நுங்கு நன்மைகள், நுங்கில் உள்ள சத்துக்கள் மற்றும் நுங்கு தீமைகள் பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
நுங்கு :
பனை மரத்தின் பழம் நுங்கு என்று அழைக்கப்படுகின்றன. உயரமாக வளருக் பனை மரம் பூர்வீகம் இந்தோமாலயா பகுதியில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும்.
நுங்கு சுமார் 4 முதல் 7 அங்குல விட்டம் அளவு காணப்படும். இது பார்ப்பதற்கு ஜெல்லி போல மென்மையாகவும், பனிக்கட்டி போன்ற ஒளி ஊடுருவக் கூடியதாகவும் இருக்கும்.
இதன் சுவை இனிப்பு கலந்த தண்ணீர் போன்று இருக்கும். நுங்கில் காணப்படும் திரவம் மருத்துவ குணங்கள் கொண்டது மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாக பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.
நுங்கில் உள்ள சத்துக்கள் :
பனை நுங்கில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண் பார்வைக்கு நல்லது.
முக்கியமாக வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இருப்பதால் உண்ட உடன் உடனடி புத்துணர்ச்சியை அளிக்கிறது.
மேலும் துத்தநாகம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுச் சத்துக்கள் உள்ளதால் இது ஆரோக்கியமான பழ வகைகளுள் ஒன்றாகும்.
மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
100 கிராம் பனை நுங்கில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு
நீர் சத்து : 77 கிராம்
புரதம் : 1 கிராம்
கொழுப்பு : 0 கிராம்
கார்போஹைட்ரேட் : 21 கிராம்
ஃபைபர் : 0 கிராம்
தாதுச் சத்துக்கள் :
கால்சியம் : 9 மி.கி
பாஸ்பரஸ் : 33 மி.கி
இரும்பு : 0 மி.கி
வைட்டமின்கள் :
தியாமின் : 0.04 மி.கி
ரிபோஃப்ளேவின் : 0.02 மி.கி
நியாசின் : 0.3 மி.கி
வைட்டமின் சி : 5 மி.கி
நுங்கு நன்மைகள் :
நுங்கில் தாதுச் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்.
இதில் வைட்டமின்கள் பி மற்றும் வைட்டமின் சி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், தயாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை நிறைந்துள்ளன.
நுங்கு நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
செரிமான கோளாறுகளை போக்குகிறது :
பல்வேறு வயிறு கோளாறுகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு நுங்கு ஒரு இயற்கை தீர்வாகும்.
இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச் சிக்கலை போக்குகிறது. மேலும் இது வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை மற்றும்
புண்களை தடுக்க உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகள் மற்றும் குமட்டலை போக்க இந்த பழம் உதவுகிறது.
தோல் ஆரோக்கியம் :
வெயில் காலத்தில் ஏற்படும் வியர்குரு போன்ற சில பொதுவான சரும பிரச்சனைகளுக்கு பனம் பழம் சிறந்த மருந்தாகும்.
வியற்குரு வின் மீது நுங்கின் சதைப் பகுதியை தேய்த்து வர நிவாரணம் கிடைக்கும். உடல் சூடு தொடர்புடைய அரிப்புகளை போக்கவும் இது உதவுகிறது..
உடலுக்கு குளிர்ச்சி தருகிறது :
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருகக்க உதவும் பழ வகைகளில் இது முக்கியமானது.
இது உங்கள் உடலுக்கு நீர் சத்தை அளித்து அதிகப்படியான வியர்வையால் இழக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோ லைட்டுகளை அதிகரிக்க உதவுகிறது.
எடையைக் குறைக்க உதவுகிறது :
இதில் உள்ள குறைந்த அளவு கலோரிகள் காரணமாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது நன்மை பயக்கும்.
மேலும் இதில் நிறைந்துள்ள நீர்ச்சத்து வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது.
ஆக்சிஜநேற்றிகள் நிறைந்துள்ளன :
நுங்கில் நிறைந்துள்ள பைட்டோ இரசாயனங்கள் சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
இவை வயதாகும் செயல்முறையை மெதுவாக்குகின்றன. மேலும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போனற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
இதய ஆரோக்கியம் :
நுங்கில் அத்தியாவிஷய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் , பொட்டாசியமும் உள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பொட்டாசியம் அவசியம் ஆகும்.
மாத விடாய் காலத்தில் நல்லது :
பெரும்பாலும், இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வெள்ளைப் படுவது அவர்கள் இளமைப் பருவத்தை கடந்தவுடன் அதிகரிக்கிறது.
மாத விடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்றுவலி, முதுகுவலி, அரிப்பு போன்றவற்றின் காரணமாக உள்ள இந்த பிரச்சனையை நீக்குவதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் காரணமாக இந்தப் பிரச்சனை தீர்வதாக சொல்லப்படுகிறது
கல்லீரல் பிரச்சனைகளில் இருந்து விடுபட :
பனை நுங்கில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது உடலில் தங்கியுள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் கல்லீரலைப் பாதுகாப்பாக வைக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
நுங்கு பயன்கள் :
பனை நுங்கு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
நுங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் கண்கள் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கி கண்களின் திறன் மேம்படும்.
இதில் உள்ள பொட்டாசியம் கல்லீரலை சரியாக நச்சு நீக்க உதவுகிறது.
மேலும் இது சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
வெயில் காலங்களில் உடல் சூடு நீங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கண்டிப்பாக பனை நுங்கை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நுங்கு தீமைகள் :
விஞ்ஞான ரீதியாக நுங்கு பக்க விளைவுகள் பற்றி போதுமான தகவல்கள் இல்லை. பனை நுங்கில் உள்ள ரசாயனங்கள் தீங்கு விளைவிப்பதில்லை.
இருப்பினும் அதிக அளவில் உட்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவை
வயிற்றுக் கோளாறு :
நுங்கில் கனிசமான அளவு நார்ச் சத்து உள்ளது. இது செரிமான ஆரோக்கித்திற்கு மிகவும் நல்லது தான். இருப்பினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
இரத்தச் சர்க்கரை :
நுங்கு மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே அவை இரத்த சர்க்கரை அளவை படிப்படியாக அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க அவசியம் உள்ளவர்கள் பனை நுங்கு அளவுக்கு அதிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் :
நுங்கில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரக அமைப்பில் படிகங்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சிறுநீரக கற்கள் இருந்தாலோ அல்லது உருவாகும் அபாயம் இருந்தாலோ, நுங்கு உட்கொள்ளும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
மேலே குறிப்பிட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் ஒப்பீட்டளவில் மிகவும் அரிதாகவே ஏற்படுகின்றன. எனினும் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படின் மருத்துவரை அணுகுவது நல்லது.