மணத்தக்காளி கீரை மருத்துவ குணங்கள் மற்றும் தீமைகள்

0

மணத்தகாளி கீரை மருத்துவ குணங்கள், நன்கள், சத்துக்கள் மற்றும் தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

மணத்தக்காளி கீரை :

மணத்தக்காளி என்பது ஒரு மூலிகை வகைத் தாவரமாகும். இது சில பகுதிகளில் நச்சு களையாகக் கருதப்பட்டாலும் உலகின் பிற பகுதிகளில் ஒரு முக்கிய உணவு ஆதாரமாக உள்ளது.

மணத்தக்காளி கீரை

இவற்றில் பல வகையான கிளையினங்கள் உள்ளன. அவை சோலனம் நிக்ரம் என்ற தாவரவியல் பெயரில் தொகுக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சற்று மாறுபடும்.  அவற்றில் மணத்தக்காளி கீரை முற்றிலும் உண்ணக்கூடியது, சத்தானது மற்றும் சுவையானதாகும்.

மணத்தக்காளி கீரையில் உள்ள சத்துக்கள் :

இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் நியாசின், ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ளது. இது மூலிகை மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது.

மணத்தக்காளி கீரை மருத்துவ குணங்கள் :

மணத்தக்காளி கீரை மருத்துவ குணங்கள் பின்வருமாறு 

புற்றுநோய் தடுப்பு :

புற்றுநோய் என்பது கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மனதக்காளி கீரை புற்றுநோய் தடுப்பு பண்புகளை இயற்கையாகவே கொண்டுள்ளது.

அதற்கு காரணம் அதில் உள்ள சோலாசோனைன், சோலாசோடின், சோலமார்கின் மற்றும் சோலனைன் ஆகிய சேர்மங்கள் ஆகும்.

இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இவை மார்பக புற்றுநோய், கருப்பை வாய், வயிறு மற்றும் சுவாச பாதை புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

மஞ்சள் காமாலையைத் தடுக்கிறது :

மஞ்சள் காமாலை நோய்க்கு மணத்தக்காளி கீரை ஒரு சிறந்த தடுப்பு மருந்தாகும்.

கல்லீரல் தசைகளை பலப்படுத்துவதன் மூலம் மஞ்சள் காமாலை வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. 

மஞ்சள் காமாலை போன்ற பிற கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த மணத்தக்காளி கீரை மற்றும் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் சாறு பயன்படுத்தப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் தடுப்பு  :

உயர் இரத்த அழுத்த அபாயம் உள்ளவர்கள் மனத்தக்காளி கீரை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லாதாகும்.

செரிமானத்திற்கு உதவுகிறது :

மனத்தக்காளி கீரையில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

மேலும் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.

காய்ச்சல் குணமாகும் :

மனத்தக்காளி கீரையில் சோலனம் பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி, இரும்பு, கால்சியம் மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் மனத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டை தணித்து, காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் உடல் வலி மற்றும் மூட்டு வலி ஆகியவற்றை குணப்படுத்தும்.

முதுகு வலி நீங்கும் :

முதுகுவலி, புண், தசைவலி,  இடுப்பு வலி மற்றும் கீல்வாதத்தைப் போக்க கருப்பு மணத்தக்காளி கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும் வாத நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, வாத நோய் மற்றும் அனைத்து அதன் அறிகுறிகளையும் குணப் படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது.

அல்சரை குணப் படுத்துகிறது :

இது வாய்புண்ணுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வாய்புண் மற்றும் வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் இக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது :

மணத்தக்காளி கீரை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி உடலில் உள்ள நச்சுகளை நடுநிலை யாக்குவதற்கும் வெளியே தள்ளுவதற்கும் உதவுகிறது.

தொண்டை வலிக்கு நல்லது :

மேடை பேச்சாளர்கள் மற்றும் பாடகர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

இயற்கை மலமிளக்கியாக செயல்படுகிறது :

மற்ற கீரைகளை போலவே இதிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே இது மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது.

சிறுநீரகச் செயல்பாட்டைத் தூண்டுகிறது :

சிறுநீரக செயல்பாட்டைத் தூண்டி சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து, சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகட்ட உதவுகிறது.

தோல் நோய்கள் குணமாக :

தோல் அலர்ஜி, வெப்பக் கொதிப்பு, தோல் எரிச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இடத்தில் மணத்தக்காளி கீரை சாற்றைப் பூசி வந்தால் விரைவில் குணமடையும்.

நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது :

இதன் பழங்களின் விதைகளை காற்றில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வருவதோடு உடல் சோர்வையும் தணிக்கும்.

மண்ணீரல் நோய்களைக் குணப்படுத்துகிறது :

மணத்தக்காளி கீரை மண்ணீரல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும். இது  மண்ணீரல் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் வயிற்று புண்களை ஆற்றுகிறது.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி பின்னர் இஞ்சி சீரகம் சேர்த்து வதக்கி, பின்னர் அதில் மணத்தக்காளி கீரையை சேர்த்து வதக்கவும்.

பின்னர் சிறிது மஞ்சள் தூள் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். இதை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மண்ணீரல், கல்லீரல் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும்.

மணத்தக்காளி கீரை தீமைகள் :

அனைத்து கீரை வகைகளைப் போல மணத்தக்காளி கீரையிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதே சமயம் அதிக அளவு தொடர்ந்து உட்கொள்வது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. மணத்தக்காளி கீரை தீமைகள் பின்வருமாறு.

எல்லாக் கீரைகளை போலவே மணத்தக்காளி கீரையிலும் உள்ள பச்சையம் மற்றும் நார்ச் சத்துக்கள் கனிசமான அளவில் உள்ளன.

மனித உடலில் இவற்றை ஜீரணிக்கக்கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கின்றன. எனவே மணத்தக்காளி கீரையை இரவில் சாப்பிடுவது ஜீரண செயல்பாட்டில் மந்த நிலையை உருவாக்கலாம்.

கீரையில் ஆக்சாலிக் அமிலம் உள்ளதால் அவை கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட் ஆக மாறுகிறது. இதனால் கால்சியம் உடலால் உறிஞ்சப்படும் திறனைக் குறைக்கிறது.

மணத்தக்காளி கீரையில் அதிக அளவு வைட்டமின் கே உள்ளதால் இது இரத்தம் உறைதலை தாமதப் படுத்தும் பக்க விளைவை ஏற்படுத்துகிறது.