மக்கா சோளத்தில் உள்ள நன்மைகள், அதிகமாக உட்கொள்வதால் விளையும் பக்க விளைவுகள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் விவரிக்கப் பட்டுள்ளன
மக்கா சோளம் :
மக்கா சோளத்தில் உள்ள சத்துக்கள் :
மக்கா சோளம் நன்மைகள் :
இரத்த சோகையைத் தடுக்கிறது :
சோளத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்பு புதிய இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகையைத் தடுக்கிறது.
மேலும் சோர்வு, பலவீனம், தலைசுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற இரத்த சோகையின் அறிகுறிகளைத் தவிர்க்க உதவுகிறது.
கண்களுக்கும் சரும பராமரிப்பிற்கும் நல்லது :
சோளத்தில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ உற்பத்தியை தூண்டுகிறது. வைட்டமின் ஏ கண்பார்வை மற்றும் சரும ஆரோக்கித்திற்கு மிகவும் நல்லதாகும்.
பீட்டா கரோட்டின் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களைத் தடுக்கிறது.
வைட்டமின் ஏ அதிக அளவில் உட்கொண்டால் நச்சுத் தன்மையுடையதாக இருக்கும் என்பதால் உங்கள் உடலில் உள்ள பீட்டா கரோட்டின் மூலம் உங்கள் வைட்டமின் ஏ பெறுவது சிறந்தது.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது :
நீரிழிவு என்பது ஒரு கொடிய நோயாகும். அது குணப்படுத்த முடியாது கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.
சோளத்தில் தேவையான அளவு பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள இன்சுலினை நீங்கள் கட்டுப்படுத்த உதவுகிறது.
இன்சுலின் உடலில் சர்க்கரையின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
வளர்ச்சிக்கு உதவுகிறது :
சோளத்தில் பி வைட்டமின்களான தியாமின் மற்றும் நியாசின் அதிக அளவுக்கு உள்ளது. இது வளர்ச்சிக்கு உதவுகிறது.
தியாமின் நரம்பு ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது,
அதே நேரத்தில் நியாசின் டிமென்ஷியா மற்றும் டெர்மடிடிஸ் போன்ற தொடர்ச்சியான பிரச்சனைகளைத் தடுக்கிறது.
மேலும் சோளத்தில் அதிக அளவு ஃபோலிக் அமிலம் இருப்பதாலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கிறது.
வைட்டமின் ஈ மற்றும் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந் திருப்பதால், உடலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்து, நோயின் தடையின்றி வளர உதவுகிறது.
சிறந்த ஆற்றல் மூலமாகும் :
சோளம் என்பது ஒரு மாவுச்சத்துள்ள தானியமாகும். இதில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை மெதுவாக ஜீரணிக்கப்பட்டு சிறந்த ஆற்றல் மூலமாக வேலை செய்கின்றன.
எடை அதிகரிக்க உதவுகிறது :
சோளத்தில் உள்ள அதிக அளவு கலோரிகள் காரணமாக விரைவாக எடை அதிகரிக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியம் :
சோளத்தில் உள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. நல்ல பாக்டீரியாக்கள் பெருங்குடல் புற்றுநோய் அபயாத்தை தடுப்பதில் முக்கியமானவை.
சத்துக்கள் நிறைந்துள்ளது :
உடலுக்குத் தேவையான அனைத்துத் தாதுக்களும் சோளத்தில் நிறைந்துள்ளன.
இதில் அதிக அளவு செம்பு, இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் செலினியம் உள்ளன.
சோளத்தில் உள்ள பாஸ்பரஸ் சிறுநீரக செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், எலும்பு வளர்ச்சியைத் தூண்டவும், எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
மெக்னீசியம் சீரான இதய துடிப்பை பராமரிக்கவும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது :
சோளம் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் செல்களுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் புற்றுநோய் அபயாத்தை குறைக்கிறது.
பார்வை ஆரோக்கியம் :
மக்கா சோளம் தீமைகள்:
சோளத்தில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்.
பொதுவாக இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சோள எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிடக்கூடாது.
சோள சிரப் சர்க்கரையை விட மோசமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் உடல் பருமனுக்கு இது ஒரு முக்கிய காரணமாக அடையாளம் சொல்லப்படுகிறது.
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பாதிக்கிறது மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்தை ஏற்படுத்தும். சோள சிரப் எந்த நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
தோல் அலர்ஜி சம்பந்தமான கோளாறு உடையவர்களுக்கு சோளம் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப் படுகிறது.
எனவே ஒவ்வாமைக்கு ஆளாக நேரிட்டால் உணவில் சோளத்தைச் சேர்ப்பதற்கு முன் மருத்துவரை அணுகவும்.
சோளம் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
சோளத்தில் பைடிக் அமிலம் உள்ளது. இது ஊட்டச் சத்துக்கள் உடலால் உறிஞ்சப் படுதலைக் குறைக்கிறது.