மஞ்சள் நன்மைகள், பயன்கள் மற்றும் மஞ்சள் நீர் அதாவது சுடு நீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மஞ்சள் தீமைகள் பற்றி கொடுக்கப் பட்டுள்ளது.
மஞ்சள் :
மஞ்சள் மிக மிக அற்புதமான மருத்துவ தன்மை வாய்ந்தது என்பதற்கான காரணம் இதில் உள்ள குர்குமின் எனும் சேர்மம் ஆகும்.
இதில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆன்டி ஏஜிங் பொருள்கள் போன்றவை இருக்கின்றன
மஞ்சள் நன்மைகள் :
தினமும் மஞ்சளை சுடு தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், அதிலும் மழைக்காலங்களில் சாப்பிட்டு வந்தால், அவ்வப் பொழுது ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் பல நோய்களை எளிதாக போக்க முடியும்.
இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நன்மைகள் பின்வருமாறு
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க :
சளி, இருமல், சுவாச பிரச்சனைகள் மற்றும் தொண்டை பகுதிகளில் ஏற்படும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு மஞ்சள் பொடி கலந்த வெந்நீரை தினமும் குடித்து வருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட்டு இந்த பிரச்சனைகள் வராமலே தடுக்க முடியும்.
இளமையாக வைத்திருக்க :
அனைவருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக நாமும் எதை எதையோ அடிக்கடி முயற்சி செய்து வருவோம்.
அந்த வகையில் மஞ்சளில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சி எதிர் தன்மை பிரீ ரேடிகல்களை வெளியேற்றி முதுமையை தள்ளிப்போடும் தன்மை கொண்டது.
காலையில் தினமும் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூளை கலந்து குடித்து வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.
குறிப்பாக இந்த மஞ்சள் தூளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் மூட்டுகளில் உள்ள வீக்கம், வலி போன்றவை வேகமாக குறைவதும் கண்டறியப் பட்டுள்ளது.
ஆய்வு ஒன்றில் மஞ்சளில் உள்ள குர்குமின், கீல்வாத நோயாளிகளுக்கு, நல்ல தீர்வை கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு :
அடுத்தபடியாக, மஞ்சள் தூள், கல்லீரலில் உள்ள நச்சு மிக்க, டாக்ஸின்களை வெளியேற்றி பாதிக்கப்பட்ட செல்களை, புதுப்பித்து கல்லீரலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் மஞ்சள் தூள், பித்த ஓட்டத்தை தூண்டி, பித்தப்பையின் வேகத்தை அதிகரித்து, விரிவுபட்ட ஹெபடிக் நாளங்களை குறைக்கும் தன்மை கொண்டது.
எனவே, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த நீரை குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
மஞ்சளில் உள்ள குர்குமின், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடி, புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.
எனவே, தினமும் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் சாப்பிடுவது, மிகவும் நல்லது.
இரத்த சோகை குணப்படுத்தும் :
அதே போன்று இன்று மக்களிடையே அதிகம் காணப்படும் ஒரு பிரச்சனை ரத்த சோகை ஆகும்.
இதற்கு அன்றாட உணவில் ஏதாவது ஒரு வகையில் மஞ்சளை எடுத்துக் கொண்டால், ரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
இரத்த சோகை நோய் இருந்தாலும், குணப்படுத்தி விடலாம். அந்த வகையில், தினமும் மஞ்சள் தண்ணீர் குடிப்பது, மிகவும் நல்லது.
மூளை ஆரோக்கியத்திற்கு :
மஞ்சளில் உள்ள குர்குமின் , வளர்ச்சி ஹார்மோன்களின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி மூளையில் எந்தவித பிரச்சனைகளும் வராமல் தடுப்பதும் தெரிய வந்துள்ளது.
அதாவது மூளை ஆரோக்கியம் சார்ந்த கோளாறுகளான டிமென்ஷியா மற்றும் அல்ஹெய்மைர் போன்ற நோய்களுக்கும் சிறந்த தீர்வாக இருப்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :
மஞ்சளில் உள்ள குர்குமின் , இதய ரத்த நாளமான, தமனிகளில், கொழுப்புகள் படிவதை தடுத்து, தமனிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
2011 ஆம் ஆண்டு, ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும், மஞ்சள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய்களை தடுக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இதய நோய்கள் வருவதை தடுக்க, தினமும் விரும்ப வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் பொடி கலந்து குடித்து வருவது நல்லது.
முக்கியமாக இதில் உள்ள இந்த குர்குமின், ஆன்டிபாக்டீரியல், ஆன்டிஆக்சைடு ஆன்டி இனபிலம்மாசன் போன்ற பல மருத்துவ குணங்களை கொண்டதால், இதயம் கல்லீரல், சிறுநீரகம், வயிறு, குடல் என உடலின் அனைத்து பகுதிகளின் வளர்ச்சியையும் சரி செய்யக்கூடியது.
இதனால் நீங்களும் செய்து பாருங்கள். நல்ல கிடைப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.
மஞ்சள் தீமைகள் :
மிகச் சிறிய அளவு மஞ்சள் தூள் எடுத்து கொள்வது பாதுகாப்பானதாக சொல்லப் பட்டாலும். தினமும் மஞ்சள் நீர் நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதா என்பதை நிறுவ அதிக ஆராய்ச்சிகள் செய்யப் பட்டதாக தெரியவில்லை. சாத்தியக்கூறான மஞ்சள் தீமைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இரத்தம் மெலிதல்:
மஞ்சளின் குர்குமின் எனும் சேர்மம் உள்ளது. இது இரத்தத்தை மெலிதாக்கும், இரத்த உறைவு எதிர்ப்பு மருந்துகளுடன் இணையும் போது இரத்தப்போக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இரும்பு உறிஞ்சுதல்:
மஞ்சள் இரத்த சோகையை போக்கும் என்று சொல்லப்பட்டாலும் மஞ்சளில் உள்ள குர்குமின் இரும்புச் சத்து உடலால் உறிஞ்சப் படுதலைத் தடுக்கலாம் இன்றும் சொல்லப்படுகிறது. எனவே இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை உள்ளவர்கள் கவனத்துடன் மஞ்சள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயிற்று கோளாறு :
மஞ்சள் தூளை அதிக அளவுகளில் உட்கொள்வது சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. வயிற்று வலி, அமில ரிஃப்ளக்ஸ், வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும்.
ஒவ்வாமை எதிர்வினைகள்:
சிலருக்கு மஞ்சள் ஒவ்வாமை ஏற்படுத்தலாம். மேற்பூச்சாக பயன்படுத்தும் போது பல நன்மைகளை அள்ளி தரும் என்றாலும் அரிதாக சிலருக்கு தோல் வெடிப்பு அல்லது அரிப்பு எரிச்சல் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படலாம். எனவே முதன் முதலில் மஞ்சள் மேற்பூச்சாக பயன்படுத்துபவர்கள் பேட்ச் டெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது.
பித்தப்பை பிரச்சினைகள்:
மஞ்சள் பித்தப்பை பிரச்சினை உடையவரகளுக்கு பிரச்சினைகளை மோசமாக்கலாம், எனவே பித்தப்பை அல்லது பித்தப்பை நோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை தேவை.
அதிக அளவு மஞ்சள் பொடி உட்கொள்வது சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
சிறுநீர் ஆக்சலேட்டின் அளவை கணிசமாக அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், அதை மிதமாக உட்கொள்வது அவசியம். மேலும் குறிப்பிட்ட உடல் நலக் கோளாறு உடையவர்கள் தங்கள் உணவில் மஞ்சளைச் சேர்ப்பதற்கு முன் சுகாதார வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.