கழற்சிக்காய் நன்மைகள், மருத்துவ பயன்கள் மற்றும் களர்ச்சிக்காய் தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
கழற்சிக்காய்
கழற்சிக்காய் ஆங்கிலத்தில் பிவர் நட், போண்டகட் நட், நிக்கர் நட் என்று அழைக்கப்படுகிறது.
இது சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு உடல் நலக் கோளாறுகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
கழற்சிக்காய் நன்மைகள்
கழற்சிக்காய் பல்வேறு மருத்துவ பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மிக முக்கியமான மூலிகையாகும்.
பெண்களுக்கு பிசிஓஎஸ் (பாலி சிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்), ஒழுங்கற்ற மாதவிடாய், தைராய்டு புற்றுநோய் உட்பட பல வகையான புற்றுநோய்களைத் தடுப்பது மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்துவது போன்ற பண்புகளுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் பயன் படுத்தப் படுகிறது.
கழற்சிக்காய் நன்மைகள் பின்வருமாறு
வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது
கழற்சிக்காயில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் குணம் உள்ளது. எனவே வயிற்றுப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாக்டீரியா எதிர்ப்பு :
கழற்சிக்காய் தாவரத்தின் தண்டு மற்றும் வேரில் எத்தனால் காரணமாக வைரஸ் எதிர்ப்பு தன்மை உள்ளது. இந்த பண்பு காரணமாக, இது வைரஸுக்கு எதிராக திறம்பட போராட உதவுகிறது.
ஆக்சிஜனேற்ற பண்புகள் :
கழற்சிக்கொட்டையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்பு செல்களில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைக் குறைக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு வகையான நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
நீரிழிவு நோய் எதிர் பண்பு
கழற்சிக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், எடை இழப்பு, காயங்களை மெதுவாக குணப்படுத்துதல் மற்றும் மங்கலான பார்வை போன்ற நீரிழிவு நோய் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
தசை ஆரோக்கியம்
கழற்சிக்காய் தசை பதட்டம் மற்றும் தசைப் பிடிப்பை குறைக்க உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலத்தை பலப் படுத்தி மன ரீதியான பதற்றத்தை குறைக்க உதவுகிறது.
தோல் ஆரோக்கியம்
களற்சிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில், சொறி, தோல் நோய்த்தொற்றுகள், முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது.
கழற்சிகாய் பொடியை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் கலந்து தினமும் இரண்டு முறை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர சரும கோளாறுகள் விரைவில் மறையும்.
மலச்சிக்கல் நீங்க
பொதுவாக நார்ச்சத்து குறைபாடு மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் ஆகும். கழற்சிக்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது. கழற்சிகாய் இலையை வெண்ணெயில் வறுத்து, சிறிதளவு நாளைக்கு மூன்று முறை வீதம் சாப்பிட்டு வர விரைவில் மலச்சிக்கல் குணமாகும்.
மூட்டு வலி நீங்க
களற்சிக்காய் மூட்டு வழியை குணப்படுத்த உதவுகிறது. இதன் எண்ணெய்யை வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்துவர வலிகளை திறம்பட குறைக்கும்.
மூளை ஆரோக்கியம்
களற்சிக்காய் நினைவாற்றலை அதிகரிக்கவும், மன பதட்டம், மனச் சோர்வு போன்ற மனநல கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. இதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது நரம்பியக்கடத்தல் டிமென்ஷியா, பார்கின்சன் போன்ற கோளாறுகளைக் குறைக்க பயன்படுகிறது.
சுவாசக் கோளாறுகள்
கழற்சிக்காய் இருமல், மூச்சுத்திணறல், நிமோனியா மற்றும் காசநோய் போன்ற சுவாசம் சம்பந்தமான கோளாறுகளை நிர்வகிக்க உதவுகிறது. இது சுவாசப் பாதையில் இருந்து சளியை அகற்ற உதவுகிறது.
மாதவிடாய் கோளாறு :
களர்ச்சிக்காய் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான அல்லது குறைந்த இரத்த போக்கு, வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
கழற்சிகாய் தீமைகள்
கழற்சிக்காயின் மருத்துவ குணங்கள் காரணமாக, இது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில், பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. ஆனால் இதில் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
கழற்சிக்காய் அதிக அளவு உண்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம் எனவே கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
கழற்சிக்காய் ஒரு மூலிகைவகை என்பதால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அதிக அளவு பயன்படுத்துவது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
சில மருந்துகளை வெறும் வயிற்றில் சாப்பிட. வேண்டும் என்பார்கள் குடலில் தேங்கிவிடும் அனைத்து கழிவு பொருள்களும் வெளிதள்ளப்பட்டு காலியாக இருக்கும் குடலே வெறும் வயிறு என்பது ஆகும்