கருங்குருவை அரிசி என்றால் என்ன, கருங்குருவை அரிசி பயன்கள் மற்றும் நன்மைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
கருங்குருவை அரிசி
இது கருங்குருவை அரிசி என்றும் கருப்பு குருவை அரிசி என்றும் வயாகரா அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
கருங்குருவை அரிசி என்பது குறுகிய கால பயிரான குறுவை இனத்தைச் சேர்ந்த அரிசி வகையாகும். இது பொதுவாக ஜூன் முதல் ஜூலை வரை அறுவடை செய்யப்படுகிறது.
இதில் இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது.
இது தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற போன்ற பகுதிகளுக்கு பாரம்பரிய அரிசி வகையாகும்.
இந்த கருங்குருவை நெற் பயிர் 120 முதல் 125 நாட்களுக்குள் பயிரிடுவது சிறந்தது.
மேலும் தமிழகத்தில் டிசம்பரில் துவங்கி ஜனவரி மாதம் வரையிலான காலங்கள் இது விதைப்பதற்கு ஏற்றது என்றும் கூறப்படுகிறது. இது ஒரைசா சாட்டைவா (Oryza Sativa) குடும்பத்தைச் சேர்ந்தது.
இதன் நெல் கருப்பு நிறத்திலும் ஆனால் உள்ளே உள்ள நெல் சிகப்பு நிறத்திலும் தோற்றமளிக்கும்.
கருங்குருவை அரிசி பயன்கள் :
கருங்குருவை அரிசியை பயன்படுத்தி இட்லி, தோசை, சாதம், பணியாரம், புட்டு போன்ற அரிசியால் செய்யப்படும் அனைத்து வகையான உணவுகளும் செய்யலாம்.
இந்த அரிசியின் முழு ஆரோக்கிய நன்மைகளைப் பெற சமைப்பதற்கு முன் குறைந்தபட்சம் 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் இரத்த சோகை, பலவீனம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிகப்படியான மேகத் தேக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கருங்குருவை அரிசி பரிந்துரைக்கப்படுகிறது.
கருங்குருவை அரிசி எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது மேலும் யானைக்கால், சின்னம்மை போன்ற பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
மேலும் இது இந்தியாவில் இயற்கை “வயாகரா” என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கருங் குருவை நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கருங்குருவை அரிசி மற்ற பிற வழக்கமான அரிசியைப் போலவே பயன்படுத்தப்படுகிறது.
கருங்குருவை அரிசி நன்மைகள் :
கருங்குருவை அரிசி அறியப்படாத பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாக நம்பப் படுகிறது.
இந்திய இதிகாச புராணங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் தொடங்கி, பல சித்த நூல்களிலும் இது போற்றப்பட்டுள்ளது.
கருங்குருவை அரிசி நன்மைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இரத்த சோகையைப் போக்குகிறது
சாதாரண அரிசியுடன் ஒப்பிடும் போது, இதில் 4 மடங்கு அதிகம் இரும்புச் சத்து உள்ளது. அதாவது 100 கிராம் கருங்குருவை அரிசியில் 19 கிராம் இரும்புச் சத்து உள்ளது.
எனவே இது இரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுவதன் மூலம் இரத்த சோகையைத் தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சிறந்த நச்சு நீக்கியாகும்
உடல் நச்சுகள் மற்றும் உடலில் தேங்கியுள்ள பிற கழிவுகளை அகற்ற உதவுகிறது.
பாலியல் ஆரோக்கியம்
இயற்கை வயாகரா என்றும் அழைக்கப்படும் கருங்குருவை அரிசி பாலியல் ஆரோக்கியத்தில் நன்மை பயக்கிறது.
கருங்குருவை அரிசியில் செய்த உணவுகள் உடலில் பித்த செயல்பாடுகள் மற்றும் ஹார்மோன் சுரப்புகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வாங்கிக்கிறது.
மேலும் இது ஆச்சரியப்படும் விதமாக, இது கருவுறுதல் பண்புகளையும் அதிகரிக்கிறது.
கொழுப்பைக் குறைக்கிறது
மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைப்பதும் கருங்குருவை அரிசியின் பலன்களில் ஒன்றாகும்.
கருங்குருவை அரிசியை தினமும் சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.
Pregnant women early stage la karukuravai sapidalama