கிராம்பு நன்மைகள், தீமைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

0

கிராம்பு நன்மைகளுக்கு காரணம் அதிலுள்ள யுஜெனால் எனும் சேர்மம் ஆகும். இந்த பதிவில் கிராம்பு நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி காணலாம்.

கிராம்பு :

கிராம்பு என்பது கிராம்பு மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட உலர்ந்த பூ மொட்டுகள் ஆகும். இதன் பூர்வீகம் இந்தோனேஷியா மற்றும் சீனா ஆகும்.

கிராம்பு

கிராம்பு இந்திய சமையலில் சூப்கள், இறைச்சிகள், சாஸ்கள் மற்றும் அரிசி உணவுகளில் மக்கள் பயன்படுத்தும் பிரபலமான மசாலாப் பொருள் ஆகும்.

கிராம்பு உணவுப் பொருட்களின் சுவை மற்றும் நறுமணத்தைக் கூட்ட மசாலா கூட்டுப் பொருளாகவும், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது.

கிரம்பு நன்மைகள் :

கிராம்பு சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.

கண்களுக்கு நல்லது :

கிராம்பு பழுப்பு நிறத்திற்கும் காரணம் பீட்டா கரோட்டின் எனும் நிரமியாகும். பீட்டா கரோட்டின்கள் ஒரு புரோவிட்டமின் ஆகும். இது வைட்டமின் ஏ யின் முன்னோடி ஆகும். இது கண்கள் மற்றும் உடல் ஒட்டுமொத்த ஆரோக்கித்திற்கும் அவசிமான வைட்டமின் ஆகும்.

சிறந்த ஆக்சிஜனேற்றியாகும் :

கிராம்பு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களைத் குறைக்க உதவுகின்றன.

மேலும் கிராம்பில் யூஜெனால் என்ற இயற்கை ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது மற்ற ஆக்சிஜனேற்றிகளை விட 5 மடங்கிற்கு அதிகமாக ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது.

இந்த செயல் முறை செல் சேதத்தைக் குறைத்து பல நோய்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

உணவில் சிறிதளவு கிராம்புகளை மற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளுடன் சேர்த்துக்கொள்வது உடல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் துணை புரிகிறது.

பல்வலிக்கு தீர்வு :

கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய் பல் வலிக்கு ஒரு சிறந்த தீர்வாக அறியப்படுகிறது.

கிராம்புகளின் பிளேக், ஈறு அழற்சி மற்றும் துவாரங்களில் காணப்படும் பாக்டீரியாவைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்க பல் மருத்துவ சங்கத்தின் (American Dental Association) படி கிராம்பு எண்ணெய் ஒரு பல் மயக்க மருந்தாக அமெரிக்க பல் மருத்துவ சங்கம் அங்கீகரித்துள்ளது.

எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது :

கிராம்பில் யூஜெனால் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஹைட்ரோ-ஆல்கஹாலிக்

சேர்மங்கள் நிரைந்துள்ளன. இவை எலும்புகளில் தாதுக்களை அதிகரித்து எலும்புகளி வலிமைப் படுத்த உதவுகின்றன.

பலவீனமான எலும்புகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் குறைபாடு உடையவர்கள் தொடர்ந்து சிறிதளவு கிராம்பை உட்கொள்வதால் பலன் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

கிராம்பில் உள்ள யூஜெனால் எனும் பொருள் பல நோய்களைத் தோற்றுவிக்கும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல் படுகிறது.

கிராம்பு இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை குறைத்து வெள்ளை இரத்த அணுக்களை தூண்டுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடல் வலியைக் குறைக்கிறது

கிராம்பில் உள்ள யூஜெனால் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

மேலும் இது உடலில் வலி ஏற்பிகளைத் தூண்டுவதன் மூலம் வலியைக் குறைப்பதில் உதவுகிறது.

கிராம்பு எண்ணெய் அல்லது கிராம்பு சாறு கீல்வாதம், வீக்கம் போன்ற வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

புற்றுநோய்த் தடுப்பு :

கிராம்பில் உள்ள யூஜெனால் சிறந்த ஆன்டி கார்சினோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

இது நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் போன்ற புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது

தினசரி உணவில் கிராம்பு சேர்த்துக்கொள்வது உடல் வளர்சிதை மாற்றத்தை துரிதப் படுத்துகிறது. மேலும் உடல் வெப்ப நிலையை ஒழுங்கு படுத்துகிறது.

இரத்த சுத்திகரிப்பு :

கிராம்பில் நிறைந்துள்ள ஆக்சிஜனேற்றிகள் இரத்தத்தை சுத்திகரித்து, சருமத்திற்கு உள்ளிருந்து பளபளப்பை அளிக்கிறது.

இரத்த சர்க்கரையைக் குறைக்கிறது :

கிரம்பில் உள்ள யூஜெனோல் எனும் சேர்மம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று சில ஆரம்பகால ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளன.

இருப்பினும், பெரும்பாலான ஆராய்ச்சிகள் விலங்குகளிலேயே நடத்தப் பட்டுள்ளன.

மனிதர்களில் கிராம்பு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்குமா என்பது பத்தி போதுமான உறுதி செய்யப்பட்ட நம்பகமான தகவல்கள் இல்லை.

மனநிலையை அமைதிப் படுத்துகிறது :

கிராம்பு எண்ணெயை லேசானா சூடான வெந்நீரில் கலந்து தலை, கழுத்து மற்றும் முதுகில் தேய்த்தால் பதட்டம் நீக்கி மனதை அமைதிப் படுத்துவதில் உதவும்.

கிராம்பு தீமைகள் :

கிராம்பு தீமைகள் பின்வருமாறு

  • கிராம்பு சிறிதளவு உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, இருந்தாலும் தொடர்ந்து உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்.
  • இவை இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.
  • சிலருக்கு தலைச்சுற்றல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தலாம்.
  • கிராம்பில் உள்ள யூஜெனோல் எனும் சேர்மம் சில இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் வினைபுரிந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
  • அதிகப் படியான யுஜெனால் நச்சுத் தன்மையை ஏற்படுத்தலாம்.
  • பாரம்பரிய மருத்துவ முறையின் படி, கிராம்பு மசாலா வகைப் பொருள் ஆகும். இது மூக்கில் இரத்தப்போக்கு, வாய் புண்கள், வயிற்றில் எரிச்சல் மற்றும் தொண்டை வெடிப்புகளை ஏற்படுத்தலாம்.