மல்பெரி பழம் நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

0

மல்பெரி பழம் நன்மைகள், சத்துக்கள் மல்பெர்ரி பழம் தீமைகள், பக்க விளைவுகள் மற்றும் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது

மல்பெரி பழம் (அ) முசுக்கொட்டை பழம் :

மல்பெர்ரி பழம் தமிழில் முசுக்கொட்டை பழம் என்று அழைக்கப்படுகிறது. இது  அறிவியல் பெயர் மொரஸ் ஆல்பா ஆகும்.

மலபெரி பழம் (அ) முசுக்கொட்டை பழம்

மல்பெர்ரி பழத்தின் பூர்வீகம் தெற்கு ஆசியா ஆகும். உலக அளவில் சீனா வில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

மல்பெரி பழத்தில் உள்ள சத்துக்கள்  :

100 கிராம் மல்பெரி பழத்தில் 0.4 கிராம் கொழுப்பு, 1.4 கிராம் புரதம் மற்றும் 9.8 கிராம் கார்போஹைட்ரேட் 8.1 கிராம் சர்க்கரை மற்றும் 1.7 கிராம் நார்ச் சத்து உள்ளது.

100 கிராம் மல்பெரி பழத்தில் 36.4 மில்லி கிராம் வைட்டமின் சி 0.87 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 7.8 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது.

100 கிராம் மல்பெரி பழத்தில் 1.85 மில்லி கிராம் இரும்பு சத்து , 39.00 மில்லி கிராம், கால்சியம், 38 மில்லி கிராம் பாஸ்பரஸ், 18 மில்லி கிராம் மக்னேசியம், 194 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.

மல்பெரி பழம் நன்மைகள் :

மல்பெரி பழம் அதாவது முசுக்கொட்டை பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

மல்பெரி பழம் நன்மைகள்

கல்லீரல் ஆரோக்கியம் : 

மல்பெரி பழங்கள் கல்லீரலை வலுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் இரும்பு சத்தை கொண்டுள்ளன.

முசுக்கொட்டை பழம்  கல்லீரலில் உள்ள இரத்தத்தை ஊட்டமளிக்கின்றன மற்றும் சுத்திகரிக்கின்றன.

காய்ச்சல் மற்றும் சளி வராமல் தடுக்கிறது : 

அடிக்கடி காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் மல்பெரி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெள்ளை நிற வகை முசுக்கொட்டைப் பழங்கள் இயற்கையில் அஸ்ட்ரிஜென்ட் மற்றும் பாக்டீரியாவைக் கொல்வதாக அறியப்படுகிறது.

இதனால் அவை காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தைத் தடுக்கின்றன. மேலும் அவற்றில் உள்ள ஃபிளாவ னாய்டுகளும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

மல்பெரிகள் மேக்ரோபேஜ்களில் இருக்கும் ஆல்கலாய்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் முசுக்கொட்டைப் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றொரு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் சத்து ஆகும்.

எலும்பு திசுக்களை உருவாக்குகிறது :

வைட்டமின் கே, கால்சியம் மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் வலுவான எலும்பு திசுக்கள் மற்றும் எலும்புகளை உருவாக்க உதவுகிறது.

மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு சிதைவின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது மற்றும் எலும்புப்புரை மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்கிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது :

வெள்ளை முசுக்கொட்டைப் பழங்ககளில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் டைப் -2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன் படுத்தப்படும் மருந்துகளை ஒத்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது :

முசுக்கொட்டை பழத்தில் அந்தோ சயினின்கள் நிறைந்து காணப் படுகின்றன. அவை புற்றுநோய் செல்களைத் தடுக்கின்றன.

அவற்றில் ரெஸ்வெராட்ரோலும் உள்ளது. இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

மேலும் பெருங்குடல் புற்றுநோய், தோல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் தைராய்டு ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மலச் சிக்கலை போக்குகிறது :

செரிமானத்தை எளிதாக்க தேவையான நார்ச்சத்து முசுக் கொட்டைப் பழத்தில் கனிசமான அளவு உள்ளது.

இது மலத்தை இலக்குகிறது மற்றும் செரிமானப் பாதை வழியாக உணவின் இயக்கத்தை எளிதாக்குகிறது.

இந்த செயல்முறை மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது :

முசுக்கொட்டைப் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நாளங்களை விரிவடைய செய்வதன் மூலம் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்து கின்றன.

மேலும் இது இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்கு கிறது.

முசுக் கொட்டைப் பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

மேலும் முசுக்கொட்டைப் பழத்தில் உள்ள பாலிபினால்கள் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அவற்றில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

மூளை ஆரோக்கியம் :

மல்பெரிகளில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை மூளை ஆரோக்கியத்திற்கு முக்கிய நன்மை பயக்கிறது.

கண் ஆரோக்கியம் :

மல்பெரிகளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் பல்வேறு வயது தொடர்பான கண் கோளாறுகளை தடுக்க உதவி செய்கிறது.

மேலும் மல்பெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின் சி கண்புரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

இரத்த சோகையை தடுக்கிறது :

முசுக்கொட்டைப் பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.

சோர்வு மற்றும் மயக்கம் போன்ற இரத்த சோகையின் அறிகுறிகளையும் அவை குணப்படுத்துகின்றன.

மல்பெரி பழம் தீமைகள் :

முசுக்கொட்டை பழம் அல்லது மல்பெரி பழம் தீமைகள் பின்வருமாறு

கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது வெள்ளை மல்பெரி பழங்கள் உட்கொள்வது பாதுகாப்பானதா என்பது பற்றி போதுமான ஆதாரங்கள் இல்லை.

வெள்ளை மல்பெரி நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் மல்பெரி பழம் சாப்பிடும் பொழுது இரத்தச் சர்க்கரை அளவை கண்காணித்து கொள்ள வேண்டும்.