முகம் பொலிவு பெற உணவுகள்

0

முகம் பொலிவு பெற உணவுகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் வித்தியாசத்தை உணரலாம்.

முகம் பொலிவு பெற

பொதுவாக சரும பொலிவு மற்றும் பளபளப்பிற்கு பல வகையான மேற் பூச்சுக்கள் பயன்படுத்தினாலும் சிலருக்கு நல்ல பலன் கிடைப்பதில்லை.

முகம் பொலிவு

ஆனால் சரும பளபளக்க வைக்க உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து உண்பதன் மூலம் சிறந்த பலன்களைப் பெற முடியும்.

முகம் பொலிவு பெற உணவுகள் :

நார்ச் சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் மற்றும் கீரைகள் சரும பொலிவிற்கு உதவுகிறது.

அந்த வகையில் மிகவும் பலன் தரக்கூடிய மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய விலை மலிவான உணவுகள் பற்றி காணலாம்.

முகம் பொலிவு பெற மாதுளை

மாதுளை சாப்பிடுவது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும்.

முகம் பொலிவு பெற மாதுளை

மேலும் இது முதுமை எதிர்ப்பு மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் சேதத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும் உதவுகிறது. தினமும் மாதுளை சாப்பிடுவது அல்லது ஜுசாகக் குடிப்பது முகம் பளபளப்புடன் இருக்க உதவுகிறது. (மாதுளம் பழம் சத்துக்கள், நன்மைகள் மற்றும் தீமைகள்)

முகம் பொலிவு பெற எலுமிச்சை :

எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பாஸ்பரஸ் கனிசமான அளவு இருப்பதாக அறியப்படுகிறது. இது இயற்கையான முறையில் சரும பளபளப்பை பெற உதவும் எளிய வழியாகும்.

முகம் பொலிவு பெற எலுமிச்சை

எலுமிச்சையில் காணப்படும் இயற்கையான அமிலங்கள் இறந்த சரும செல்களை வெளியேற்றி, சருமத்தை இளமையோடு வைத்திருக்க உதவுகிறது. தினமும் காலையில் எழுந்த உடன் வெரும் வயிற்றில் எலுமிச்சை குடிப்பது சரும பளபளப்பிற்கு உதவும்.

முகம் பொலிவு பெற பீட்ரூட் :

பீட்ரூட்டில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இறந்த சரும செல்களை அகற்றி புதிய செல்களை உருவ்வாக்குவதில் உதவுகிறது. உடலில் ஏற்படும் செல் சேதத்திற்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.

முகம் பொலிவு பெற பீட்ரூட்

மேலும் இரத்தத்தை சுத்திகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, சருமத்தை பளபளப்பாக்கு வதில் உதவுகிறது. பீட்ரூட் ஜூஸ் தொடர்ந்து ஒரு வாரம் குடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள நச்ச்சுக்களை நீக்கி உள்ளிருந்து சுத்தப்படுத்தி முகம் ஆரோக்கியமான பொலிவுடன் இருக்க உதவுகிறது. (பீட்ரூட் நன்மைகள் மற்றும் தீமைகள்)

முகம் பொலிவு பெற தயிர் :

பொதுவாக முகத்தில் சுருக்கங்கள் ஏதும் இல்லாமல் பளபளப்பனா மற்றும் வெள்ளையான சருமத்தை உடையவர்களை தயிர் சாதம் என்று கிண்டல் செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு காரணம் தொடர்ந்து தயிரை உணவில் பயன்படுத்துபவர்களுக்கு சருமம் பிரச்சினை இன்றி பொலிவுடன் காணப்படும்.

முகம் பொலிவு பெற தயிர்

தயிரில் நிறைந்துள்ள லாக்டிக் அமிலம், துத்தநாகம், பி வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் காரணமாக தயிர் சாப்பிடுவது சருமத்தைப் பொலிவுடன் பளபளப்பாக வைய்திருக்க உதவுகிறது.

சிலருக்கு தயிர் குடிப்பது சளி, தலையில் நீர் கோர்ப்பது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகையவர்கள் கவனத்துடன் தயிரை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். (தயிர் நன்மைகள் மற்றும் தீமைகள்)

முகம் பொலிவு பெற கற்றாழை :

கற்றாழை ஜெல் சாப்பிடுவது வெயிலினால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கவும், தழும்புகள், மற்றும் வடுக்களை குணப்படுத்தவும், சருமத்தை ஈரப் பதம் மற்றும் இளமையோடு வைத்திருக்கவும் முக்கியமாக சருமத்தை பளபளப்பாக பொலிவுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

முகம் பொலிவு பெற சோற்றுக் கற்றாழை

கற்றாழை ஜெல்லை காலையில் எழுந்த உடன் வெரும் வயிற்றில் சாப்பிட வேண்டும். கற்றாழையில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து அதில் உள்ள வளவளப்பு முற்றிலுமாக போகும் வரை நன்றாக பத்து முறை அரிசி கழுவிய தண்ணீரால் கழுவ வேண்டும். (கற்றாழை நன்மைகள் மற்றும் தீமைகள்)