வைட்டமின் பி3 :
நியாசின் அல்லது வைட்டமின் பி3 வைட்டமின் பி வகைகளில் ஒன்றாகும். மேலும் நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் ஒன்றாகும்.
வைட்டமின் பி3 என்பது நியாசின் (நிகோடினிக் அமிலம்), நிகோடினமைடு (நியாசினமைடு) மற்றும் நிகோடினமைடு ரைபோசைடு ஆகிய மூன்று வைட்டமின் பி 3 வடிவங்களைக் குறிக்கிறது.
வைட்டமின் B3 இன் இந்த மூன்று வடிவங்களும் உடலுக்குள் நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடை (அதாவது NAD) உருவாக்க உதவுகின்றன.
மேலும் B3 வைட்டமின்கள் அல்லது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலம் டிரிப்டோபான் இல்லாமல் NAD ஐப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
வைட்டமின் பி 3 வடிவங்களில் நியாசின் மிகவும் சக்திவாய்ந்த வடிவமாகும். பொதுவாக வைட்டமின் B3 நியாசின் என்று குறிப்பிடப்படுகிறது.
1937 ஆம் ஆண்டு உயிர் வேதியியலாளர் கான்ராட் எல்வெஹ்ஜெம் என்பவரால் கல்லீரலில் இருந்து நியாசின் முதன்முதலில் பிரித்தெடுக்கப்பட்டது.
வைட்டமின் பி3 குறைபாடு :
பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகள் மூலம் கிடைப்பதால் வைட்டமின் பி3 குறைபாடு என்பது அரிதானது.
இருந்தாலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், எய்ட்ஸ், அனோரெக்ஸியா நெர்வோசா, கல்லீரல் செயலிழப்பு, தொடர்ந்த குடிப்பழக்கம், அல்லது பிற மருத்துவப் பிரச்சனைகள் மற்றும் முற்றிலும் வைட்டமின் B3 இல்லாத உணவுகளை தொடர்ந்து உண்பவர்களுக்கும் வைட்டமின் பி 3 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வைட்டமின் பி3 குறைபாடு அறிகுறிகள் :
- தோல் வெடிப்பு அல்லது நிறமாற்றம்
- பிரகாசமான சிவப்பு நாக்கு
- வாந்தி
- மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு
- மன அழுத்தம்
- சோர்வு
- தலைவலி
- நினைவாற்றல் இழப்பு
- பசியிழப்பு
வைட்டமின் பி3 பயன்கள் :
வைட்டமின் B3 செயல்பாடுகள் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் இது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம் ஆகும்.
மேலும் செரிமான அமைப்பு, தோல், முடி மற்றும் நொதிகளின் தொகுப்புக்கு தேவைப்படுகிறது.
மற்ற எல்லா வைட்டமின்களைப் போலவே, வைட்டமின் b3 யும் உணவை உடைத்து ஆற்றலை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உயிரணுக்களின் சமிக்ஞை செயல்பாடு, டிஎன்ஏவை ஒருங்கிணைத்து சரிசெய்தல் மற்றும் 200 க்கும் மேற்பட்ட நொதிகளின் செயல்பாட்டில் உதவுகிறது.
இது கல்லீரல் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி, பார்வைப் பிரச்சனைகள், அனீமியா, தலைச்சுற்றல், பதட்டம், ஹைப்போ தைராய்டிசம், ரேனாட்ஸ் நோய் மற்றும் ஆண்களில் விறைப்புத்தன்மை குறைபாடு போன்றவற்றுக்கு சிகிச்சை யளிக்கவும் பயன்படுகிறது.
வைட்டமின் பி3 நன்மைகள் :
நீரிழிவு நோய் :
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
வைட்டமின் பி 3 கொண்ட உணவுகள், β- கணைய செல்களில் இருந்து இன்சுலின் வெளியீட்டை போதுமான அளவு கட்டுப்படுத்துகிறது.
இதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மூளை செயல்பாடு :
வைட்டமின் b3 மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது மூளை செல்களை சரிசெய்வதில் உதவுகிறது.
மேலும் ஸ்கிசோஃப்ரினியா, மனச்சோர்வு, மாயத்தோற்றம் போன்ற மனநோய் தொடர்புடைய அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
அல்சைமர் நோயைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் இது பயன்படுகிறது.
ஆக்சிஜனேற்றி :
வைட்டமின் B3 இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
இது பல்வேறு தோல் சம்பந்தமான கோளாறுகளுக்கு சிகிச்சை யளிப்பதிலும், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இது தோல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
அழற்சி எதிர்ப்பு :
வைட்டமின் b3 இன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் அழிப்பதற்கும் பயன்படுகிறது.
மேலும் இது மூட்டுகளுக்கு இடையில் இயக்கத்தை மேம்படுத்தவும் கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன் படுகிறது.
ஹார்மோன் செயல்பாடு :
உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்களின் தொகுப்பு மற்றும் செயல்பாட்டில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிமானம் :
செரிமானத்தை மேம்படுத்தி உணவில் உள்ள சத்துக்கள் உடலால் சரியாக உறிஞ்சப் படுவதை ஊக்குவிக்க உதவுகின்றன.
மேலும் குடலில் இருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதன் மூலம் இரைப்பை குடல் அமைப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
மேலும் இது மலச்சிக்கல் மற்றும் வாயு கோளாரை குறைக்கிறது.
வைட்டமின் பி 3 நிறைந்த உணவுகள் :
- 100 கிராம் டுனா மீனில் 22.1 மி.கி நியாசின் உள்ளது.
- 100 கிராம் வேர்க்கடலையில் 14.4 மிகி வைட்டமின் பி 3 உள்ளது.
- 100 கிராம் கோழி கறியில் 9.5 மில்லிகிராம் வைட்டமின் B3 கிடைக்கிறது.
- 100 கிராம் மாட்டிறைச்சியில் 5.6 மில்லி கிராம் நியாசின் உள்ளது.
- 100 கிராம் காளானில் 6.3 மி கி வைட்டமின் b3 உள்ளது.
- 100 கிராம் பழுப்பு அரிசியில் 2.6 மி.கி வைட்டமின் b3 உள்ளது.
- 100 கிராம் பச்சை பட்டாணியில் 2 மி.கி வைட்டமின் b3 உள்ளது.
- 100 கிராம் வெண்ணெய் பழத்தில் 1.7மி கி வைட்டமின் b3 உள்ளது.
- 100 கிராம் உருளைக் கிழங்கில் 1 மி கி வைட்டமின் பி3 உள்ளது
[…] நியாசின் மற்றும் ஃபோலேட்டுகள் போன்ற பி-குழும […]
[…] வைட்டமின் பி3 : 0.594 மி. கி […]
[…] நியாசின் (வைட்டமின் பி3), பாந்தோத்தேனிக் அமிலம் (வைட்டமின் […]
[…] நியாசின், கோலின் மற்றும் துத்தநாகமும் […]
[…] நீயாசின் : 0.75 மி. கி […]
[…] அமிலம், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா […]