பக்வீட் அல்லது மரக்கோதுமை என்றால் என்ன? மரக்கோதுமையிலுள்ள சத்துக்கள் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
மரக்கோதுமை (அ) பக்வீட்
தற்போது மரக்கோதுமை அல்லது பக்வீட் (Buck Wheat) என்ற தானியம் பிரபலமாகி வருகிறது.
பக்வீட் அல்லது மரக்கோதுமை என்பது கோதுமை வகை அல்ல. இது ஒரு வகை பழத்தின் விதையாகும். இது பொதுவாக போலி தானியங்கள் வகைகளுள் ஒன்றாகும்.
அதாவது அவை தானியங்களை ஒத்த பண்புகளைக் கொண்டிருக்கும் ஆனால் மற்ற தானியங்களைப் போல புல் குடும்பத்திலிருந்து வரவில்லை.
இது இந்தியில் ‘கூத்து’, தமிழில் ‘கொடு’, என்றும் ‘பப்பாறை’ மரக்கோதுமை’ என்றும் மலையாளத்தில் ‘கூத்து’, ‘குட்டு’ என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் பேகோபைரம் எஸ்குலெண்டம் (Fagopyrum esculentum) ஆகும்.
இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக சொல்லப்படுகிறது.
அங்கிருந்து மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு பரவியது. இது இறுதியாக 1600 களில் வட அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
பக்வீட் (அ) மரக் கோதுமையில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் சுத்தமான பச்சை பக்வீட் அல்லது மரக்கோதுமையில் உள்ள சத்துக்கள் (USDA வின் அறிக்கையின் படி) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆற்றல்: 333 கிலோகலோரி
- கார்போஹைட்ரேட் : 62.2 கிராம்
- புரதம் : 13.3 கிராம்
- கொழுப்பு : 2.22 கிராம்
- நார்ச்சத்து : 2.2 கிராம்
- இரும்பு : 2 மி.கி
- பொட்டாசியம் : 311 மி.கி
- கால்சியம் : 67 மி.கி
பக்வீட் நன்மைகள் :
மரக்கோதுமை அல்லது பக்வீட் பொதுவாக கோதுமை, ஓட்ஸ் மற்றும் அரிசி போன்ற பிற தானியங்களை விட சற்று அதிகமான கசப்பு சுவை கொண்டது.
இருப்பினும் தானியங்கள் அளவுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. மரக்கோதுமை பக்வீட் நன்மைகள் பின்வருமாறு
அனேமியா வராமல் தடுக்கிறது :
பப்பாரையில் இரும்புச் சத்து மிகவும் கனிசமான அளவு உள்ளது. இது இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு அவசியமாகும். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. சோர்வு, அறிவாற்றல் மந்தநிலை, தலைவலி போன்றவை இரத்த சோகையின் அறிகுறியாகும்.
பித்தப்பை கற்களை தடுக்கிறது :
பப்பாரையில் கரையாத நார்ச்சத்து கனிசமான அளவு இருப்பதால, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுப்பதில் உதவுகிறது.
கரையாத நார்ச்சத்து செரிமானப் பாதை வழியாக உணவின் இயக்கத்தை துரிதப்படுத்துவதன் மூலம் பித்த அமிலங்களின் அதிகமாக சுரைக்கப் படுவதைக் குறைக்கிறது.
எடை குறைப்பு :
மரக்கோதுமையில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் இல்லை.
இந்த கலவையானது பசியை அடக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை எளிதாக்கவும், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
பசையம் இல்லாதது :
பக்வீட் இயற்கையாகவே பசையம் இல்லாதது. எனவே பசையம் சகிப்புத்தன்மை அல்லது செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்வீட் சிறந்த உணவாக உள்ளது.
எலும்புகளுக்கு ஆரோக்கியமானது :
மரக்கோதுமையில் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் உள்ளது. கால்சியம் ஆஸ்டியோ போரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.
எனவே, தினசரி உணவில் மரக் கோதுமை சேர்த்துக்கொள்வது எலும்பு அமைப்பு மற்றும் இணைப்பு திசுக்களை வலுப்படுத்த உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கிறது :
மக்னீசியம் நிறைந்துள்ள பக்வீட் இரத்த நாளங்களை தளர்த்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துகின்றன.
மரக் கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்வது பெரும் பாலானவர்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
இருப்பினும், இந்த தகவலை உறுதிப் படுத்த போதுமான போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படா வில்லை.
நீரிழிவு நோய்க்கு ஏற்றது :
குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு இல்லாத பக்வீட் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலில் இரத்த சர்க்கரையை குறைக்கிறது.
பக்வீட் தீமைகள் :
மரக்கோதுமை அல்லது பக்வீட் பொதுவாக செலியாக் நோய் உள்ளவர்கள் உட்பட பெரும்பாலான அனைவருக்கும் பாதுகாப்பானது தான். இருப்பினும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
லேடெக்ஸ் ஒவ்வாமை, அரிசிக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இதுவும் ஒவ்வாமை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.