ஆலிவ் ஆயில் நன்மைகள் மற்றும் தீமைகள்

0

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில், ஆலிவ் மரத்தின் பழங்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை எண்ணெய் ஆகும். இதன் அறிவியல் பெயர் ஓலியா யூரோபியா ஆகும்.

ஆலிவ் ஆயில்

இந்த எண்ணெய் பொதுவாக தெளிவான மஞ்சள் நிறம் முதல் தங்க நிறம் வரை காணப்படும். சரியாக பழுக்காத பழங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன.

மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு (முக்கியமாக ஒலிக் அமிலம்) மற்றும் பாலிஃபீனால்கள் அதிக அளவில் இருப்பதால் கொழுப்பு இருக்கும் மற்ற உணவுகளை விட ஆலிவ் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமானதாகும்.

ஆலிவ் ஆயில் வகைகள் :

உற்பத்தி செய்யும் முறை மற்றும் ஆலிவ் பழங்களின் தன்மையை பொறுத்து இது பல்வேறு வகையாக வருகிறது. இவற்றில், கூடுதல் கன்னி அதாவது எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் மிகவும் மென்மையான சுவை மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது.

ஆலிவ் ஆயில் செயல்முறைகள் அதாவது ப்ராசஸ் செய்யப்படுவதைப் பொறுத்து பொதுவாக மூன்று வகை அல்லது தரங்களில் வருகிறது.

கூடுதல் கன்னி அதாவது எக்ஸ்ட்ரா விர்ஜின், கன்னி அதாவது விர்ஜின் மற்றும் சுத்திகரிக்கப்பட்டவை.

இவை பாட்டிலில் அடைக்கப்படுவதற்கு முன் உற்பத்தி செயலாக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப் படுகின்றன.

இவற்றில் குறைந்த அளவு பிராசஸ் செய்யப் படுவது எக்ஸ்ட்ரா விரிஜின் ஆலிவ் ஆயில் ஆகும். மிக அதிக அளவு ப்ரோஸஸ் செய்யப்படுவது சுத்திகரிக்கப் பட்ட ஆலிவ் ஆயில் ஆகும்.

குறைந்த ப்ரோஸஸ் காரணமாக காரணமாக, எக்ஸ்ட்ரா விரிஜின் ஆலிவ் ஆயில் மற்ற இரண்டு எண்ணெய்களை விட அதிக ஊட்டச்சத்து உள்ளது.

உதாரணமாக, புற்றுநோய் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராட உதவும் பைட்டோ கெமிக்கல்கள் எனப்படும் ஆரோக்கியமான தாவர ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன.

ஆலிவ் ஆயில் பயன்கள் :

ஆலிவ் எண்ணெய் பெரும்பாலும் சமையலிலும், சில உணவுப் பொருட்களை பதப்படுத்துவதிலும், இது ஜவுளித் தொழிலில், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிலும், மருந்துப் பொருட்கள் தயாரிப்பதிலும் ல், உயர்தர விலையுயர்ந்த சோப்பு தயாரிப்பிலும், மற்றும் மசகு எண்ணெய் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆலிவ் ஆயில் நன்மைகள் :

ஆலிவ் எண்ணெயில் டைரோசோல் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. டைரோசோல் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது.

ஆலிவ் எண்ணெய் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

செரிமான ஆரோக்கியம் :

செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. இது வழக்கமான குடல் இயக்கத்தை பராமரிக்கிறது, மலச்சிக்கலை தடுக்கிறது.

தொடர்ந்து ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது செரிமான நோய்களைத் தடுக்கிறது.

நரம்பியல் விளைவுகள் :

அல்சைமர் என்பது ஒரு நரம்பியக்கடத்தல் நோயாகும். இது மூளையில் பீட்டா-அமிலாய்டு பிளேக்குகளின் கோளாறுகளால் ஏற்படுகிறது.

அல்சைமர் நோய் நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தும்.  ஆலிவ் எண்ணெயில் உள்ள ஓலியோகாந்தல் இந்த பிளேக்குகளை அழிக்க உதவுகிறது. இதனால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆலிவ் எண்ணெய் கற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது : 

ஆலிவ் எண்ணெயில் ஒலிக் அமிலம் போன்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை இதயத்திற்கு நல்லது மற்றும்  இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.  ஆலிவ் எண்ணெய் வயிறு நிரம்பிய திருப்தி உணர்வைத் தருகிறது. இதன் மூலம் அதிக அளவு கலோரிகள் உணவின் மூலம் உட்கொள்ளப்படுவது குறைகிறது. இதன் மூலம் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

மன ஆரோக்கியம் :

ஆலிவ் எண்ணெய் நரம்பியல் விளைவுகளைக் கட்டுப் படுத்தி கவலை மற்றும் மனச்சோர்வை திறம்பட குறைக்க உதவுகிறது.

உணவில் எக்ஸ்ட்ரா விரிஜின் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறைவாதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

இந்த என்னெயில் உள்ள உள்ள சேர்மங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன மற்றும் தமனிகள் கடினமாவதைத் தடுக்கின்றன. பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை 40% க்கும் அதிகமாக குறைக்கலாம்.

ஆண்டிஆக்ஸிடண்ட்கள் :

ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால், ஃப்ரீ ரேடிக்கல்களினால் செல்களில் ஏற்படும் சேதப்படுத்தை குறைக்கின்றன. இதன் மூலம் முன் கூட்டிய மூப்பு மற்றும் நோய்களுக்கான வாய்ப்பை குறைக்கின்றன.

பாக்டீரியா எதிர்ப்பு :

ஆலிவ் எண்ணெயில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. ஹெலிகோபாக்டர் பைலோரி  எனும் ஒரு வகை வயிற்றுப் பாக்டீரியா புண்களை ஏற்படுத்தும். ஆலிவ் எண்ணெயில் உள்ள கலவைகள் அதை அழிக்க உதவுகின்றன.

புற்றுநோய் எதிர்ப்பு :

ஆலிவ் எண்ணெய் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் எண்டோமெட்ரியல், மார்பகம், கணையம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் போன்ற சில புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்து மிகவும் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆலிவ் ஆயில் தீமைகள் :

ஆலிவ் ஆயில் பாதுகாப்பு குறித்து போதுமான நம்பகமான தகவல்கள் இல்லை  ஆலிவ் எண்ணெய் இரத்த உறைதலை மெதுவாக்குவதாக சொல்லப்படுகிறது. ஆலிவ் எண்ணெயை இரத்தம் உரைதளுக்கான மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது இரத்தப்போக்குக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்ளும் பொது ஆலிவ் எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தம் மிகவும் குறைய வாய்ப்பு உள்ளது.

இரத்த சர்க்கரையை குறைக்கும் மருந்துகளுடன் ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.