கோதுமை நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

0

கோதுமையில் அடங்கியுள்ள சத்துக்கள், உண்பதால் கிடைக்கும் கோதுமை நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.

கோதுமை :

கோதுமை உலகில் அதிகமாக பயிரிடப் படும் தானிய வகைகளில் ஒன்றாகும். அரிசி, கோதுமை உட்பட பல உணவுகள் தானிய பயிர்களில் இருந்து பயிரிடப்படுகின்றன.

ஓட்ஸ், சோளம், பார்லி, கம்பு மற்றும் பருப்பு வகைகளும் தானியங்களில் அடங்கும்.

கோதுமை பல இனங்கள் ஒன்றாக சேர்த்து ட்ரிட்டிகம் என்று அழைக்கப்படுகின்றன.

ரொட்டி, சப்பாத்தி மற்றும் நான் ரொட்டி, பிஸ்கட், அப்பம், கேக், பீஸ்ஸா, பாஸ்தா போன்ற பல உணவுகளில் கோதுமை ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன் படுத்தப்படுகிறது.

கோதுமை கிழக்கு எத்தியோப்பியன் ஹைலேண்ட்ஸின் அருகிலுள்ள லெவண்ட் பகுதியை பூர்வீகமாக கொண்ட ஒரு வகை தானியமாகும்.

இது இப்போது உலகளவில் பயிரிடப்படுகிறது. மக்கா சோளம் மற்றும் அரிசிக்கு பிறகு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மூன்றாவது தானியமாகும்.

கோதுமை உற்பத்தியில் உலக அளவில் சீனா முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த நான்கு நாடுகளும் சேர்ந்து உலக அளவிலான கோதுமை உறப்பதியில் 50 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

கஜகஸ்தான் மற்றும் கனடா, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன.

இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கோதுமை அதிக அளவு பயிரிடப் படுகிறது.

கோதுமை வகைகள் :

கோதுமையில் அடர்சிவப்பு, சுமாரான சிவப்பு வெள்ளை என நிரங்களைப் பொறுத்து மூன்று வகைகள் உள்ளன.

மேலும் கோதுமையின் தன்மை கொண்டு கடின கோதுமை அல்லது பலவீனமான கோதுமை என்று பிரிக்கப்படுகிறது.

கடினமான கோதுமை பெரும்பாலும் மாவு வகைகளுக்கும் ரொட்டி தயாரிக்கும் பயன்படுகிறது.

பலவீனமான கோதுமை பிஸ்கட் கேக் செய்ய பயன்படுகிறது

கோதுமையில் உள்ள சத்துக்கள் :

கோதுமையிலிருந்து இருந்து பல்வேறு உட்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

உப பொருட்களை காட்டிலும் முழு கோதுமையில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளன.

கோதுமையில் 13 சதவீதம் நீர் சத்து, 71 சதவீதம் கார்போஹைட்ரேட் மற்றும் 1.5 சதவீதம் கொழுப்பு 13 சதவீதம் புரதமும் உள்ளது.

அனைத்து தானிய தானிய வகைகளில் உள்ளது போலவே, கோதுமையிலும் அதிக அளவு மாவு சத்துக்கள் உள்ளது.

ஸ்டார்ச் தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் முக்கிய மாவு சத்து ஆகும். கோதுமையில் உள்ள மொத்த மாவு சத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக ஸ்டார்ச் உள்ளது.

முழு கோதுமையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்றாலும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமையில் கிட்டத்தட்ட எதுவும் இல்லை.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் :

முழு கோதுமை பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

பெரும்பாலான தானியங்களைப் போலவே, அதில் உள்ள சத்துக்களின் அளவு அது வளர்ந்த மண் மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து மாறுகிறது.

செலினியம் சத்து பல்வேறு அத்தியாவசிய உடல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறதுகோதுமையின் உள்ள செலினியம் அளவு மண்ணைப் பொறுது மாறுபாடுவதால் சீனா போன்ற நாடுகளில் விளையும் கோதுமையில் உள்ள செலனியம் அளவு குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

மாங்கனீசு. முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. கோதுமையில் உள்ள பைடிக் அமிலம் காரணமாக கோதுமையிலுள்ள மாங்கானீசு சத்து குறைவாக உறிஞ்சப் படலாம்.பாஸ்பரஸ்  உடல் திசுக்களின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. காப்பர் அத்தியாவசிய தாது சத்தாகும். பெரும்பாலும் காப்பர் மேற்கத்திய உணவு முறைகளில் குறைவாக காணப்படுகின்றன. காப்பர் குறைபாடு இதய ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஃபோலேட். பி வைட்டமின்களில் ஒன்றான ஃபோலேட் ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி 9 என்றும் அழைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இது மிகவும் முக்கியமானது.

கோதுமையின் பல சத்தான பகுதிகள் அவை சுத்திகரிப்பு செய்யப்படும் போது நீக்கப் படுகின்றன.

எனவே, முழு தானிய கோதுமையுடன் ஒப்பிடும்போது வெள்ளை கோதுமையில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைந்த அளவே உள்ளன.

உலகில் பெரும்பான்மையான மக்கள் கோதுமையை முக்கிய உணவாக கொண்டிருப்பதால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் செறிவூட்டப்படுவது அவசிமாகிறது.

பல வளர்ந்த நாடுகளில் கோதுமை மாவு ஊட்ட சத்துக்கலால் செறிவூட்டப் படுவது கட்டாயம் ஆகும்.

செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு மேற்கூறிய சத்துக்களுடன் இரும்பு, தியாமின், நியாசின், கால்சியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

கோதுமை நன்மைகள் :

கோதுமை நன்மைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம.
  • கோதுமை மாவை அக்கிப் புண் நெருப்பு பட்ட இடம் மேல் தோல் உரிந்து போன இடம் ஆகியவற்றில் தடவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
  •  கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
  • கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
  • சம்பா கோதுமையை சாப்பிடும்போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு கணிசமாக குறைகிறது. மேலும் மொத்த கொழுப்பு சத்து அளவு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவும் கணிசமாக குறைகிறது.
  • கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து காலையில் அடித்து பசையாக்கி அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமை என்பது அனைத்து காலத்திற்கும் ஏற்ற உணவு குறிப்பாக இளம் தலைமுறையினர் கட்டாயம் கண்டுகொள்ள வேண்டிய உணவு தான் கோதுமை.

கோதுமை தீமைகள் :

கோதுமை பாதுகாப்பானது தான் என்றாலும் சிலருக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. கோதுமை தீமைகள்….

 சிலருக்கு கோதுமையை ஜீரணிக்க முடியாமல் , வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் எனவே குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கோதுமை மற்றும் கோதுமை பொருட்களை தவிர்க்க வேண்டும்