முருங்கைக்காய் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

1

முருங்கைக்காய் ஆரோக்கிய நன்மைகள், மருத்துவ பயன்கள், மற்றும் முருங்கைக் காய் தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன.

முருங்கைக்காய் :

முருங்கைக்காய் அறிவியல் பெயர் மோரிங்கா ஒலிஃபெரா ஆகும். இதன் பூர்வீகம் தெற்கு ஆசிய நாடுகள் ஆகும்.

முருங்கைக் காய் நன்மைகள்

உலக அளவில் முருங்கை காய் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் முருங்கைக்காய் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

தமிழ் நாட்டில் அனைத்து ஊர்களிலும், கிராமங்களிலும் முருங்கை மரம் வளர்க்கப் படுகிறது.

இருப்பினும் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிக அளவு பயிரிடப் படுகிறது.

முருங்கைக் காய் நன்மைகள் :

முருங்கை மரத்தில் இலை, தண்டு, காய் போன்ற அனைத்து பாகங்களும் உணவகவோ அல்லது மருந்தாகவோ பயன்படுகிறது.

அதில் முருங்கை காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது :

உயர் இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு நோயின் முக்கிய காரணமாகும். இது இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

முருங்கைக் காய் இரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைப்பதாக அறியப்படுகிறது.

ஐசோதியோசயனேட்ஸ் போன்ற சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் பித்தப்பை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரிக்கவும், உறுப்புகள் சிறப்பாக செயல்படவும் முருங்கை காய் உதவுகிறது.

புற்றுநோய் வாய்ப்பை குறைக்கிறது : 

முருங்கைகாய் மற்றும் முருங்கை கீரை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோய் வருவதை 80 சதவீதம் குறைக்கிறது.

மேலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் விரைவாக குணமடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண் பார்வையை மேம்படுத்துகிறது : 

முருங்கைக்காய் நன்மைகள் மற்றும் பயன்களில் முக்கியமானது கண் பார்வையை மேம்படுத்துவது ஆகும்.

விழித்திரை மீது உள்ள நச்சுகளை நீக்கி விழித்திரை ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

எலும்பு பலம் :

எலும்பு வளர்ச்சிக்கு உதவும் இயற்கையான சப்ளிமெண்ட்ஸை தேடுபவர்களுக்கு முருங்கை காய் சிறந்த தேர்வாகும்.

ஏனெனில் இதில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசிமான ஊட்ட சத்துக்களான கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு போன்ற தாதுக்கள் கனிசமான அளவில் உள்ளன.  அவை வலுவான எலும்புகளுக்கு அவசியமானவை ஆகும்.

பெண்களுக்கு நல்லது :

முருங்கைக்காயில் போலிக் அமிலம் உள்ளதால் பெண்களின் மலட்டுத்தன்மை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் இது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லதாகும். மேலும் முருங்கை காய் துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும்.

இது தாய்வழி நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைக்கிறது. மற்றும் குறைப்பிரசவ அபாயத்தை குறைக்கிறது.

கல்லீரலுக்கு நல்லது : 

ஆய்வுகளின்படி, முருங்கைக்காய் கல்லீரலை ஆக்சிஜனேற்றம் மற்றும் சேதத்திலிருந்து தீவிரமாகப் பாதுகாப்பதாக தெரிய வந்துள்ளது.

கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய ஒன்று முருங்கை காய் ஆகும்.

காசநோய் எதிர்ப்பு மருந்துகளால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலைப் பாதுகாக்க இது உதவுகிறது என்றும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி : 

முருஙகை காய் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் தொற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் பல்வேறு மாத்திரைகள் மற்றும் மாத்திரைகளை உட்கொள் கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கை காயை உணவில் சேர்த்து கொள்வது எளிய வழி ஆகும்.

முகப் பருவை போக்குகிறது : 

முருங்கை காய் இரத்த ஓட்டத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணங்களைக் கொண்டுள்ளது.

இந்த குணங்கள் முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

சின்னம்மை பாதுகாப்பு :  

முருங்கைக் காயில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக சிக்கன் பாக்ஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உட்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதை உட்கொள்ள கூறப்படுகிறது.

சிறந்த பாலுணர்வு ஊக்கியாகும் :

முருங்கைக்காய் ஆண்மை பெருக்கியாகவும் சொல்லப் படுகிறது.

தொடர்ந்து முருங்கை காய் உணவில் சேர்த்துக்கொள்வது அல்லது முருங்கை காய் சூப் குடிப்பது பாலுணர்வை தூண்ட உதவுகிறது.

முருங்கைக் காய் தீமைகள் :

பொதுவாக ஒரு ஆரோக்கியமான நபர் முருங்கை காய் அடிக்கடி சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைகின்றன

மேலும் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. முருங்கைக்காய் தீமைகள் பின்வருமாறு

கர்ப்ப காலம் :

கர்ப்ப காலத்தில் முருங்கை காய் சாப்பிடுவது பாதுகாப்பா என்பதை உறுதிப்படுத்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி எதுவும் இல்லை.

கர்ப்பிணிப் பெண்கள் முருங்கை காய் சாப்பிடுவது பற்றி ம்ருத்துவரைச் ஆலோசனை பெற்று கொள்வது சிறந்தது.

இரத்த சர்க்கரை :

முருங்கை காய் இரத்தச் சர்க்கரை அளவை குறைப்பதால் ஏற்கனவே இரத்த குளுக்கோஸைக் குறைக்கும் மருந்துகளை உட்கொண்டிருக்கும் நீரிழிவு நோயாளிகளுகள் தவிர்ப்பது நல்லது.

இரத்த அழுத்தம் :

முருங்கை காய் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது.

இயற்கையாகவே குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அல்லது இரத்த அழுத்தத்தை பராமரிப் பதற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் முருங்கை காய் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

1 COMMENT

  1. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.நன்றி.