கொய்யா இலை நன்மைகள் மற்றும் தீமைகள்

0

கொய்யா இலை நன்மைகள், மருத்துவ பயன்கள் மற்றும் கொய்யா இலை தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

 

கொய்யா இலை :

கொய்யா மரத்தின் இலை கொய்யா இலையாகும். கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும்.

கொய்யா இலை

கொய்யா இலை நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்தவர்கள் வெகு சிலரே.

இந்தப் பதிவில் கொய்யா இலை நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் பற்றி விரிவாகக் காணலாம்

 

கொய்யா இலை நன்மைகள் :

கொய்யா இலைகளின் மருத்துவ குணங்கள் காரணமாக பல நோய்களுக்கு சிகிச்சையாக கருதப்படுகிறது.

கொய்யா இலை நன்மைகள்

கொய்யா இலை நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொழுப்பைக் கட்டுப்படுத்த்துகிறது :

லிப்போபுரோட்டீன் உடல் முழுவதும் அனைத்து கொழுப்பு மூலக்கூறுகளையும் கொண்டு செல்லும் வேலையைச் செய்கிறது.

இந்த வகை கொலஸ்ட்ரால் அதிக அளவு இருந்தால் ஆரோக்கியக் கோளாறுகள் மற்றும் குறிப்பான இதயம் தொடர்பான கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.

நியூட்ரிசன் மற்றும் மெட்டாபாலிசம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில், கொய்யா இலைச் சாறு அல்லது தேநீர் அருந்தி வந்தால் எட்டு வாரங்களுக்குப் பிறகு கொலஸ்ட்ரால் அளவு குறைவாதாக சொல்லப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது :

நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது, நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும், இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பத்தற்காகவும் பயன்பபடும் உணவுகளில் ஒன்றாக கொய்யா இலை தேநீரை ஜப்பான் அங்கீகரித்துள்ளது.

கொய்யா இலைத் தேநீரில் உள்ள கலவைகள் உணவுக்குப் பிறகு சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் என்ற இரண்டு வகையான இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

நியூட்ரிசன் அண்ட் மெட்டபாலிசம் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, கொய்யா இலை தேநீர் செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பல்வேறு நொதிகளைக் கட்டுப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது :

உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு கொய்யா இலைச் சாறு உதவுகிறது.

கொய்யா இலைச் சாறு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதைத் தடுப்பதில் உதவுவதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

உடல் எடை குறைக்க விரும்புவர்கள் கொய்யா இலைச் சாறு அல்லது கொய்யா இலை தேநீர் அருந்தவது சிறந்த பலன்களைத் தரும்.,

இருமல் மற்றும் சளி எதிர்ப்பு :

கொய்யா இலைகளில் கனிசமான அளவு வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

வைட்டமின் சி சளி, இருமல், தடுமல் போன்ற நோய்களுக்கு எதிராக உடலை தயார் செய்கிறது.

கொய்யா இலைக் கஷாயம் குடிப்பது இருமல், சளி, மற்றும் தடுமல் போன்ற உபாதைகளிலிருந்து விடுபட உதவுகிறது.

மேலும் இது நுரையீரல், சுவாசப்பாதை, தொண்டையில் உள்ள கிருமிகளை நீக்கம் செய்வதில் உதவுகிறது.

ஜீரண அமைப்பு பாதுகாப்பு :

கொய்யா இலைகள் இரைப்பை குடல் போன்ற செரிமான உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவுகின்றன.

ஏனெனில் அவை செரிமான அமைப்பில் காணப்படும் எரிச்சலூட்டும் கூடுதல் சளி போன்ற ஒரு வகைத் திரவத்தின் உற்பத்தியைக் குறைக்கின்றன.

மேலும் குடலில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

மூளைக்கு நல்லது :

கொய்யா இலையில் வைட்டமின் பி3 (நியாசின்) மற்றும் வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) போன்ற பி குரூப் வைட்டமின்கள் உள்ளன.

இவை மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், அறிவாற்றல் செயல்பாட்டைத் தூண்டுதல் மற்றும் நரம்புகளைத் தளர்த்துதல் போன்ற செயல் பாடுகளில் உதவுகின்றன.

பல் வலிக்கு தீர்வு :

“கொய்யா இலைச் சாறு அழற்சி எதிர்ப்பு பண்புகள், நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் காரணமாக வாய் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உதவுகிறது.

பல்வலி, ஈறுகளில் வீக்கம் மற்றும் வாய்வழி புண்கள் போன்ற ஒட்டுமொத்த வாய் பராமரிப்பில் கொய்யா இலை சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

முகப்பரு நீங்க :

கொய்யா இலையில் கனிசமான அளவில் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி முகப்பருக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளில் பயன்படுகிறது.

கொய்யா இலைச் சாறு முகப் பருவால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும்.

முடி உதிர்வைத் தடுக்கிறது :

முடி உதிர்வால் அவதிப்பட்டுபவர்களுக்கு கொய்யா இலைச் சாறு ஒரு தீர்வாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொய்யா இலையில் ஆன்டிஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளதால், கொய்யா இலைச் சாறு அல்லது கொய்யா இலைகளை அவித்த நீர் கொண்டு மயிர்க் கால்களை மசாஜ் செய்வது முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

கொய்யா இலை தீமைகள் :

கொய்யா இலைச் சாறு அல்லது கொய்யா இலைத் தேநீர் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

கொய்யா இலை தீமைகள் பின்வருமாறு

  • கொய்யா இலைச் சாறு சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.
  • பிற மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக நீரிழிவு அல்லது இரத்த அழுத்த நோய்க்கன மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவர் அறிவுரைப் பெற்று பயன்படுத்துவது நல்லது.
  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொய்யா இலைச் சாறு படுத்துவது பாதுகாப்பானது என்பது பற்றி போதுமான ஆராய்ச்சித் தகவல்கள் இல்லை.
  • சருமத்தில் மற்றும் உச்சந்தலையில் மேற் பூச்சாக தடவும் போது சிலருக்கு அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம்.