பல மருத்துவ குணங்கள் அடங்கிய மிளகு நன்மைகள்

0

மிளகு  நன்மைகள், பயன்கள் மிளகில் உள்ள சத்துக்கள், இரண்டு மிளகை வாயில் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாக உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள், தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

மிளகு :

மிளகின் அறிவியல் பெயர் பைபர் நிக்ரம் ஆகும். இது ஒரு வகை பழமாகும்.

மிளகு நன்மைகள்

கருப்பு மிளகு, மசாலாப் பொருட்களின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது.

இது  சுவைக்காகவும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் உணவுகளில் பயன்படுத்தப் படுகிறது.

மிளகு நன்மைகள் :

இது உணவுகளின் சுவையை கூட்ட பயன்படுவதுடன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

கருப்பு மிளகில் மக்னீசியம், இரும்பு, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.

மிளகு எண்ணேயில் உள்ள பைப்பரின் என்ற பொருள் தசை வலி, மூட்டுவலி மற்றும் அஜீரணம் போன்ற கோளாறுகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இது எடை இழப்புக்கு உதவுகிறது. இது செரிமானத்திற்கு நல்லது என்றும், உடலை நச்சுத் தன்மையாக்கி புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இதில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மிளகு நன்மைகள் சில பட்டியலிடப் பட்டுள்ளது. அவை

இதய ஆரோக்கியம் :

உயர் இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவை இதய நோய்க்கு பொதுவான காரணமாக உள்ளது.

மிளகில் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் பண்புகள் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருப்பு மிளகில் உள்ள பைப்பரின் எனும் சேர்மம் கெட்ட’ கொழுப்பின் அளவைக் குறைத்து  ‘நல்ல’ கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

மூளை ஆரோக்கியம் :

மிளகு நரம்பியக்கடத்தல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுகிறது.

இது மூளையில் உள்ள இரசாயன பாதைகளைத் தூண்டுவதன் மூலம் நினைவாற்றல் மற்றும் அறி வாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

கருப்பு மிளகில் உள்ள பைபரைன் என்ற கலவை அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

நீரிழிவு நோய் :

இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கருப்பு மிளகு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

பொதுவாக கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது  இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

கருப்பு மிளகை உணவில் சேர்ப்பது உயர் இரத்த சர்க்கரை அபாயத்தை குறைக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

மிளகின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த உதவுகிறது.

புற்றுநோய் தடுப்பு :

மிளகில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிளகில் உள்ள பைபரின் எனும் ஆக்ஸிஜனேற்றி செல்கள் சேதத்தை குறைத்து திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இதன் மூலம் புற்றுநோய் நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது.

செரிமானம் :

இது செரிமானத்திற்கு உதவுகிறது. அதை பச்சையாக உட்கொள்ளும் போது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வெளியிடுவதை தூண்டுகிறது. இது புரதங்களை செரிக்க உதவுகிறது.

ஹைட்ரோகுளோரிக் அமிலம் குடல்களை சுத்தப்படுத்தவும் பிற இரைப்பை குடல் நோய்களிலிருந்து உங்களைத் தடுக்கவும் உதவுகிறது.

மலச்சிக்கலை தடுக்கிறது :

வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவான முறை மலம் வெளியேறினால் கடுமையான் மலச்சிக்கல் என்று அர்த்தம்.

உணவில் சிறிது மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

கருப்பு மிளகு தினமும் உணவில் சேர்த்து கொண்டால்  பெருங்குடல் புற்றுநோய், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வகையான பாக்டீரியா வகை நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

உடல் எடை :

மிளகில் அதிகப்படியான கொழுப்பை உடைக்க உதவும் பைட்டோ நியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தையும் மேம்படுத்துகிறது.

க்ரீன் டீயுடன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மனச் சோர்வு :

மனச்சோர்வு உலகளவில் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

பச்சை மிளகை சிறிதளவு வாயில் போட்டு மெல்வதன் மூலம் மனச் சோர்வை குறைப்பதாக சொல்லப்படுகிறது.

பச்சை மிளகை மென்று சாப்பிடுவது மனநிலையைத் தூண்டும் ரசாயனங்கள் மூளைக்கு வெளியிடப்பட தூண்டி மனதை எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் வைத்திருக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.

சிறந்த நச்சு நீக்கி :

மிளகு மருத்துவ குணங்கள் பலவற்றில் முக்கியமானது நச்சு நீக்கியாக செயல் படுவது ஆகும்.

மிளகு வியர்வை மற்றும் சிறுநீர் பெருக்கியாக உதவுவதன் மூலம் உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் வெளியேற்றுகிறது.

போதுமான அளவு வியர்வை மற்றும் சிறுநீர் வெளியேறுவது உடல் நன்றாக இயங்குகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

ஊட்ட சத்து  ஊக்கி :

இரும்பு மற்றும் பீட்டா-கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு மிளகில் உள்ள பைபரின் கலவை உதவுகிறது.

மேலும் மஞ்சளுடன் சேர்ப்பதன் மூலம் மசாலாவின குர்குமின் கலவையை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

மேலும் இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

மிளகு தீமைகள் :

மிளகு மருத்துவ குணங்கள் பல கொண்டிருந்தாளும் அதை சிறிதளவே பயன்படுத்த வேண்டும்.

தேவைக்கு அதிகமாக பயன் படுத்தினால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. மிளகு தீமைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • கருப்பு மிளகு அதிக அளவில் உட் கொண்டால் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
  • அதிக அளவு கருப்பு மிளகு தவறுதலாக நுரையீரலில் நுழையும் போது, ​​அது மரணத்தை கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
  • நன்றாக தூள் செய்யப்பட்ட கருப்பு மிளகு தற்செயலாக கண்களில் பட்டால் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும் எனவே மிளகு பயன்படுத்திய பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
  • மிளகு சில மருந்துகளுடன் வினைபுரிய வாய்ப்புகள் உள்ளன.
  • மிளகு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒவ்வாமைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.