ஜீவன் உமாங் பாலிசி சிறப்பம்சங்கள்

0

ஜீவன் உமாங் பாலிசி

பங்குச் சந்தை சாராத, இலாபத்தில் பங்கு பெறக்கூடிய வாழ்நாள் முழுவதற்குமான பாலிசி

ஜீவன் உமாங் பாலிசி

பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்தவுடன் பாலிசி காலம் (100 வயது) வரை ஒவ்வொரு ஆண்டும் 8% உத்திரவாதத்துடன் (Guaranteed) வாழ்வு கால பயன்களை தரக்கூடிய சிறப்பு பாலிசி.

எல்ஐசி ஜீவன் உமாங் என்பது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். அதாவது காப்பீடுதாரருக்கு 100 வயது முடியும் வரை காப்பீடு வழங்கப்படும். வருமானம் மற்றும் காப்பீட்டுப் பாதுகாப்பின் இரட்டைப் பலன்களுடன் வருவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். இது ஏதேனும் அவசரநிலையின் போது நிதி காப்புப் பிரதியாக செயல்படுகிறது.

ஜீவன் உமங் பாலிசியின் சிறப்பம்சங்கள் :

  • விருப்பத்திற்கேற்ப Accident Benefit ரிடேர்
  • விருப்பத்திற்கேற்ப Term Assurance Rider
  • விருப்பத்திற்கேற்ப Critical liness BenefitRider
  • விருப்பத்திற்கேற்ப Premium WaiverBenefit
  • கடன் வசதி உண்டு
  • காப்பீட்டுக் காலம் முழுவதும் போனஸ்
  • Dating Back வசதி உண்டு

ஜீவன் உமங் பாலிசி பெறுவதற்கான தகுதிகள் :

ஜீவன் உமங் குறைந்த பட்ச வயது :

  • 90 நாட்கள் (நிறைவு) முதல் 55 வயது (NBD) வரை

அதிக பட்ச வயது வரம்பு :

  • 55 வயது (NBD) – (பிரீமியம் செலுத்தும் காலம் 15 வருடங்கள்) + அதிகபட்ச வயது அனுமதி
  • 50 வயது (NBD) – (பிரீமியம் செலுத்தும் காலம் 20 வருடங்கள்)
  • 45 வயது (NBD) – (பிரீமியம் செலுத்தும் காலம் 25 வருடங்கள்)
  • 40 வயது (NBD) – (பிரீமியம் செலுத்தும் காலம் 30 வருடங்கள்

பிரிமியம் :

  • பிரீமியம் செலுத்தும் காலம் : 5, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள்
  • பிரீமியம் செலுத்தும் காலம் முடிவடைய குறைந்தபட்ச வயது : 30 வயது (NBD)
  • பிரீமியம் செலுத்தும் காலம் முடிவடைய அதிகபட்ச வயது : 70 வயது (NBD)
  • அதிகபட்ச முதிர்வு வயது : 100 வயது (NBD)
  • பாலிசி காலம் : (100 வயது – நுழைவு வயது அனுமதி) ஆண்டுகள்
  • அடிப்படை காப்புத் தொகை : குறைந்தது – 2,00,000; அதிகபட்சம் – வரம்பு இல்லை
  • Mode Rebate : ஆண்டு (2% Tabular Premium). அரையாண்டு (1% Tabular Premium)

காப்புத் தொகை சலுகை

  • 2 இலட்சம் முதல் 4.75 இலட்சம் வரை : பூஜ்யம்
  • 5 லட்சம் முதல் : 9.75 லட்சம் – அடிப்படை காப்புத்தொகையில் 1.25 சதவீதம்
  • 10 லட்சம் முதல் 24.75 லட்சம் : அடிப்படை காப்புத்தொகையில் 1.75 சதவீதம்
  • 25 இலட்சத்திற்கு மேல் : அடிப்படை காப்புத் தொகையில் 2.00 சதவீதம்

பாலிசியின் பயன்கள் :

வாழ்வு கால பயன் :

பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்த தேதியிலிருந்து 100 வயது வரை ஒவ்வொரு ஆண்டும் காப்புத் தொகையின் 8% வாழ்வு கால பயனாக வழங்கப்படும். முதல் வாழ்வு கால பயன் பிரீமியம் செலுத்தும் காலம் முடியும் தேதியில் வழங்கப்படும்.

முதிர்வு வாழ்வு கால பயன் : காப்புத் தொகை + போனஸ் + இறுமி கூடுதல் போனஸ்

இறப்புப் பயன் :

  • Risk தொடங்குவதற்கு முன் : செலுத்திய மொத்த பிரிமியம் திருப்பி வழங்கப்படும்.
  • Risk தொடங்கிய பின் : இறப்புக்கான காப்புத் தொகை + போனஸ் + இறுதி கூடுதல் போனஸ்

இறப்புக்கான காப்புத் தொகை என்பது அடிப்படை காப்புத் தொகை (அல்லத) ஆண்டு பிரீமியத்தின் 10 மடங்கு (அல்லது) இறந்த தேதி வரை செலுத்திய பிரீமியத்தின் 105% (Tax, Extra மற்றும் Rider Promium நீங்கலாக) இவற்றில் எது அதிகமோ அது வழங்கப்படும்.