நரிப் பயறு :
நரிப் பயறு தமிழில் பொதுவாக தட்டாம் பயறு, அந்துப் பூச்சு பயறு என்றும் ஹிந்தியில் மட்கி என்றும் ஆங்கிலத்தில் மோத் பீன் (Moth Bean) என்றும் அழைக்கப்படுகிறது.
இது பழுப்பு நிறத்தில் நீள்வட்ட வடிவத்தில் பழுப்பு நிறத்தில் காணப்படும். பொதுவாக இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப் படுகிறது.
இது புரதச்சத்து நிறைந்தது மற்றும் சைவ உணவு உண்பவர்களின் முக்கிய உணவாகும்.
இவை அணைத்து இந்திய மளிகைக் கடையிலும் எளிதாகக் கிடைக்கிறது. மேலும் சமைக்க எளிதானது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும்.
இந்த பருப்பை காற்று புகாத உலர்ந்த கொள்கலனில் சேமித்து வைத்தால் சில மாதங்களுக்கு கெடாமல் இருக்கும்.
நரிப் பயறு நன்மைகள்
நரிப்பயறு புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்களின் சிறந்த மூலமாகும். எனவே தினசரி உணவின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் நல்லது.
எலும்புகளை வலுவாக்குகிறது :
ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அல்லது எலும்பு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துபவர்களுக்கு நரி பயறு அவசியமான உணவாகும்.
ஏனெனில் இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் எலும்பு தொடர்பான கோளாறுகளைத் தடுப்பது மட்டுமல்லாமல், அவற்றை பலப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது:
உலகம் முழுவதும் கொடிய கொரோனா போன்ற நோய்கள் பரவி வரும் வேலையில் உடல் நோயேதிர்ப்பு மண்டலத்தைப் பலப் படுத்துவது அவசிமான ஒன்று.
நரிப் பயரில் உள்ள கனிசமான அளவு துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது :
பொதுவாக சைவ உணவர்களுக்கு தாவர அடிப்படையிலான புரதச் சத்து மூலங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அந்த பட்டியல் நரிப்பயறு முக்கியமான இடத்தில் உள்ளது.
குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது:
எல்லாப் பருப்பு வகைகளைப் போலவே, நரிப்பயறும் செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும்,
இது குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கலைத் தடுப்பது மட்டுமல்லாமல் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது:
நரிப்பயாறு தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மன அழுத்தத்தையும் திடீர் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த பருப்பு வகைகளில் உள்ள முக்கிய கூறுகளில் ஒன்றான துத்தநாகம், கவலை மற்றும் மன அழுத்தத்தின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் பி நிறைந்துள்ளது :
மனித உடலின் சரியான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி மிகவும் அவசிமான ஊட்ட சத்துக்களில் ஒன்றாகும்.
சைவ உணவை மட்டுமே உண்பவர்கள் வைட்டமின் பி தேவைகளை உணவின் மூலம் பூர்த்தி செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இருப்பினும், நரிப் பயரில் பல்வேறு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களின் சிறந்த மூலமாக இருப்பதால் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் செல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
இதயத்தைப் பாதுகாக்கிறது:
இதய ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அளவுகள் பல இதய பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
இதய நோயாளிகள் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
நரிப்பயரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சிறந்த புரத மூலம் :
மற்ற பருப்பு வகைகளைப் போலவே, நரிப் பயறும் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது தசைகளை உருவாக்குவதற்கும் சரி செய்வதற்கும் அவசியம்.
தாவர உணவுப் பொருட்களிலிருந்து புரதத்தைப் பெற வேண்டிய சைவ உணவு உண்பவர்களுக்கு இது புரதத்தின் சிறந்த மூலமாகும்.
நரிப்பயறு தீமைகள் :
நரிப்பயறு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அத்தகையவர்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நரிப்பயறு அதிக அளவில் சாப்பிடுவது சிலருக்கு வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
வேறு ஏதேனும் அசௌகரியம் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் குடும்ப மருத்துவரின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும்.