ஆச்சர்யமூட்டும் 10 கத்தரிக்காய் நன்மைகள், தீமைகள்

0

கத்தரிக்காய் நன்மைகள், பயன்கள் மற்றும் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் மற்றும் கத்தரிக்காய் தீமைகள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன…

கத்தரிக்காய் :

கத்திரிக்காய் என்றதுமே எனக்கு அறவே பிடிக்காது, என்பவர்கள்தான்அதிகம். நிறைய பேர் சாப்பிட உட்கார்ந்த உடனேயே கத்திரிக்காயை பார்த்தால் அதை ஓரமாக எடுத்து வைத்துவிட்டுதான் சாப்பிடவே ஆரம்பிப்பார்கள்.

கத்திரிக்காய்

இதனுடைய மருத்துவ பயன்கள் தெரிந்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

கத்தரிக்காய் நன்மைகள் :

வாரம் இரண்டு முறை கத்தரிக்காய் சாப்பிட்டு வந்தாலே, உடலில் இருக்கக்கூடிய சில பிரச்சினைகள்  குணமாகும் என்று கூட சொல்லலாம்.

அந்த அளவுக்கு நம் உடல் நலத்திற்கு எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியது. கத்தரிக்காய் நன்மைகள் சில பின்வருமாறு

சுவாச பிரச்சனைகள் குணமாக :

பொதுவாக காற்றில் கண்ணுக்கு தெரியாத பல கிருமிகளும் தூசிளும் இருக்கிறது.

இவை  நாம் சுவாசிக்கும் போது நம்மை அறியாமலயே நுரையீரலுக்குள் சென்று சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகளான ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

கத்தரிக்காயை அடிக்கடி உணவில்  சேர்த்து கொண்டால் இயற்கையாகவே நுரையீரலில் இருக்கக்கூடிய கெட்ட கிருமிகள், தூசிகள் எல்லாமே சளி மூலமாக வெளியேறி நுரையீரலும் சுத்தமாகும்.

மாரடைப்பு வராமல் தடுக்க :

கத்தரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இரத்தக் குழாய்களில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் கரைகிறது, இதய தசைகள் நன்கு வலுப்பெறுகிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராகும்.

இதன் மூலமாக மாரடைப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

நச்சுக்களை வெளியேற்ற :

காய்கறிகளிலேயே ஒரு சிறந்த டிட்

டாக்ஸ்  சூப் என்றால்  அது கத்திரிக்காய் சூப்பாக  தான் இருக்க முடியும்.

ஏனெனில் கத்தரிக்காயில் இருக்கக்கூடிய ரசாயனங்கள், உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் அதாவது டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றுகின்றன.

வாரம் ஒருமுறை நான்கு, ஐந்து கத்தரிக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் மோர் சேர்த்து குடித்து வந்தாலே உடலில் இருக்கக்கூடிய அனைத்து கழிவுகளும் வெளியேறி உடல் சுத்தமாகும்.

கொலஸ்ட்ராலை குறைக்க :

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் கத்திரிக்காய் முக்கிய பங்காற்றுகிறது. என பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிக கொலஸ்டெரால் பிரச்சனையால்  அவதிப் படுபவர்கள் கத்தரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் குறையும்.

சிறுநீரக கற்கள் கரைய :

சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப் படுபவர்கள் கத்திரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

அதே போன்று சிறுநீரக எரிச்சல், தொற்று போன்ற பிரச்சனைகளால் அவதி படுபவர்களுக்கு கத்திரிக்காய் மிகவும் நல்லது.

மூலம் வராமல் தடுக்க :

அதிக காரமான உணவுகள் சாப்பிடுவதனாலும், தொடர்ந்து அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்வதாலும், நாட்பட்ட மலச்சிக்கல் போன்ற காரணங்கள்னாலும் மூலம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன .

மூல நோயால் பாதிக்கப் பட்டவர்கள் கத்தரிக்காயை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வர கத்தரிக்காயில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து, குடலின் இயக்கத்தை சீராக இயக்கி, செரிமானம் நன்கு நடைபெற்று மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. இதன் மூலமாக பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

பிரீ ரடிக்கல்சை போக்க :

பொதுவாக, நமது உடலில் உடற்செல் கழிவுகள் என்று சொல்லக்கூடிய பிரீ  ரடிக்கல்ஸ் அதிக அளவில் இருக்கும். இது நம் ஆரோக்கியமான செல்களை பாதிக்கும் தன்மை உடையது. 
 

இத்தகைய பிரீ ரடிக்கல்சை எதிர்த்து போராடி வெளியேற்றும் ஆற்றல் இந்த கத்தரிக்காய்க்கு உண்டு.  கத்திரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர நமது செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மூளை செயல்திறன் அதிகரிக்க :

கத்தரிக்காயில் உள்ள பைட்டோ நியூட்ரின்கள் நமது மூளை செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மூளை செல்களில் செல்  மெமரன்களை பாத்துக்காப்பது மட்டுமல்லாமல், நினைவாற்றல் அதிகரிக்கவும் உதவுகிறது.

கல்லீரல் சுத்தமாக :

தவறான உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும்,  அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட  வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அப்படி பட்டவர்கள் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை கத்திரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர கல்லீரலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். அதோடு கல்லீரலும் சுத்தமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க :

கத்தரிக்காயில் குறைந்த அளவு மாவுச்சத்து மற்றும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மேலும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் கத்தரிக்காய் பாலிசையா எனும் நோயை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் தொற்று நோய் வராமலும் தடுக்கிறது.

குறிப்பாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் கத்தரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர சீக்கிரம் இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர உதவி செய்யும். 

கத்தரிக்காய் தீமைகள் :

கத்தரிக்காய்களை குறைந்த முதல் மிதமான அளவில் உட்கொள்வது எந்தத் தீங்கும் ஏற்படாது. இருப்பினும், அதிக அளவில் உண்ணும் போது சில பக்க விளைவுகள் ஏற்படலாம். கத்தரிக்காய் தீமைகள் பின்வருமாறு

இரும்பு உறிஞ்சுதலை சீர்குலைக்கலாம்:

நாசுனின் எனப்படும் ஒரு வகை அந்தோசயனின் கத்தரிக்காய் தோலில் உள்ளது. இது இரும்புடன் பிணைக்கப்பட்டு செல்களில் இருந்து நீக்குகிறது. இதன் மூலம் இரும்பு உடலால் உறிஞ்சப் படுதலைக் குறைக்கலாம்.

இது சம்பந்தமாக அதிக ஆராய்ச்சி தேவை என்றாலும், இரும்புச் சத்து குறைவாக உள்ளவர்கள் கத்தரிக்காய்களைத் தவிர்ப்பது நல்லது.

சோலனைன் விஷத்தை ஏற்படுத்தலாம்

கத்தரிக்காயில் சோலனைன் என்ற சேர்மம் உள்ளது. இந்த காய்கறி அதிகமாக சாப்பிடுவது சோலனைன் திரட்சிக்கு வழிவகுக்கும். இது வீக்கம், வலி ​​மற்றும் மூட்டு விறைப்பு போன்ற கீல்வாதத்தின் அறிகுறிகளை உண்டாக்குவதாக சொல்லப்படுகிறது.

எனவே கீல்வாதம் உள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.

ஒவ்வாமை :

கத்தரிக்காயில் ஹிஸ்டமின் எனும் பொருள் அதிகமாக உள்ளது. இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக சொல்லப் படுகிறது.

கத்தரிக்காய்களை குறைந்த முதல் மிதமான அளவில் உட்கொள்வது எந்தத் தீங்கும் ஏற்படாது. இருப்பினும், அதிக அளவில் உண்ணும் போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.