லிச்சி பழம்:
லிச்சி பழத்தின் அறிவியல் பெயர் சினென்சிஸ் ஆகும். இதன் பூர்வீகம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதன் இனிப்பு மற்றும் தனித்துவமான சுவைக்காக உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படுகிறது.
லிச்சி பழம் சுவைக்காக மட்டும் அல்லாமல் அதன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பிரபலமடைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில், பத்து சிறந்த லிச்சி பழம் நன்மைகள் மற்றும் சாத்தியக் கூறான லிச்சி பழம் தீமைகள் குறித்து விரிவாக காணலாம்.
லிச்சி பழம் நன்மைகள்:
லிச்சி பழம் அடிக்கடி உணவில் ஒரு பகுதியாக சேர்த்து கொள்வது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. சில லிச்சி பழம் நன்மைகள் பின்வருமாறு
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை:
லிச்சியில் வைட்டமின் சி, பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துக்கு எதிராக போராடி செல்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது:
லிச்சியில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி உடலில் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது:
லிச்சியில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது :
லிச்சியில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்குவதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிற்று மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
எடை மேலாண்மை:
லிச்சியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளன. அதே நேரத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, எனவே இது உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
தோல் ஆரோக்கியம்:
லிச்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளைக் குறைப்பதன் மூலம் இளமையோடும் பொழிவோடும் வைத்திருக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம்:
லிச்சி பழத்தில் தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு:
சில ஆய்வுகள் லிச்சி சாறு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று கூறுகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் கூடுதல் ஆய்வுகள் தேவை.
புற்றுநோய் தடுப்பு:
லிச்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் சில வகையான புற்றுநோய்கள் தாக்கும் அபாயத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
மன அழுத்தத்தைக் குறைத்தல்:
லிச்சியில் உள்ள வைட்டமின் சி மன அழுத்த ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது.
லிச்சி பழம் தீமைகள்:
லிச்சி பழம் மிதமான அளவு உட்கொள்வது மிகவும் நல்லது. அதிக அளவு உட்கொள்வது சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். மேலும் பூச்சிக்கொல்லி எச்சம் மற்றும் மாசுபாட்டின் அபாயத்தைக் குறைக்க, சாப்பிடுவதற்கு முன் எப்போதும் பழங்களை நன்றாக கழுவ வேண்டும். சாத்தியமான சில லிச்சி பழம் தீமைகள் பின்வருமாறு..
ஒவ்வாமை எதிர்வினைகள்:
அரிதாக சிலருக்கு லிச்சி பழம் சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பழம் உட்கொண்ட பிறகு அரிப்பு, வீக்கம் அல்லது படை நோய் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
செரிமான பிரச்சனைகள்:
லிச்சியில் உள்ள நார்ச்சத்து காரணமாக அதிக அளவில் லிச்சி பழம் சாப்பிடுவது வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுப் பிடிப்பு போன்ற செரிமான கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம்.
இரத்தச் சர்க்கரைக் குறைவு:
லிச்சி சாறு இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவினாலும், அதிக அளவில் உட்கொண்டாலோ அல்லது நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொண்டாலோ குறைந்த இரத்த சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தும்.
பல் சிதைவு:
லிச்சியில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. அவை அடிக்கடி உட்கொள்ளும் போது, பல் சிதைவை ஏற்படுத்தும்.
மருந்துகளுடன் வினை :
லிச்சி சில மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம், எனவே மருந்துகளை உட்கொள்பவர்கள் லிச்சி சாப்பிடும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.