னணில் கட்டாராக்ட் வளரும் வாய்ப்பை குறைக்கிறது என்று கண்டறியப் பட்டுள்ளது.

எலிகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில், வெங்காயச் சாற்றை ஊற்றுவது செலினைட் தூண்டப்பட்ட கண்புரை உருவாவதைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.

இதய நோய் அபாயத்தை குறைக்கிறது :

வெங்காயத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கந்தக கலவைகள் இரத்தம் உறைதலை குறைக்கின்றன. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

மேலும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பத்தன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப் படுத்துகிறது :

வெங்காயத்தில் உள்ள சல்பர் கலவைகளான குர்செடின் மற்றும் குரோமியம் ஆகியவை நீரிழிவு எதிர் பண்புகளை கொண்டுள்ளன.

2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு மெட்டா பகுப்பாய்வில் வகை 2 நீரிழிவு நோயாளிகளால் பாதிக்கப் பட்டவர்கள் வெங்காயம் சாப்பிட்ட பிறகு சிறந்த கல்லீரல் நொதிகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் மதிப்புகள் இருப்பதாகவும் காட்டியது.

கொழுப்பு தொப்பையை குறைக்கிறது :

11β ஹைட்ராக்ஸிஸ்டீராய்டு டீஹைட்ரோஜினேஸை எனும் நொதியை கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய ஒரு சில பொருட்களில் குர்செடின் ஒன்று என்று கருதப்படுகிறது.

இந்த நொதியானது கொழுப்பு செல்களில் சேமிக்கப்பட்டுள்ள கார்டிசோலை மீண்டும் செயல்படுத்துவதன் மூல்ம் கொழுப்பு உருவாவதை ஊக்குவிக்கிறது.

மூளை ஆரோக்கியம் :

வெங்காயம் சாப்பிடுவதால் மூளையில் இரத்த ஓட்டதை ஊக்குவிக்கிறது மற்றும் மூளையில் நீர் தேங்குவதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெங்காயத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் காரணமாக இந்த விளைவு மீண்டும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

எலும்புகளை பலப் படுத்துகிறது :

வெங்காயம் எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

அமெரிக்க விவசாயத் துறை (USDA) கூற்றின் படி ஒரு வெங்காயத்தில் 25.3 மி.கி கால்சியம் உள்ளது. கால்சியம் வலுவான எலும்புகள் மற்றும் பிற எலும்பு ஆரோக்கியாத்திற்கு முக்கியம் ஆகும்.

எனவே வெங்காயம் தினசரி உணவில் சேர்த்து வர சிறந்த எலும்பு ஆரோக்கியம் பெரும்.

முடி வளர்ச்சியை தூண்டுகிறது :

வெங்காய சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வேர் கால்களுக்கு ஊட்டம் அளித்து முடி வளர்ச்சியை தூண்டுக்கிறது.

வெங்காயம் சாறில் உள்ள கந்தகம் பொடுகு, முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற முடி சம்பந்தமான அனைத்து கோளாறுகளையும் நீக்கி வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

குடல் ஆரோக்கியம் :

வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கு விக்கிறது.

வெங்காயத்தில் உள்ள இனுலின் எனும் சேர்மம் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும், இரத்த சர்க்கரையை ஒழுங்குப் படுத்துவதற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதற்கும், எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்து வதற்கும் உதவி செய்கிறது.

கொலஸ்ட்ராலைக் கட்டுப் படுத்துகிறது :

வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டும் போது கண்களில் நீர் வரக்காரணம் வெங்காயத்தில் உள்ள அல்லியினேஸ் என்னும் சேர்மம் ஆகும்

இது கொழுப்பைக் குறைக்கவும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

மேலும், வெங்காயத்தில் உள்ள ஸ்டெரோல்ஸ் குர்செடின் மற்றும் சபோனின்கள் கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சரும பளபளப்பை அதிகரிக்கிறது :

வெங்காயத்தில் உள்ள சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் அல்லிசின் எனும் சல்பர் சேர்மங்கள் சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்துவதில் பங்கு வகிக்கிறது.

மேலும் இது ஒரு சக்திவாய்ந்த ஆண்டி செப்டிக்காக செயல்படுகிறது. இது சருமத்தை பாதுகாக்கிறது மற்றும் முகப்பரு வராமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்கிறது :

உடல் எடையை குறைப்பதில் வெங்காயம் சிறந்த பங்கை கொண்டுள்ளன.

வெங்காயச் சாறு மற்றும் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

பாக்டீரியா எதிர் பண்பு :

வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஒரு ஆய்வில் நறுக்கப்பட்ட பச்சை வெங்காயத்தில் பாக்டீரியா எதிர் பண்புகள் ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

வெங்காயம் பல் சிதைவு மற்றும் ஈறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் பாக்டீரியாக்களை அகற்றவும் உதவுகின்றன.

வெங்காயம் தீமைகள் :

வெங்காயம் பல மருத்துவ பண்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைளைப் கொண்டிருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன வெங்காயம் தீமைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரத்த சர்க்கரை :

வெங்காய சாறு இரத்த சர்க்கரையை குறைக்கிறது.

ஏற்கனவே நீரிழிவு மருந்துகளை உட்கொண்டிருந்தால் வெங்காயம் சாறு இரத்த சர்க்கரை அளவை அதிகமாக குறைக்கலாம். எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ளவும்.

இரத்த போக்கு :

வெங்காய சாறு இரத்த உறைதலை குறைத்து இரத்த போக்கை அதிகரிக்கிறது.

இரத்தப்போக்கு கோளாறு உடையவர்கள் வெங்காய சாற்றை உட்கொள்ளும் போது கவனம் தேவை.

திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்கு முன் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு வெங்காயச் சாற்றைத் தவிர்ப்பதற்கு இது ஒரு காரணம்ஆகும்.

அஜீரணம் :

அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் வெங்காயச் சாறு சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது அமில ரிஃப்ளக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கலாம்.

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular