கரிசலாங்கண்ணிக் கீரை மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்

0

கரிசலாங்கண்ணிக் கீரை

கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான், பொற்கொடி என வேறு சில பெயர்களும் உள்ளன.

கரிசலாங்கண்ணி கீரை

இது ஒரு மூலிகை வகை தாவரமாகும். பழங்காலம் தொட்டே பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை:

  1. வெள்ளைக் கரிசலாங்கண்ணி
  2. மஞ்சள் கரிசலாங்கண்ணி

இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணி மிகவும் விசேஷமானது. இரண்டையுமே உணவாகச் சாப்பிடலாம். கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.

கரிசலாங்கண்ணி கீரை மருத்துவப் பயன்கள்

1. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் சாப்பிட்டால், கப நோய்கள், ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு போன்றவை குணமாகும்.

2. கரிசலாங்கண்ணிக்கீரைச் சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.

3 கரிசலாங்கண்ணி கீரைச் சாறு (30 மி.லி.), பருப்புக் கீரைச்சாறு (30 மி.லி.) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.

4. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் நெல்லிமுள்ளி, சீரசும் இரண்டையும் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இளநரை மறையும்.

5. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் (30 மி.லி.) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் (Oil Pulling) வாய்ப்புண், டான்சில், சைனஸ் போன்றவை குணமாகும்.

6. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றை (30 மி.லி.) 48 நாள்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பைக் கற்கள் கரையும்.

7. கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், ரத்த சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.

8. கரிசலாங்கண்ணிக் கீரையுடன் இரண்டு கடுக்காயைத் தட்டிப் போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

9. கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

10.கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு, சோம்பு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்துவிதமான தலை வலியும் தீரும்.

கரிசலாங்கண்ணிக் கீரைத் துவையல்

கரிசலாங்கண்ணி கீரைத் துவையல் செய்முறை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும். தலைமுடி நீளமாக வளரும்.

தேவையான பொருள்கள்
  • கரிசலாங்கண்ணிக் கீரை – 1 கட்டு (200 கிராம் )
  • மிளகாய் வற்றல் – 8
  • எலுமிச்சை – 2
  • நெய் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை

கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்து, வாணலியில் போட்டு சிறிது நெய்விட்டு வதக்கவும்.

மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப்போட்டு தனியே வறுத்து, அத்துடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்து, கீரையுடன் சேர்த்து வதக்கி இறக்கவும். கரிசலாங்கண்ணி கீரைத் துவையல் ரெடி….!

இதைத் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும். தலைமுடி நீளமாக வளரும்

கரிசலாங்கண்ணிக் கீரை சூப்

கரிசலாங்கண்ணிக் கீரை சூப்பை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல் பலமடையும். ரத்த சோகை மறையும்

தேவையான பொருள்கள்
  • கரிசலாங்கண்ணிக் கீரை – 1 கட்டு
  • தக்காளி – 2
  • வெங்காயம் – 1
  • மிளகு, சீரகம் – அரை ஸ்பூன்
  • பூண்டு – 6 பல்
  • தனியா, புதினா இலை – ஒரு கைப்பிடி
  • உப்பு, மஞ்சள் – தேவையான அளவு
  • பெருங்காயம் – கால் ஸ்பூன்
  • எலுமிச்சை – 1
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை

கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியின் எண்ணெய்விட்டு மிளகு, சீரகம், பூண்டு, தனியா, புதினா, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைத் தட்டிப்போட்டு வதக்கவும்.

பிறகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கீரையையும் நன்கு வதக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு பிரட்டவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டுக் கொதிக்கவைத்து இறக்கவும். கரிசலாங்கண்ணி சூப் தயார்..!

கரிசலாங்கண்ணி கீரை கடைசல் :

கரிசலாங் கண்ணி கீரை கடைசல் செய்முறை மற்றும் செய்ய தேவையான பொருட்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்ட்டுள்ளது.

தேவையான பொருள்கள்
  • கரிசலாங்கண்ணிக் கீரை – ஒரு கட்டு
  • சிறு பருப்பு – 100 கிராம்
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • மிளகாய் வற்றல் – 5
  • பூண்டு – 6 பல்
  • தக்காளி – 2
  • மிளகு, மஞ்சள், சீரகம் – தலா 1 ஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் – 2 கைப்பிடி
  • பெருங்காயம் – கால் ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி, மிளகு, சீரகம் தட்டிச் சேர்த்து, மஞ்சள், சிறு பருப்பு இரண்டையும் சேர்த்து வேகவைக்கவும்.

பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு, மிளகாயைக் கிள்ளிப்போட்டு வதக்கி, வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கி, வேகவைத்து எடுத்த கீரையைக் கடைந்து இதனுடன் சேர்த்து பெருங்காயம் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்புப் போட்டு இறக்கவும். கரிசலாங்கண்ணி கீரை கடைசல் தயார்….!

இந்த கரிசலாங்கண்ணிக் கீரைக் கடைசல், உணர்வுகளை நெறிப்படுத்தக்கூடியது. கண் பார்வையை கூர்மையடையச் செய்யும்.