கருஞ்சீரகம் நன்மைகள், பயன்கள் மற்றும் தீமைகள்

0

கருஞ்சீரகம் :

கருஞ்சீரகம் அறிவியல் பெயர் நைஜெல்லா சடிவா ஆகும். இது தென் மேற்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்டது.

கருஞ்சீரகம்

இது இந்தியாவில் பிளாக் கமின்ஸ் என்றும் கொலொஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது.

கருஞ்சீரகம் சத்துக்கள் :

கருஞ்சீரக விதைகளில் 100 க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில தோராயமாக

கருஞ்சீரகம் நன்மைகள் :

கருஞ்சீரகம் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பண்ணீடுங்காலமாக பயன்பாடுத்தப்பட்டு வருகிறது. இந்த பதிவில் கருஞ்சீரகம் பயன்கள் மற்றும் நன்மைகள் குறித்து விரிவாக காணலாம்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது :

கருஞ்சீரகம் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உதவுவதாக சொல்லப்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பிளாக் டீயுடன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரோக்கியமான இதயம் :

கருஞ்சீரகம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

கருஞ்சீரக எண்ணெயை பாலுடன் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

வீக்கத்தைக் குறைக்கிறது :

கருஞ்சீரக விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக அவை பல்வேறு நாள்பட்ட அழற்சிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

கால் மற்றும் கை மூட்டுகளுக்கு இடையே லூப்ரிகேஷன் வழங்குவதன் மூலம் மூட்டு வலிகளை குணப்படுத்த உதவுவதாக சொல்லப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் மூட்டு வலி மருந்துகள் தயாரிக்க கலோஞ்சி எண்ணெய் பயன்படுத்தப் படுகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது :

உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

பற்கள் வலிமை :

பலவீனமானை பற்களைப் பலப்படுத்தவும், ஈறுகளில் ஏற்படும் கட்டுப்படுத்தவும் மற்றும் ஒட்டு மொத்த வாய் ஆரோக்கியத்திற்கும் போன்ற உங்கள் ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்திற்கும் கலோஞ்சி நன்மை பயக்கும்.

பல் வலியை குணப்படுத்த கருஞ்சீரகம் உதவுகிறது.

வாய் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஒரு கப் தயிருடன் அரை டீஸ்பூன் கலோஞ்சி எண்ணெயைக் கலந்து, ஈறுகள் மற்றும் பற்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவவி வந்தால் நன்மை பயக்கும்.

ஆஸ்துமா நிவாரணம் :

காற்று மாசுபாடு காரணமாக, ஆஸ்துமா மிகவும் பொதுவான நோயாக மாறியுள்ளது. ஆஸ்துமாவால் அவதிப் படுபவர்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக உள்ளது.

வெதுவெதுப்பான நீரில் கலோஞ்சி எண்ணெய் மற்றும் தேன் கலந்து தினமும் குடித்து வர ஆஸ்துமாவுக்கு நன்மை பயக்கும்.

 எடை இழப்பு :

கருஞ்சீரகம் உடல் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையைக் குறைத்து மெலிதாகவும், டிரிம் ஆகவும் மாற்ற உதவுகிறது.

ஆய்வுகளின்படி, பிளாக் கமின்ஸ் விதைகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளும்போது உடல் எடை குறைவதாக தெரிய வந்துள்ளது.

சிறுநீரக ஆரோக்கியம் :

கருஞ்சீரகம் இரத்த சர்க்கரை அளவுகள், சீரம் கிரியேட்டினின் அளவுகள் மற்றும் இரத்த யூரியா அளவுகளை குறைப்பதன் மூலம் சிறுநீரகங்களில் தோன்றும் சிக்கல்களைக் குறைக்கிறது.

மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் தொற்று நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு :

கருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிகல்களை நடுநிலையாக்குகிறது.

இது குறிப்பாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

தலைவலியை நிவாரணம் :

தலைவலிக்கு தேவையில்லாமல் நவீன மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன் இயற்கை வைத்தியத்தை பயன்படுத்துவது சிறந்தது.

சிறிது கலோஞ்சி எண்ணெயை நெற்றியில் தடவி சிறிது நேரம் ஓய்வெடுத்தால் கடுமையான தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கருஞ்சீரகம் தீமைகள் :

பொதுவாக கருஞ்சீரகம் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகள் ஏற்படுத்தாது.

இருப்பினும், அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்போது அது குறைந்த இரத்த சர்க்கரை அளவு மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

மேலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானதா என்பது பற்றி தகவல்கள் இல்லை. எனவே, பாலூட்டும் போது கலோஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

கலோன்ஜி அறுவை சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பிறகு இரத்தம் உறைதலை தாமதப் படுத்தலாம்.

சில நேரங்களில், கலோஞ்சி தோலில் பயன்படுத்தப்படும் போது ஒவ்வாமை எதிர்வினை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

களோஞ்சி தொடர்ச்சியாக பயன்பாடுத்துவது பற்றி போதுமானவ தகவல்கள் இல்லாததால் போதுமானவ மருத்துவ தரவுகள் இல்லை.