முடி வளர உதவும் உணவுகள் மற்றும் சத்துக்கள்

0

முடி வளர உதவும் உணவுகள் மற்றும் சத்துக்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

முடி பராமரிப்புப் பொருட்களைப் தலை முடியில் மேற்பூச்சாக பயன்படுத்துவதால், எந்தப் பலனும் கிடைக்கவில்லையா? அதனுடன் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் சேர்த்து உண்பதன் மூலம் முடி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

முடி வளர உதவும் உணவுகள்

முடி வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச் சத்துக்கள் மற்றும் எளிதாகக் கிடைக்கக் கூடிய உணவுகள் என்ன என்பதைக் காணலாம்.

முடி வளர உதவும் சத்துக்கள் :

புரதச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள், பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை முடி வளர்ச்சிக்கான சிறந்த வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்களில் ஒன்றாகும்.

மேலும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் டி, பயோட்டின் மற்றும் துத்தநாகம் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது, முடி வளர்ச்சிக்கு உதவும்.

முடி வளர உதவும் உணவுகள் :

அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் என்பது மரபியல், முடி பராமரிப்பு, லைஃப் ஸ்டைல், வானிலை மற்றும் நீர் மற்றும் உணவு உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து அமைவதாகும்.

புரதம் :

வலுவான கூந்தலுக்கு புரதச் சத்து மிக முக்கியமான ஒன்றாகும். முடியின் பெரும்பகுதி புரதத்தால் ஆனதால் தினமும் கனிசமான அளவு புரதத்தைப் பெறுவது முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் ஆகும்.

கோழி, மீன், வான்கோழி, முட்டை மற்றும் பால் பொருட்கள் முதலில் அசைவ உணவுகளிலும், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் தினைகள் உள்ளிட்ட தாவர உணவுகளிலும் புரதம் நிறைந்துள்ளது.

இரும்பு :

முடி வளர்ச்சிக்கான மற்றொரு அவசிமான தாது இரும்பு ஆகும். இரும்புச் சத்து ஆக்ஸிஜனை கொண்டு செல்வதன் மூலம் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

இரும்புச் சத்துக் குறைபாட்டால் தோன்றும் இரத்த சோகையின் முக்கிய அறிகுறி முடி உதிர்தல் ஆகும்.

சிவப்பு இறைச்சி, கீரை, பீட்ரூட், ஆப்பிள்கள், சோயாபீன்ஸ், ப்ரோக்கோலி போன்றவை கருவேப்பிலை இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.

பயோட்டின் :

பயோட்டின் என்பது ஒரு நீரில் கரையக் கூடிய வைட்டமின் ஆகும். வைட்டமின் B7 அல்லது H என்றும் அழைக்கப்படுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

பயோட்டின் குறைபாடு முடி நிறமாற்றம் மற்றும் மெல்லிதான முடிக்கு காரணமாக அமைகிறது. பயோட்டின் பொதுவாக வாய்வழி முடி வளர்ச்சி சப்ளிமெண்ட்ஸ் மற்றும் ஷாம்பூக்களில் பயன்படுத்தப் படுகிறது.

முழு தானியங்கள், கல்லீரல், முட்டையின் மஞ்சள் கரு, சோயா பீன்ஸ், கிரான்பெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ஈஸ்ட் போன்ற உணவுகளில் பயோட்டின் கனிசமான அளவு காணப்படுகிறது.

வைட்டமின் சி :

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது உடலில் சிறப்பாக செயல்பாடுகிறது.

ஏனெனில் வைட்டமின் சி உடலால் இரும்புச் சத்து உறிஞ்சப் படுதலை மேம்படுத்துகின்றன.

மேலும் வைட்டமின் சி கொலாஜன் உருவாக்கத்திற்கு அவசியமாகும். ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய், அவுரிநெல்லிகள், ஆரஞ்சு மற்றும் பப்பாளி போன்ற உணவுகளில் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி காணப்படுகிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் :

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் முடி மற்றும் உச்சந்தலைப் பகுதியை நீரேற்றமாக வைத்திருக்க உதவுப்பதன் மூலம் முடி வளர்ச்சியில் உதவுகிறது. எனவே இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

கானாங்கெளுத்தி, இந்திய சால்மன், ட்ரவுட் போன்ற மீன்கள். மற்றும் வெண்ணெய், பூசணி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றில் கனிசமான அளவு உள்ளது.

தினமும் ஒரு கைப்பிடி பச்சை கருவேப்பிலை, நான்கு நெல்லிக்காய், இரண்டு முட்டைகள் உண்பதன் மூலம் முடி வளர தேவையான அணைத்து ஊட்டச் சத்துக்களையும் பூர்த்தி செய்ய முடியும்.