கொத்தவரங்காய் பயன்கள், நன்மைகள் மற்றும் தீமைகள்

0

கொத்தவரங்காய்

கொத்தவரங்காய், கொத்தவரை, சீனி அவரை அல்லது கொத்து பீன்ஸ் என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரு காய்கறி வகையாகும். அவை பார்ப்பதற்கு பச்சை பீன்ஸ் போன்று காணப்படும்.

கொத்தவரங்காய்

இதன் அறிவியல் பெயர் சியமோப்சிஸ் டெட்றகோனோலோபோ (Cyamopsis tetragonoloba) ஆகும்.

இது ஆங்கிலத்தில் க்ளஸ்டர் பீன்ஸ் (Cluster Beans) என்று அழைக்கப்படுகிறது.

உலக அளவில் கொத்தவரங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

உலக அளவில் 80 சதவீதம் உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்தியாவில் ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் கொத்தவரங்கை அதிகளவில் பயிரிடப்படுகிறது.

கொத்தவரங்காய் பயன்கள் :

கொத்தவரங்காய் விதைகளை உலர்த்தி பொடி செய்து ஐஸ்கிரீம், சீஸ், வேகவைத்த மற்றும் வறுத்த உணவு பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய உணவுகளில் கொத்தவரங்காய் கறி மற்றும் பொரியலாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சீனி அவரை சற்று கசப்பாக இருப்பதால், அதன் கசப்பைக் குறைக்க, தக்காளி அல்லது தேங்காய் துருவல் செய்முறையில் சேர்க்கப்படுகிறது. கொத்தவரங்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

கொத்தவரங்காய் நன்மைகள் :

கொத்தவரங்காய் குறைந்தக் அளவு கலோரிகளையும், ஏராளமான நார்ச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்களையும் கொண்டுள்ளன. இவை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கின்றன

குடல் ஆரோக்கியம் :

சீனி அவரையில் கனிசமான அளவு நார்ச்சத்து இருப்பதால் இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.

அவை குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைக் குறைக்கின்றன. இதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகின்றன.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது :

சீனி அவரையில் இரும்பு சத்து எளிதில் கரையக் கூடிய வடிவத்தில் நிறைந்துள்ளதால், அது இரத்த சோகைக்கான வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் அமைப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

கொத்தவரங்கையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஃபோலேட்டுகள் உட்பட ஏராளமான வைட்டமின்கள் உள்ளன.

அவற்றின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயது தொடர்பான சிதைவைக் குறைக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

நீரிழிவு நோய்க்கு நல்லது

மேலும் கொத்தவரை பைட்டோ நியூட்ரியண்ட்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது.

எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த காய்கறி தேர்வாக உள்ளது.

இதய ஆரோக்கியம் :

கொத்தவரையில் தாவர அடிப்படையிலான புரதம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

மேலும் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளைக் கொண்டுள்ளது.

அவை கொழுப்பைக் குறைப்பதில் உதவி இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்த அளவைப் பராமரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்து கின்றன.

எலும்பு ஆரோக்கியம் :

கொத்தவரையில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சிறந்த ஆக்சிஜனேற்றியாகும் :

கொத்து பீன்ஸில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை செல்லில் நடைபெரும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்த்துப் போராடுகின்றன.

மேலும் கிரோன் நோய், எரிச்சலூட்டும் குடல் நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பல்வேறு புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கின்றன.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது :

கொத்து பீன்ஸில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைக்கும் பண்புகள், அதிக மன அழுத்தம் மற்றும் பதற்ற நிலைகளில் நன்மை பயப்பதாக சொல்லப்படுகிறது.

கொத்தவரங்காய் தீமைகள் :

கொத்தவரங்காயில் நார்ச்சத்து நிறைதுள்ளது . திடீரென அதிக அளவு நார்ச் சத்து உண்பது வயிற்று வலி மற்றும் வாயுவை ஏற்படுத்தும். எனவே, கொத்து பீன்ஸை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும், கொத்தவரைங்காயை அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காகவும் அல்லது ஏதேனும் ஒரு நோய்க்கு மருந்தாக பயன் படுத்து முன் சுகாதார வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.