கடுகு நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

0

கடுகு நன்மைகள், தீமைகள் அதில் நிரம்பியுள்ள வைட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் பற்றி சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

கடுகு :

கடுகு கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்ட உலகின் இரண்டாவது மிகவும் பிரபலமான மசாலா வகை விதை ஆகும்.

கடுகு

இது இந்தியா, சீனா பங்களாதேஷ், கனடா, போலந்து, பாகிஸ்தான், பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு உலகம் முழுவதும் பயன்படுத்தப் படுகிறது.

அவற்றில் குறைந்த கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கடுகு சத்துக்கள் :

கடுகு உடல் ஆரோக்கியத்திற்கு அவசிமான ஊட்டச்சத்துக்களின் கலவையைக் கொண்டுள்ளது.

அவற்றில் வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்கள் உள்ளன. மேலும் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களையும் கொண்டுள்ளது.

100 கிராம் கடுகு விதைகளில் உள்ளது சத்துக்கள் தோராயமாக

கடுகு நன்மைகள் :

கடுகு கருப்பு மற்றும் மஞ்சள் என இரண்டு வகைகளில் காணப்படுகிறது. இரண்டு வகைகளுமே கிட்டத்தட்ட ஒத்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. கடுகு நன்மைகள் பின்வருமாறு

செரிமானத்திற்கு உதவுகிறது

கடுகு ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவுகிறது.

இதில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியம் மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

கடுகில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

பொதுவாக அதிக கொலஸ்ட்ரால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

எலும்புகள், பற்கள், ஈறுகள்

கடுகு விதைகள் பலவிதமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன.

மேலும் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. கடுகு விதைகளை பொடி செய்து உப்பு சேர்த்து பற்கள் மற்றும் ஈறுகளில் வாரம் ஒருமுறை மசாஜ் செய்வது நல்லது.

முதுமையைத் தடுக்கிறது

கடுகில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு, இதய பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு காரணமான பிரீ ரேடிக்கல்களை நீக்குகின்றன.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

கடுகு விதைகளில் குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் மைரோசினேஸ் போன்ற சேர்மங்கள் நிறைந்துள்ளன.

அவை உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும், அவற்றை அழிக்க உதவுவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

தோலுக்கு நல்லது

கடுகு விதைகள் பல்வேறு தோல் பராமரிப்பு முறைகளிலும் பயன்படுத்தப் படுகிறது.

கடுகை அரைத்து பேஸ்ட்டாக உபயோகிப்பது ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது.

முகப்பருவால் பாதிக்கப்படுபவர்கள் இதை ஃபேஸ்பேக்காகவும் பயன்படுத்தலாம், ஏனெனில் இதில் உள்ளது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக முகப்பருக்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நன்மை பயக்கிறது.

மேலும் கடுகு பேக் மற்றும் ஸ்க்ரப் சருமத்தை ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதில் உதவுகிறது.

மேலும் இது சொரியாசிஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், ரிங்வோர்ம்கள் போன்ற உடலில் உள்ள பல்வேறு தோல் நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது.

கடுகு தீமைகள் :

கடுகு விதைகளை மிகச்சிறிய அளவுகளில் சமையல்களில் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும் சிலருக்கு ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கடுகு தீமைகள் பின்வருமாறு

கடுகு பேஸ்ட்டைப் மேற்பூச்சாக தோழில் பயன்படுத்தும்போது கண்களில் படாத வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடுகு பேஸ்ட் கண்களில் பட்டால் எரிச்சலையும் கண்ணீரையும் ஏற்படுத்தும்.

அதிக அளவில் உட்கொள்வதால் வயிற்று வலி, மலச்சிக்கல், வாந்தி, பேதி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.