Homeஉணவுகள்கீரைகள்முள்ளங்கிக் கீரை மருத்துவ பயன்கள் மற்றும் முள்ளங்கி கீரை சமையல்

முள்ளங்கிக் கீரை மருத்துவ பயன்கள் மற்றும் முள்ளங்கி கீரை சமையல்

முள்ளங்கிக் கீரை நன்மைகள் மற்றும் முள்ளங்கி கீரையை பிரதானமாகக் கொண்டு செய்யப்படுக் உணவு வகைகளான முள்ளங்கிக் கீரை சாம்பார், முள்ளங்கிக்கீரை சாப்பாத்தி, முள்ளங்கி கீரை துவையல் போன்ற முள்ளங்கிக் கீரை ரெசிபிகளின் செய்முறை பற்றி விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

முள்ளங்கி கீரை :

முள்ளங்கிக் கீரை என்பது முள்ளங்கி தாவரத்தின் இலை ஆகும். முள்ளங்கியில் வெள்ளை, சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு வகைகளும் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன.

முள்ளங்கிக் கீரை

முள்ளங்கிக் கீரைக்கு உஷ்ணத்தை அதிகப்படுத்தும் தன்மை இருப்பதால், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கியை உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

பசியின்மை, ருசியின்மை, வயிற்றுவலி, மலச்சிக்கல் உள்ளவர்கள் முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பலன் கிடைக்கும்.

முள்ளங்கிக் கீரை மருத்துவப் பயன்கள்

1. முள்ளங்கிக்கீரையை வெந்தயம் ஊறவைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.

2. முள்ளங்கிக் கீரைச் சாற்றை 30 மி.லி. அளவில் தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துபோகும். சிறுநீர்ப்பை வீக்கமும் குணமாகும்.

3. முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியைக் கலந்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு உடையும். சிறுநீரும் தாராளமாகப் பிரியும்.

4. முள்ளங்கிக் கீரைச் சாற்றுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.

5. முள்ளங்கிக் கீரைச் சாற்றில் மிளகை ஊறவைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.

6. முள்ளங்கிக் கீரைச் சாற்றையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

9.முள்ளங்கிக்கீரைச் சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

10.முள்ளங்கி கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

முள்ளங்கிக் கீரைத் துவையல்

முள்ளங்கிக் கீரைத் துவையல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்

  • முள்ளங்கிக் கீரை – கால் கிலோ
  • மிளகாய் வற்றல் – 10
  • புளி – எலுமிச்சை அளவு
  • பெருங்காயம் – கால் ஸ்பூன்
  • தக்காளி – 2
  • கடுகு, கடலைப் பருப்பு – தலா ஒரு ஸ்பூன்
  • பசுநெய் – ஒரு ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • உளுத்தம் பருப்பு – 5 ஸ்பூன்

செய்முறை

முதலில் கொஞ்சமாக நெய்விட்டு, மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு, தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்து, முள்ளங்கிக் கீரையையும் பொடிப்பொடியாக நறுக்கிப்போட்டு வதக்கவும்.

புளியைக் கரைத்துச் சேர்க்கவும். பிறகு, அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பை வறுத்து, கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அரைத்த விழுதில் சேர்த்துக் கிளறவும்.

முள்ளங்கிக் கீரைத் துவையல் ரெடி….!

முள்ளங்கிக் கீரை சாம்பார்

முள்ளங்கிக் கீரை சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் முள்ளங்கி சாம்பார் செய்முறை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்

  • முள்ளங்கிக் கீரை – ஒரு கப்
  • துவரம் பருப்பு – 100 கிராம்
  • தக்காளி – 2
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்
  • தனியா, மிளகாய்த் தூள் – தலா ஒரு ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி
  • உப்பு, மஞ்சள் – தேவையான அளவு

செய்முறை

முதலில் துவரம் பருப்புடன் மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும்.

பருப்பு நன்கு வெந்தபிறகு தனியா, மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்கவிடவும்.

அடுத்து கீரையையும் சேர்த்து வேகவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவந்த பின் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்க வேண்டும்.

பின்னர் தேங்காய்த் துருவலை அரைத்துச் சேர்த்து, ஒரு கொதி வந்தபின் பருப்பையும் சேர்த்துக் கொள்ளவும். முள்ளங்கிக் கீரை சாம்பார் ரெடி..!

இந்தச் சாம்பாரை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், தலைமுடி நீளமாக, கருமையாக வளரும். சிறுநீரகக் கற்களும் கரைந்துபோகும்.

முள்ளங்கிக் கீரை சப்பாத்தி

முள்ளங்கிக் கீரை சப்பாத்தி செய்ய தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்

  • முள்ளங்கிக் கீரை – ஒரு கட்டு
  • சீரகம் – ஒரு ஸ்பூன்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • கோதுமை மாவு – 2 கப் (400 கிராம்)
  • எலுமிச்சை – ஒரு பாதி
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முள்ளங்கிக் கீரையை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய் ஆகிய வற்றையும் நறுக்கிக்கொள்ளவும்.

மாவில் உப்பு போட்டு, நீர்விட்டுக் கிளறி அரை மணி நேரம் வைக்கவும்.

பிறகு மாவில் முள்ளங்கிக் கீரை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு எலுமிச்சைச் சாறும் எண்ணெய்யும் விட்டுப் பிசையவும்,

பத்து நிமிடம் மாவை வைத்திருந்து, சப்பாத்தியாகச் சுட்டு எடுக்கவும். முள்ளங்கிக் கீரை சப்பாத்தி தயார்….!

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular