கஷ்கொட்டை நன்மைகள் மற்றும் தீமைகள்

0

கஷ்கொட்டை என்றால் என்ன? கஷ்கொட்டையிலுள்ள சத்துக்கள், கஷ்கொட்டை நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து விரிவாக காணலாம்.

கஷ்கொட்டை

கஷ்கொட்டையை பச்சையாகவோ, வறுத்தோ, பொடியாக்கியோ அல்லது சமையல்களிலும் சேர்த்தோ சாப்பிடலாம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவுக்காக பயன்படுத்தப் பட்டு வருகிறது.

கஷ் கொட்டை

கஷ்கொட்டை மரத்தின் அறிவியல் பெயர் ஜெனஸ் காஸ்டானியா (Genes Castanea) ஆகும். இது ஆங்கிலத்தில் செஸ்ட் நட்ஸ் (Chest Nuts) என்று அழைக்கப்படுகிறது.

கஷ் கொட்டை மரம் உலகெங்கிலும் வளர்ந்தாலும் அவை வளரும் பகுதிகளுக்கு ஏற்ப நான்கு வகைகள் உள்ளன.

அவை சீன கஷ் கொட்டை, ஜப்பானிய கஷ் கொட்டை, ஐரோப்பிய கஷ் கொட்டை மற்றும் அமெரிக்க கஷ் கொட்டை ஆகும்.

கஷ்கொட்டையில் உள்ள சத்துக்கள் :

யு. எஸ் டிபார்ட்மென்ட் ஆப் அக்ரிகல்சர் தரவுகளின் படி 100 கிராம் வருத்த கஷ் கொட்டையில் உள்ள சத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கலோரிகள் :

வைட்டமின்கள் :

மினரல்கள் :

கஷ்கொட்டை நன்மைகள் :

இதயத்திற்கு நல்லது :

கஷ் கொட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற இருதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

செரிமானத்திற்கு நல்லது :

கஷ்கொட்டை நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். நார்ச் சத்து குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.

செலியாக் நோயாளிகளுக்கு நல்லது:

கஷ்கொட்டைகள் பசையம் இல்லாதவை. எனவே இது செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.

நீரிழிவு நோய்க்கு நல்லது :

செஸ்ட்கொட்டையில் உள்ள நார்ச்சத்து உங்கள் இரத்த சர்க்கரையை சமப்படுத்தவும் உதவுகிறது .

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது உடல் மாவுச்சத்தை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு திடீரனே உயர்வதைத் தடுக்கிறது.

மேலும் கஷ் கொட்டையின் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு 54 ஆகும்.

இது போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் சாப்பிடும்போது இரத்த சர்க்கரை அளவுகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது.

உடல் எடை :

செஸ்ட்கொட்டையில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன.

எனவே மற்ற கொட்டைகளுடன் ஒப்பிடும் போது பசியைக் கட்டுப்படுத்தி மேலும் அதிக கலோரிகளால் உடல் எடை கூடும் வாய்ப்பைக் குறைக்கிறது.

தாமிரத்தின் மூலம் :

தாமிரம் இரத்த நாளங்கள், நரம்புகள், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தில் உதவுகிறது.

மேலும் இரும்புச் சத்து உடலால் உறிஞ்சப் படுவதை ஊக்குவிக்கிறது என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (U. S National Library Of Medicine) தெரிவித்துள்ளது.

சுமார் 10 வறுத்த கஷ் கொட்டைகளில் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்ட தாமிரம் அளவில் 21% உள்ளது.

வைட்டமின் சி மூலம் :

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, உடல் முழுவதும் இரத்த நாளங்கள், குருத்தெலும்பு, தசை மற்றும் கொலாஜன் உருவாவது போன்ற செயலாபாடுகளில் உதவுகிறது.

மேலும் ஆன்டிஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது மற்றும் உடல் இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கும் சேமிப்பதற்கும் உதவுகிறது.

கஷ்கொட்டை தீமைகள் :

பெரும்பாலான மக்களுக்கு கஷ்கொட்டை பாதுகாப்பானது தான் இருந்தாலும் அவற்றில் டானின்கள் இருப்பதால், அவை சிலருக்கு செரிமானக் கோளாறு மற்றும் குமட்டலை ஏற்படுத்தலாம்.