முட்டையில் உள்ள சத்துக்கள் மற்றும் முட்டை நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி காணலாம்.
முட்டை :
முட்டை என்பது அனைவரும் அறிந்த ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவாகும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் உணவுத்திட்டத்தில் தவிர்க்க முடியாத உணவாக உள்ளது.
முட்டையில் உள்ள சத்துக்கள் :
முட்டைகளில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றி காணலாம்.
இரண்டு சராசரி அளவு கோழி முட்டையில் உள்ள சத்துக்கள்
- தினசரி வைட்டமின் டி தேவையில் 82%
- தினசரி ஃபோலேட் தேவையில் 50%
- தினசரி ரிபோஃப்ளோவின் (வைட்டமின் பி2) தேவைகளில் 25%
- தினசரி செலினியம் தேவையில் 40% உள்ளது.
- மேலும் கனிசமான அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் பி5, வைட்டமின் பி12 மற்றும் இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
முட்டை நன்மைகள் :
முட்டை நன்மைகள் பின்வருமாறு
புரதம் நிறைந்துள்ளது :
புரதம் உடல் கட்டுமானத் தொகுதிகள், தசை மற்றும் திசுக்களின் வலிமை மற்றும் பழுதுபார்ப்புக்கு அவசியம் ஆகும். ஒரு முட்டையில் சுமார் 5 முதல் 6 கிராம் வரை தரமான புரதம் உள்ளது.
முட்டையில் காணப்படும் புரதச் சத்தில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன.
முட்டைகளை விட சில உணவுகள் விகிதாச்சாரத்தில் அதிக புரதச் சத்துக்களைக் கொண்டிருந்தாலும் தரத்தில் முட்டையில் உள்ள புரதமே சிறந்தது.
வைட்டமின் டி யின் சிறந்த மூலம் :
முட்டையின் மஞ்சள் கருவில் இயற்கையாகவே வைட்டமின் டி கொண்டிருக்கும் ஒரு சில உணவு வகைகளில் ஒன்றாகும்.
வைட்டமின் டி உடல் அமைப்பால் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உறிஞ்சப் படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எலும்புகள் மற்றும் பற்களின் வலிமை மற்றும் பராமரிப்பதற்கு இது அவசியம் ஆகும்.
வைட்டமின் டி தசை செயல்பாடு மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு பராமரிப்பை மேம்படுத்த உதவுகிறது.
ஒமேகா 3 யின் சிறந்த மூலம் :
ஒமேகா-3 என்பது ஒரு வகை பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமாகும். மேலும் அவை உடல் செல் சவ்வுகள் வேலை செய்யும் விதத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதயம் மூளை மற்றும் கண்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு அவசியம் ஆகும்.
உடல் ஒமேகா 3 யை மிகக்குறைந்த அளவே உருவாக்குகிறது. முட்டை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மற்றும் எளிதான மூலமாகும்.
ஒரு முட்டையில் சராசரியாக 80 முதல் 90 மில்லி கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.
கோலினின் சிறந்த மூலமாகும் :
கோலின் என்பது கல்லீரலில் உருவாகும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
இருப்பினும், தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய உண்ணும் உணவின் மூலமாகவும் அதை உட்கொள்ள வேண்டும்.
பி வைட்டமின்களைப் போலவே, சாதாரண செல் செயல்பாட்டிற்கு கோலின் அவசியம் ஆகும்.
மேலும் கர்ப்ப காலத்தில் மூளை மற்றும் முதுகுத் தண்டு வளர்ச்சியிலும் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியிலும் மற்றும் முதியவர்களின் அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைப்பதிலும் உதவுகிறது.
முட்டைகள் கோலினின் சிறந்த மூலமாகும். இதில் மற்ற வகை உணவுகளை விட 100 கிராமுக்கு இரண்டு மடங்கு அதிகமான கோலின் அளவு உள்ளது.
ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளது :
முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் செலினியம் உள்ளிட்ட பலவிதமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
இவை அனைத்தும் கண் ஆரோக்கியம், விழித்திரை செயல்பாடு மற்றும் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பார்வைக் கோலாரை எதிர்க்க உதவுவதில் முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன.
முட்டையில் நிறைந்துள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு உள்ளிட்ட சில கண் நோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் உதவுகின்றன.
இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்ற உணவுகளை விட முட்டைகளிலிருந்து உடலால் எளிதாக உறிஞ்சப்படுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
நல்லக் கொழுப்பு நிறைந்துள்ளது :
நல்ல கொழுப்பு என்று அரியப்படும் அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (HDL) முட்டையில் அதிக அளவில் உள்ளது.
இது கெட்டக் கொழுப்பு என அறியப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பைக் குறைத்து இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
ஊட்டச் சத்துக்களின் எளிய மூலமாகும் :
முட்டைகள் தரமான புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த, எளிதில் கிடைக்கக் கூடிய, விலைமலிவான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய மூலமாகும்.
மேலும் தயார் செய்ய எளிதானது, முட்டைகள் அனைவருக்கும் ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பதற்கான ஒரு எளிய வழிமுறையாகும்.
உடல் எடை குறைக்க உதவுகிறது :
முட்டையில் உள்ள உடல் எடை குறைக்கும் பண்புகள் உடல் எடை குறைப்பில் உதவுகிறது. அவை
- முட்டைகளை உண்பது நீண்ட நேரம் நிறைவாக உணர வைப்பதில் உதவுகிறது.
- முட்டை திருப்தியாக உணர வைக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்பது.
- ஆற்றல் மட்டங்களை அதிகமாக வைத்திருத்தல்
- வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிதல்,
- உணவு வயிற்றில் இருந்து வெளியேறுவதைத் தாமதப் படுத்துதல், மேலும் உயர் தரப் புரதத்தை அளித்தல்
முதலிய உடல் எடை குறைப்பதில் உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது.
முட்டை தீமைகள் :
தினமும் இரண்டு முட்டை உண்பது ஆரோக்கியமான நபருக்கு ஊட்டச் சத்து குறைபாட்டைப் போக்குவதில் உதவுகிறது. இருப்பினும் வெகு சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தலாம்.
முட்டை தீமைகள் பின்வருவருமாறு
- முட்டையில் கனிசமான அளவு புரதம் உள்ளதால் அதிக அளவு சாப்பிடுவது உடல் சூட்டை ஏற்படுத்தலாம்.
- முட்டை அதிக அளவு சாப்பிடுவது சிலருக்கு மூலம், வயிற்றுக் கோளாரையும் ஏற்படுத்தலாம்.
- அதிக அளவு முட்டை சாப்பிடுவதால் அதிக கலோரிகல் உடலில் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.