நூக்கல் (அ) நூல்கோல் நன்மைகள் மற்றும் தீமைகள்

0

நூக்கல் :

நூக்கல் பொதுவாக தமிழில் நூல்கோல் என்றும் வட இந்தியாவில் கோஹ்ராபி, ஜெர்மன் டர்னிப் என்றும் அழைக்கப்படுகிறது.

நூல்கோல்

நூக்கல், பிராசிகா ஒலரேசியா (Brassica oleracea) குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இது சற்று இனிப்பு சுவையுடன் ப்ரோக்கோலியை சுவையை ஒத்ததாக இருக்கும்.

மேலும் நூல்கோல் தாவரத்தின் தண்டு மற்றும் இலைகளும் சமைத்து உண்ணப்படுகின்றன.

இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட காய்கறி ஆகும். இது ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. 

 

நூக்கல் நன்மைகள்

நூக்கல் உண்ணும் போது அதன் ஆக்சிஜனேற்ற பண்புகள் காரணமாக புற்றுநோய், இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரை நோய், கீல்வாதம், மூல நோய், அதிக கொழுப்பு, கல்லீரல் நோய், மாதவிடாய் அறிகுறிகள், சியாட்டிகா எனப்படும் வலிக் கோளாறு, ஸ்கர்வி, உடல் எடை குறைப்பு மற்றும் காயம் குணமடைதல் போன்றவற்றுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.

நூக்கல் அல்லது நூல்கோல் நன்மைகள் பற்றி கீழே காணலாம்.

குடலுக்கு நல்லது :

பெரும்பாலான அணைத்து காய்கறிகளைப் போலவே, நூக்களும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.

நூல்கோல் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், தசைப்பிடிப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

மேலும் இது ஊட்டச் சத்துக்கள் குடலால் உறிஞ்சப் படுவதை ஊக்குவித்து இரைப்பை மற்றும் குடல் அமைப்பின் தரத்தை மேம்படுத்துகிறது.

கண்களுக்கு நல்லது :

2013 ஆம் ஆண்டு ஜர்னல் ஆப் இன்டர்வென்சன் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் நூக்கல் பீட்டா-கரோட்டின் உட்பட கரோட்டின்களின் சிறந்த மூலமாக உள்ளது.

எனவே இது உடலில் குறிப்பாக கண்களில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் ஏ மாகுலர் சிதைவைத் தடுக்கவும், கண்புரையின் தோற்றத்தை மெதுவாக்கவும் உதவுகிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

எலும்புகளுக்கு நல்லது :

பொதுவாக வயதாகும் போது எலும்புகள் தவிர்க்க முடியாமல் பலவீனமடைகின்றன.

ஆனால் அந்த செயல்முறையை அதிக மாங்கனீசு, இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் மெதுவாக்கலாம்.

இந்த சத்துக்கள் நூக்கலில் மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும் போது கனிசமான அளவு உள்ளன.

இரத்த அழுத்தம் :

நூக்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. 

பொட்டாசியம் ஒரு வாசோடைலேட்டராக செயல்பட்டு திடீரெனே இரத்த அழுத்தம் உயர்வதைக் குறைக்கிறது.

இது தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள பதற்றத்தை குறைத்து போதுமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகிறது. இது உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது.

இரத்த சோகை பாதுகாப்பு :

பொட்டாசியம் தவிர நூக்களில் இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

இரும்புச்சத்து உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை (RBC) அதிகரிக்க உதவுகிறது. இது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையை தடுக்க அவசியமாகும். இந்த குறைபாடு பலவீனம், சோர்வு, தலைவலி, வயிற்று கோளாறுகள் போன்றவை இதன் அறிகுறி ஆகும்.

மேலும் நூக்களில் காணப்படும் கால்சியம், உடலால் இரும்புச் சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவுகிறது.

வளர்ச்சிதை மாற்றம் :

நூல்கோல் பி வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். இவை உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுவதாக அறியப்படுகிறது.

வைட்டமின் பி ஒரு நொதி எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இது உடலில் சரியான தசை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

ஆற்றல் மூலம் :

பொட்டாசியம் என்பது உடல் சரியாக செயல்பட தேவையான சத்துக்களில் ஒன்றாகும். இது தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது.

இது உடலில் உள்ள ஆற்றல் அளவை சீராக வைக்கிறது. மேலும் இது இதய தசைகளின் சீரான செயல் பாட்டிற்கும் அவசியம் ஆகும்.

எடை இழப்புக்கு உதவுகிறது :

ஜர்னல் இன்டிகிரேடிவ் மெடிசினில் (Journal Integrative Medicine) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், உடல் எடை குறைக்கும் காய்கறிகளில் நூக்கல் சிறந்தது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதிலுள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக அளவு நார்ச்சத்து பசியைக் கட்டுப் படுத்தி உடலில் அதிக கலோரிகள் சேர்க்கப்படுவதைக் குறைத்து உடல் எடை குறைப்பில் உதவுகிறது.

நூக்கல் தீமைகள் :

நூக்கல் அல்லது நூல்கோல் போதுமான அளவு உணவாக உண்ணும் போது ஆரோக்கியமான நபருக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுட்டுவதில்லை.

இருப்பினும்  அளவுக்கு அதிகமாகவோ அல்லது பச்சையாகவோ உண்ணும் போது, வாயு, வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

கர்ப்பம் மற்றும் தாய்ப்பால்: கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நூக்கள் பாத்துக்காப்பானதா என்பது பற்றி போதுமான தகவல்கள் இல்லை. எனவே மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்வது சிறந்தது.

NO COMMENTS