Homeவாழ்க்கை முறைஅழகு குறிப்புகுதிகால் வெடிப்பு நீங்க எளிய வழிகள்

குதிகால் வெடிப்பு நீங்க எளிய வழிகள்

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு, பித்த வெடிப்பு என்றழைக்கப்படும் பாத வெடிப்பு வருவதற்கான காரணங்கள், மற்றும் பித்த வெடிப்பு நீங்க எளிய வழிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற் கின்றன. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன.

முக அழகின் பராமரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்து வத்தை, பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும்.

பாத வெடிப்பு (அ) குதிகால் வெடிப்புதற்போது, ‘பாத வெடிப்பு’ பலர் சந்திக்கும் பிரச்சினையாகும். இது “பித்த வெடிப்பு” என்றும் “கால் வெடிப்பு” (Cracked Heels) என்றும் அழைக்கப் படுகிறது. இது அழகை மட்டுமல்லாமல், ஆரோக்கியத் தையும் பாதிக்கிறது.

குதிகால் வெடிப்பு காரணம்  :

உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.

இதை கவனிக்காமல் இருக்கும்போது வெடிப்புகளில் அழுக்கு சேருவது, கிருமித் கிருமித் தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதன் காரணமாக சீழ் வடிதல், எரிச்சல், வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பித்த வெடிப்பு அல்லது குதிகால் வெடிப்பு நீங்க பல வழிகள் உள்ளன. அதில் எளிய முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குதிகால் வெடிப்பு மருத்துவம் :

மருதாணி : 

  • பாத வெடிப்புகளை குணப்படுத்துவதில் மருதாணி முக்கிய  பங்கு வகிக்கிறது.
  • ஒரு கைப்பிடி மருதாணி இலைகளோடு, கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிய துண்டு சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.
  • இந்தக் கலவையை காற்றுப் புகாத டப்பா வில் போட்டு, குளிர்பதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம்.
  • இரவு தூங்கச் செல்வ தற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு, அரைத்து வைத்திருக்கும் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும்.
  • இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால், பாத வெடிப்பு நீங்கும்.

எலுமிச்சை சாறு :  

  • குதிகால் வெடிப்புக்கு இளம் சூடான நீரில், 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றைக் கலந்து, அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு பாதங்களில் படிந்திருக்கும். இறந்த செல்களை நீக்கிவிட்டு, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • இதன் மூலம் பாதங் களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.

மஞ்சள் :   

  • பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமி களால் தொற்று ஏற்படக்கூடும்.
  • எளிய முறையில் கிருமிகளை நீக்குவதற்கு, ஒரு டீஸ்பூன் மஞ்சள்| தூளுடன், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து, வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம்.
  • இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும்.

மசாஜ் :

  • குதிகால் வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் பாதங்களை மசாஜ் செய்வது ஆகும்.
  • பாதங்களில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்காக, எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமஅளவு கலந்து மசாஜ் செய்யலாம்.
  • இதன் மூலம், வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular