முளைகட்டிய தானியம் நன்மைகள், சத்துக்கள் மற்றும் முளை கட்டிய தானியம் பயன்கள் குறித்து விரிவாகக் காணலாம்.
முளை கட்டிய தானியங்கள் :
முளை கட்டிய தானியம் பயன்கள், நன்மைகள் மற்றும் ஊட்ட சத்து செறிவு காரணமாக சூப்பர் புட் என்று சில நாடுகளில் கருத்தப்படுகிறது.
பொதுவாகவே தானியங்கள் ஊட்ட சத்து மிகுந்தவையாக காணப்படுகின்றன.
அதிலும் முளை கட்டிய தானியங்களை சாப்பிடுவது பல்வேறு ஊட்ட சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன.
அப்படி பட்ட தானியங்களை நாளைக்கு ஒரு வேலையாவது நாள் ஒன்றுக்கு ஒரு வகை தானியம் வீதம் குறைந்த அளவாவது சேர்த்து கொள்வது ஊட்ட சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியமாகும்.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற வகை தானியங்களை வீட்டில் வைத்து முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைகட்டிய தானிய உணவு எனப்படும்.
தானியங்களை நீரில் நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நீரை வடிகட்டி ஈரமான பருத்தி துணியில் சுற்றி 8 முதல் 10 மணி நேரம் வரை வைக்க வேண்டும்.
10 மணி நேரம் கழித்து பார்த்தால் தானியம் முளைவிட்டு இருக்கும்.
இந்த தானிய உணவானது அற்புதமான ஆரோக்கிய பலனையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான விலையில் எளிதாக தயாரிக்கப் படும் அற்புதமான உயிர் உணவாகும்.
பொதுவாக நவீன காலத்தில் இதன் பயன் பலராலும் அறிந்திரப் படாத ஒன்றாக இருக்கிறது இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் இது அனைத்து குடும்ப உணவாகவே மாறி விடும்.
முளை கட்டிய தானியம் நன்மைகள்
முளை கட்டிய தானியம் நன்மைகள், சிறப்பியல்புகள் பற்றி காணலாம்.
முளை கட்டிய தானியங்களின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற உடல் ஆரோக்கித்திற்கு இன்றிமையாத ஊட்டச் சத்துக்கள் சாதாரண தானியங்களை விட கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, விட்டமின் பி1 மற்றும் விட்டமின் பி2 போன்ற வைட்டமின் சத்துக்களும் அபரிவிதமாக கிடைக்கிறது.
பொதுவாக தானியங்கள் முளைக்கும்போது, ஊட்டச்சத்து எதிர்ப்புச் சத்துக்கள் அகற்றப்பட்டு, எளிதாக ஜீரணம் ஆகி மற்ற வைட்டமின்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.
சூடு படுத்தி சமைக்கும் போது வைட்டமின் அளவு குறைகிறது அதே சமயம் , முளை விட வைப்பது ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது.
தானியங்கள் முளைப்பதினால் அதிலுள்ள புரத சத்தின் அளவு அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
முளை விடும் போது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகரிக்கின்றன.
மேலும் சில அமினோ அமிலங்கள் 30 சதவீதம் வரை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இதில் உள்ள புரதச் சத்து ஜீரணிக்க எளிதாக இருக்கும் முளைக்கும் செயல்முறை சில கடினமான மாவுச்சத்தை உடைப்பதன் மூலம் ஊட்டச்சத்துக்களின் சதவீதத்தை அதிகமாக்குகிறது.
முளை விட வைக்கும் போது வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்கlள் உடலால் உறிஞ்சப் படுவதைக் குறைக்கும் பைடிக் அமிலத்தின் ஒரு வடிவமான பைட்டேட்டையும் உடைக்கிறது.
இதன் காரணமாகவே சாதாரண தானியங்களை விட முளைத்த தானியங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது.
முளைப்பதால் துத்தநாகம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகிய தாத்துக்கள் உடலுக்கு கிடைக்கும் தன்மையை எளிதாங்குகிறது மற்றும் அதிகரிக்கிறது.
முளைப்பது சில தானியங்களில் காணப்படும் பீனால் மற்றும் டானின் போன்றவற்றையும் குறைக்கிறது.
இதன் அளவு ஊற வைக்க எடுத்து கொள்ளும் நீரின் pH, முளைக்கும் முளையின் நீளத்தைப் பொறுத்து மாறுபடும்.
முளைப்பது தானியங்களில் உள்ள ஒருவகை கரையாத நார்ச்சத்தின் அளவை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
இது ஒரு வகை நார்ச்சத்தானது மலத்தை உருவாக்கி குடல் வழியாக நகர்த்த உதவுதன் மூலம் மலச்சிக்கலின் வாய்ப்பைக் குறைக்கிறது.
முளை கட்டிய தானிய உணவுகள் மிகவும் சத்தான உணவாக விளங்குவதால் காலை உணவுடன் உண்ணலாம்.
இதில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிக அளவு புரதங்கள் நிறைந்துள்ளன.
மேலும் முளைவிடும் போது புரதம் மட்டுமின்றி, ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்றவையும் நிறைந்துள்ளன.
முளைகளில் போதுமான வைட்டமின் சி உள்ளது. இது சிறந்த ஆக்சிஜனேற்றியாக இருப்பதால் உடலில் உள்ள அனைத்து ஃப்ரீ ரேடிக்கல்களையும் அழித்து முடியை வலுவாக்குகிறது.
இது அலோபீசியா, ஹிர்சுட்டிசம் போன்ற பல்வேறு கூந்தல் கோளாறுகளைத் தடுக்கிறது மற்றும் முடி ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
முளை கட்டிய தானியம் பயன்கள் :
முளை கட்டிய தானியம் பயன்கள் மற்றும் எந்தெந்த தானிய வகைகளின் என்னென்ன நன்மைகள், ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம்.
- முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
- முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.
- இளைத்தவனுக்கு எள்ளு என்று சொல்வார்கள். முளைவிட்ட எள்ளு சாப்பிடுவது ஒல்லியானவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க உதவும் மற்றும் கண்பார்வை மேம்படும்.
- முளைவிட்ட கொண்டக்கடலை உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றல் தருவதால். விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிக அளவு சாப்பிடுவதின் மூலம் அதிக கடின வேலையின் காரணமாக ஏற்படும் ஆற்றல் இழப்பை குறைக்கலாம்.
- முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்மார்களுக்குதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.
- கொள்ளு உடல் எடை குறைக்க பயன்படுகிறது. அதிலும் முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் மேலும் மூட்டு வழி தீரும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தி எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.
மிக்க நன்று பயனுள்ள தகவல்கள்
அருயையான எளிய விளக்கபம்
மிக்க நன்றி